ஒரே நாளில் மொத்த ஊரையும் சுத்திடலாம்… இந்தியாவின் 7 அழகான நகரங்கள்!

ஒரே நாளில் மொத்த ஊரையும் பார்த்துவிடும் வகையில் அமையப்பெற்ற இந்தியாவின் 7 அழகான நகரங்களைப் பற்றிதான் இந்தக் கட்டுரையில் நாம பார்க்கப்போறோம்.

மதுரை

மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றி கட்டமைக்கப்பட்டிருக்கும் மதுரை நகரை ஒரே நாளில் நீங்கள் சுற்றிப் பார்த்துவிட முடியும். அதிகாலையில் விளக்கொளியில் மின்னும் தெப்பகுளத்தில் உங்கள் நாளை ரம்மியமாகத் தொடங்கலாம். சுடச்சுட கிடைக்கும் இட்லியைக் காலை உணவாக எடுத்துக்கொண்டு, மீனாட்சியம்மனை தரிசிக்கலாம். அங்கிருந்து காந்தி மியூசியம், திருப்பரங்குரன்றம் முருகன் கோயிலுக்கு விசிட் அடித்துவிட்டு வரலாம். அழகர் கோயில், பழமுதிர்சோலை கோயிலுக்கும் மறக்காம போய்ட்டு வாங்க. மாலையில், திருமலை நாயக்கர் மகாலில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஒளி அலங்காரத்தை ரசிக்கலாம்.

புதுச்சேரி

யூனியன்பிரதேசமான புதுச்சேரி அழகான கடற்கரைகளுக்கும், பிரெஞ்சு கட்டடக் கலை கட்டடங்களுக்காகப் புகழ்பெற்றது. நேர்த்தியான ஒழுங்கோடு கட்டப்பட்ட கட்டங்கள் சூழ அமைந்திருக்கும் Promenade கடற்கரையில் காலை வாக்கிங்கோடு உங்கள் நாளை அழகாகத் தொடங்கலாம். கட்டுப்படுத்தப்பட்ட டிராஃபிக்கில் உங்களுக்குப் பெரிதாக வாகனங்களின் தொல்லை இருக்காது. வொயிட் டவுன் பகுதியில் இருக்கும் காலனியாதிக்க கால கட்டடங்களைப் பார்வையிட்டு மதியப் பொழுதைக் கழிக்கலாம். அரவிந்தர் ஆசிரமம், Eglise De Notre Dame Des Anges மற்றும் The Basilica Of The Sacred Heart Of Jesus ஆலயங்கள் மனதுக்கு அமைதி தருவன. மாலையில், அழகான Serenity beach-க்கு ஒரு விசிட் அடித்துவிட்டு, இரவு உணவை பிரெஞ்சு ஸ்டைலில் முடிக்கலாம்.

ஆக்ரா, உத்தரப்பிரதேசம்

உலக அதிசயங்களுள் ஒன்றான தாஜ்மஹால் இருக்கும் நகரம். தாஜ்மஹாலைப் போலவே, அதைச் சுற்றிலும் இருக்கும் முகலாயர் கால கட்டடங்களும் பிரமிப்பைத் தருவன. அதிகாலை நேரத்தில் சூரிய ஒளியில் தாஜ்மஹாலைப் பார்த்து புதிய அனுபவத்தைக் கொடுக்கும். அங்கிருக்கும் தோட்டம், அருங்காட்சியகத்துக்கும் மறக்காம ஒரு ரவுண்ட் போய்ட்டு வாங்க. ஜஹாங்கீர் கோட்டை, Itimad-Ud-Daulah போன்ற இடங்களையும் உங்க பக்கெட் லிஸ்ட்ல வைசுக்கோங்க. அதேபோல், ஆக்ராவில் இருக்கும் யானைகள் பராமரிப்பு மையம், யானைகளின் வாழ்வியல் பற்றி உங்களுக்கு நிறைய புதுத்தகவல்களைக் கொடுக்கும்.

