சென்னையைச் சுற்றி 100 கிலோமீட்டருக்குள் சுற்றிப் பார்க்க எக்கச்சக்க இடம் இருக்கு. அதில் மிஸ் பண்ணக்கூடாத சில ஸ்பாட் இங்கே.
-
1 தடா அருவி
சென்னையிலிருந்து 92 கிலோமீட்டரில் ஆந்திராவில் இருக்கிறது தடா அருவி. காடு, மலை, அருவி என இயற்கையில் உங்களை நீங்களே ரீசார்ஜ் செய்துகொள்ள செம ஸ்பாட். ஆள் அரவமற்ற காட்டுக்குள் அருவிக் குளியல் அலாதி அனுபவம். அதே நேரத்தில் ரிஸ்க்கும் இருக்கிறது. குடும்பமாக செல்வதாக இருந்தால் யோசிக்கவும்.
-
2 காசி மேடு துறைமுகம்.
ரொம்ப தூரம்லாம் நமக்கு சரிப்படாது பிரதர். பக்கத்துக்குள்ள எதாவது வித்தியாசமான இடம் இருக்கா? என்று கேட்பவர்களுக்கு காசிமேடு துறைமுகம் க்விக் விசிட்டுக்கு பெஸ்ட் ஸ்பாட். ஞாயிறு அதிகாலை 2-3 மணிக்கு வந்தால் ஜே ஜே என்று இருக்கும். நூற்றுக்கணக்கான படகுகளிலிருந்து விதவிதமான மீன்கள் வந்து இறங்கும். சுடச்சுட பாயாசம் விற்பார்கள். குடித்துக்கொண்டே விடியும் வரை வேடிக்கை பார்த்துவிட்டு வரலாம்.
-
3 ஆலம்பரை கோட்டை
ஈசிஆர் ரோட்டில் மகாபலிபுரத்திலிருந்து 50 கிலோமீட்டரில் உள்ளது ஆலம்பரை கோட்டை. 17 ஆம் நூற்றாண்டில் முகலாயர்களால் கட்டப்பட்ட கோட்டை இப்போது சிதிலமடைந்துள்ளது. மூன்று பக்கமும் தண்ணீர் சூழ்ந்த இந்தக் கோட்டையிலிருந்து ஆறும் கடலும் இணையும் இடத்தை ரசிக்கலாம். ஈசிஆரில் லாங் ரைடு போவதற்கு சரியான ஸ்பாட்.
-
4 புலிகாட் ஏரி - பழவேற்காடு
சுற்றிலும் தண்ணீர், நடுவில் குட்டித்தீவு போன்ற அமைப்பு என பழவேற்காடு ஏரி கண்ணுக்கு விருந்து. தண்ணீர் மட்டுமல்ல எக்கச்சக்கமான பறவைகளையும் இங்கு பார்க்கலாம். சென்னையிலிருந்து 60 கிலோமீட்டரில் ஆந்திர எல்லையில் இருக்கிறது இந்த ஏரி.
-
5 நாகலாபுரம் - அர்ரே அருவி
ஒரு சண்டே காலையில் கிளம்பி நேரே ஆந்திர மாநிலம் சித்தூருக்கு வண்டியை விடுங்கள். நாகலாபுரத்தில் இருக்கிறது அர்ரே அருவி. அமைதியான இடம், ஆர்ப்பாட்டமில்லாத அருவி என 'வார்ரே வாவ்' சொல்ல வைக்கிறது அர்ரே. ஜில்லென்று ஒரு குளியலைப் போட்டால் அந்த எனர்ஜி ஒரு வாரத்திற்கு இருக்கும். பக்கத்திலேயே சத்திகூடு மடுகு, கைலாசகோனா அருவிகளுக்கு ஒரு விசிட் அடிக்கலாம்.
-
6 சட்ராஸ் கோட்டை
முன்னூறு ஆண்டுகள் பழமையான இந்தக் கோட்டை, டச்சு மக்களால் முத்து ஏற்றுமதிக்காகக் கட்டப்பட்டது. ஈசிஆர் வழியாகச் சென்றால் கல்பாக்கத்துக்கு அருகில் இருக்கிறது இந்த இடம். மணற்பாதைகளில் கோட்டைச் சுவர்களுக்கு நடுவே ராஜ நடை நடந்து ப்ரொஃபைல் பிக்சர் எடுத்துக்கொள்ளலாம்.
-
7 முட்டுக்காடு
குடும்பத்துடன் வீக் எண்டை செலவிட செமயான ஸ்பாட் முட்டுக்காடு படகு குழாம். சென்னை அடையாறில் இருந்து 25 கிலோமீட்டருக்குள் ஈசிஆரில் இருக்கிறது. படகில் ஏறி வங்கக் கடலில் ரவுண்ட் அடிக்கலாம். தமிழக அரசின் சுற்றுலாத் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இங்கு 36 வகையான படகுகள் இருக்கிறது. படகு சவாரி 5 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு ஃப்ரீ.
0 Comments