இந்தக் கொரோனா சூழல் வொர்க் ஃப்ரம் ஹோம் சூழ்நிலையை பலருக்குப் புதிதாக ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது. பார்க்கும் வேலையில் வேறுபாடு இல்லை என்றாலும், அலுவலகங்களில் வேலை பார்ப்பதற்கும், வீட்டிலிருந்தபடியே வேலை பார்ப்பதற்கும் நிறையவே வித்தியாசங்கள் இருக்கின்றன. வொர்க் ஃப்ரம் ஹோமில் உங்கள் புரடக்டிவிட்டியை நீங்கள் அதிகரிப்பதற்கும், மிகவும் என்ஜாய் பண்ணி வேலையைப் பார்க்கவும் 5 டிப்ஸ் உங்களுக்காக…
Also Read: Who is Kavya Maran?
-
1 நாளை சிறப்பாகத் தொடங்குங்கள்
காலை எழுந்தவுடன் சோசியல் மீடியாக்களில் சிறிதுநேரம் உலவிவிட்டு அந்த நாளைத் தொடங்கும் பழக்கம் இருப்பவரா நீங்கள்? வொர்க் ஃப்ரம் ஹோம் நாட்களில் நிச்சயம் மாற்ற வேண்டிய பழக்கம் இது. சோசியல் மீடியாக்களில் இருக்கும் அதீதமான தேவையற்ற தகவல்கள் உங்கள் மூளையைச் சோர்வடையச் செய்யலாம். மாறாக உங்கள் நாளை ஃப்ரெஷ்ஷாகத் தொடங்குங்கள். உங்களுக்குப் பிடித்தமான வேலையோடு, உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்வு தரும் யோகா உள்ளிட்ட விஷயங்களில் கவனம் செலுத்தலாம்.
-
2 வொர்க் ஸ்பேஸ்
நீங்கள் வேலை பார்க்கும் இடம் சுத்தமாக இருப்பது, உங்களுக்கு ஒருவிதமான புத்துணர்வைக் கொடுக்கும் என்கிறார்கள் மனநல நிபுணர்கள். அந்தவகையில், வொர்க் ஃப்ரம் ஹோமில் நீங்கள் வேலை பார்க்கும் இடம் சுத்தமாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். தேவையில்லாத குப்பைகளை அண்டவிடாமல் இருப்பது, உங்கள் உடல்நலனுக்கும் நல்லது பாஸ்.
-
3 ஒரு நேரத்தில் ஒரு வேலை
நீங்கள் மல்டி டாஸ்கிங் பெர்சனாலிட்டியாக இருந்தாலும், வொர்க் ஃப்ரம் ஹோமில் ஒரு நேரத்தில் ஒரு வேலையைச் செய்வது என திட்டமிட்டு, அதற்கேற்ப செயல்படுங்கள். ஒருவர், தனது எண்ணங்களிலேயே 47% நேரத்தைச் செலவிடுவதாகச் சொல்கிறது ஒரு ஆய்வு. அதேபோல், மல்டி டாஸ்கிங் உங்களை எந்தவொரு வேலையையும் முழுமையாகச் செய்து முடிக்க விடாத சூழலிலும் கொண்டுபோய் விட வாய்ப்பு இருக்கிறது. வொர்க் ஃப்ரம் ஹோமில் இருக்கும்போது ஒரு நேரத்தில் ஒரு வேலையைத் திட்டமிட்டுச் செய்வது, உங்கள் புரடக்டிவிட்டியை அதிகரிப்பதுடன், ஓவர் திங்கிங்கிலிருந்தும் நீங்கள் தூரமாக இருக்க உதவும்.
-
4 அவசரம் வேண்டாம்
எந்தவொரு வேலையிலும் நிதானமாக உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். சாப்பிடுவது, வேலை செய்வது என வொர்க் ஃப்ரம் ஹோம் நாட்களில் எதிலும் அவசரம் காட்டாமல், கேட்கும் விஷயங்களையும் கவனமாக அட்டண்டிவ்வாகக் கேட்டுகொள்வது, வேலையை எளிதாக முடிக்க உதவும். ஸ்லோ பேஸில் நிதானமாக வேலை செய்வது, உங்களை வேலையை நீங்கள் ரசித்து செய்து முடிக்க உதவும். இது உங்கள் புரடக்டிவிட்டியையும் அதிகரிக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
-
5 லவ் யுவர்செல்ஃப்
உங்கள் மனதில் வெறுமையையும், உடலில் சோர்வையும் சேரவிடாமல் இருக்க கொஞ்சம் அன்பை உங்களுக்கு நீங்களே கொடுத்துக் கொள்ளுங்கள். தினசரி வொர்க் அவுட், யோகா போன்றவை மகிழ்ச்சிக்குக் காரணமாக எண்டார்பின் எனும் ஹார்மோனை ரிலீஸ் செய்ய உதவும். இதனால், புத்துணர்ச்சியாக உணர முடியும். உங்கள் மனதுக்கு நெருக்கமானவர்களோடு நேரம் செலவிடுங்கள். பிரேக் எடுத்துக் கொண்டு எனெர்ஜிட்டிக்காக வேலையைத் தொடருங்கள். ஒவ்வொரு நாள் முடிவிலும் எடுக்கும் ரெஸ்ட் ரொம்பவே முக்கியமானது பாஸ்... வொர்க் ஃப்ரம் ஹோமில் கலக்குங்கள்!
0 Comments