ஷில்லாங், மேகாலயா

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மேகாலயாவின் ஷில்லாங் நகரம், கிழக்கின் ஸ்காட்லாந்து என்று அழைக்கப்படுவது. வார்டு ஏரியில் காலையைத் தொடங்கலாம். அங்கு மீன்களுக்கு உணவளிப்பது புகழ்பெற்றது. படகுசவாரியோடு காலை உணவை முடிக்கலாம். அங்கிருந்து மெதுவாக நடந்து டான் பாஸ்கோ அருங்காட்சியகத்துக்குப் போனால், ஆங்கிலேயர் ஆட்சி தொடங்கி வடகிழக்கு மாநிலங்களின் பரிணாம வளர்ச்சியை வரலாற்றோடு அறிந்துகொள்ளலாம். போலீஸ் பஜாரில் ஷாப்பிங் செய்துவிட்டு, புகழ்பெற்ற யானை அருவிக்குப் போய் ஒரு குளியல் போடலாம். அங்கிருந்து புகழ்பெற்ற All Saints Cathedral-க்கு ஒரு விசிட் அடித்துவிட்டு, மாலையில் லைவ் மியூஸிக்கோடு Café Shillong-ல் சின்னதாக ஸ்நாக்ஸை முடிக்கலாம்.

டேராடூன், உத்தராகண்ட்

டேராடூன்

போர்டிங் ஸ்கூல்கள், பாரம்பரியமிக்க கட்டடங்களுக்காகப் புகழ்பெற்ற நகரம் டேராடூன். 1965-ல் கட்டப்பட்ட Mindrolling Monastery-யில் இருக்கும் உலகின் மிகப்பெரிய ஸ்தூபிக்களுள் ஒன்றை பார்த்து ரசிக்கலாம். ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் ஒளிந்துகொள்ளும் இடமாக இருந்த ராபர்ஸ் குகை, பிக்னிக், ஸ்பாட் விசிட் போன்றவைகளுக்கு சிறந்த இடம். அதேபோல், ஆங்கிலேய ஆட்சியில் கட்டப்பட்ட Forest Research Institute-க்கு ஒரு விசிட் அடித்து, அங்கிருக்கும் 5 அருங்காட்சியகங்களைக் கண்டுகளிக்கலாம். ஷாப்பிங்குக்கு ராஜ்பூர் ரோடு மார்க்கெட் சூப்பர் ஸ்பாட்.

உடுப்பி, கர்நாடகா

உடுப்பி
உடுப்பி

கர்நாடகத்தின் கடலோர நகரமான உடுப்பி, அதன் கடற்கரைகளுக்காகப் புகழ்பெற்றது. அதிகாலையில் ஸ்வர்ணா ஆற்றின் நீரோட்டத்தை ரசித்தபடியே உங்கள் நாளைத் தொடங்கலாம். மேப்பிள் பீச்சுக்குப் போவதற்கு முன், ஸ்வர்ணா ஆற்றில் kayaking அல்லது ரிவர் டிராஃப்ட் அனுபவத்தை மிஸ் பண்ணிடாதீங்க. அதேபோல், செயிண்ட் மேரிஸ் தீவு, காபு கலங்கரை விளக்கத்துக்கும் மறக்காம போய்ட்டு வாங்க.

கொச்சி, கேரளா

கொச்சி
கொச்சி

அரபிக் கடலின் கரையில் அமைந்திருக்கும் இரட்டை நகரங்களான கொச்சி, எர்ணாகுளம் கேரளாவின் முக்கியமான நகரம். இங்கிருக்கும் லூலூ மால், ஆசியாவின் மிகப்பெரிய மால்களில் ஒன்று. அதேபோல், கேரள கதகளி செண்டர், சோட்டாணிக்கரை பகவதி அம்மன் கோயில், மரைன் டிரைவ், எடப்பள்ளி சர்ச் காம்ப்ளக்ஸ், வைப்பீன் தீவு, கொச்சி கோட்டை கடற்கரை போன்றவை மிஸ் பண்ணக் கூடாத இடங்கள். அதேபோல், சீன முறைப்படி மீன் பிடிக்கும் இடத்தையும் கொச்சி கடற்கரையில் மிஸ் பண்ணாம பார்த்துடுங்க.

Also Read – அலைகளில் நடக்கலாம் வாங்க… அப்ளாஸ் அள்ளும் கேரளாவின் புதிய முயற்சி!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top