பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் தன்னுடைய 95-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். எலிசபெத்தின் கணவர் சிலநாள்களுக்கு முன்பு இறந்ததால் அவரது பிறந்தநாள் அரச முறைப்படி இல்லாமல் சாதாரணமான நாளாக கடக்க உள்ளது. கடந்த ஆண்டும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தன்னுடைய பிறந்தநாளை மிகவும் சாதாரணமாகக் கொண்டாடினார். அவரது பிறந்தநாளில் அவரைப் பற்றிய ஆச்சரியமான 11 விஷயங்கள் இங்கே…
-
1 பிரிட்டனில் மிக நீண்ட காலம் ஆட்சி செய்தவர் மகாராணி இரண்டாம் எலிசபெத்.
-
2 இங்கிலாந்தில் லைசன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்ட அனுமதிக்கப்பட்ட ஒரே நபர் இவர்தான்.
-
3 இரண்டு பிறந்தநாள்!
மகாராணி இரண்டாம் எலிசபெத், இரண்டு பிறந்தநாளைக் கொண்டாடுவர். ஒன்று - ஏப்ரல் மாதம் 21-ம் தேதி. மற்றொன்று ஜூன் மாத சனிக்கிழமை. வானிலை சிறப்பாக இருக்கும் நாளைப் பொறுத்து இந்த இரண்டாவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
-
4 ஆண்டுக்கு 70,000 லெட்டர்கள்!
மகாராணி இரண்டாம் எலிசபெத்துக்கு ஆண்டுக்கு 70,000 கடிதங்கள் வருமாம். அதாவது ஒரு நாளைக்கு 200 முதல் 300 கடிதங்கள்.
-
5 தன்னுடைய 6 வயதில் மகாராணி எலிசபெத், வீட்டின் உரிமையாளர் ஆனார்.
-
6 அபூர்வ பரிசுகள்!
குயின் எலிசபெத்திடம் ஒரு யானை, இரண்டு பெரிய ஆமைகள், ஒரு ஜேக்குவார், கார்கீஸ் வகை நாய்கள், குதிரைகள், மாடுகள் மற்றும் ஒரு ஜோடி ஸ்லோத்ஸ் என்ற விலங்குகள் உள்ளன. இவற்றில் பெரும்பான்மையானவை அவருக்கு பரிசாக கிடைத்தவை.
-
7 பாஸ்போர்ட் இல்லாமல் மகாராணி எலிசபெத் எல்லா நாடுகளுக்கும் சென்று வர முடியும்.
-
8 10,000 முத்துகள் கொண்ட ஆடை!
உலகப்போரின்போது வழங்கப்பட்ட ரேஷன் கூப்பன்களைப் பயன்படுத்தி தனது திருமணத்திற்கான ஆடையை எலிசபெத் வாங்கியுள்ளார். இந்த ஆடை 13 அடி நீளம் கொண்டது. சுமார் 10,000 முத்துகள் அமெரிக்காவில் இருந்து இந்த ஆடையை உருவாக்குவதற்காகவே இறக்குமதி செய்யப்பட்டன.
-
9 ஷாம்பைன்
மதிய உணவுக்கு முன் ஜின் அல்லது ஒயினை எடுத்துக் கொள்வது ராணி இரண்டாம் எலிசபெத்தின் வழக்கமாம். அதேபோல், இரவு உறங்கச் செல்லும் முன் ஷாம்பைன் ஒரு கப் எடுத்துக் கொள்வாராம்.
-
10 ஹேண்ட் பேக் சீக்ரெட்
குயின் எலிசபெத் தனது ஹேண்ட் பேக் இல்லாமல் எப்போதும் வெளியே செல்ல மாட்டாராம். ஹேண்ட் பேக்கை மேசையின் மீது வைத்தால் ஐந்து நிமிடங்களுக்குள் வெளியேற விரும்புவதாக அர்த்தமாம். அதுவே, ஹேண்ட் பேக்கை தரையில் வைத்தால் உரையாடலை விரும்பவில்லை என்று பொருள்.
-
11 இங்கிலாந்தில் மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலில் ராணி எலிசபெத்துக்கு இடம் இல்லை.
0 Comments