7 மில்லியன் சப்ஸ்கிரைபர்களுடன் வில்லேஜ் குக்கிங் சேனல் தமிழகத்தில் மிகவும் பிரபலம். அந்த சேனலில் ஸ்பெஷல் கெஸ்ட்டாக ராகுல் காந்தி கலந்துகொண்டதுதான் இணையம் எங்கும் இப்போது வைரல். ராகுல் காந்தி அவர்களுடன் மிக இயல்பாக உரையாடியது, சமைக்க உதவியது, சேர்ந்து சாப்பிட்டது என யூ-டியூபை கலக்கி வருகிறது இந்த வீடியோ. ராகுல் காந்தியின் வில்லேஜ் குக்கிங் சேனல் விசிட்டின் 7 ‘வாவ்’ மொமண்ட்ஸ் இதோ.
-
1
தேசிய அளவில் மிகப்பெரிய தலைவர் என்ற எந்த பிம்பமும் இல்லாமல், அந்த கிராமத்தினருடன் இயல்பாக அவர் பழகிய விதம் ரசிக்கும் படியாக இருந்தது. ஓலைப்பாயில் சம்மணமிட்டு அமர்ந்து கொண்டு "அப்பறம் அடுத்து என்ன பிளான்?" என்ற அவரது தோரணை, நம்ம ஊர் கல்யாண வீடுகளில் சமையல் நடக்கும்போது ஒரு க்ரூப் சைடில் சீட்டு விளையாடிக்கொண்டிருக்கும் காட்சியை நினைவுபடுத்தியது.
-
2
சமையலில் ஒவ்வொரு இன்கிரிடியண்ட் சேர்க்கும்போதும் அதைக் கத்தி சொல்லும் அவர்களின் ஸ்டைல்தான் வில்லேஜ் குக்கிங் சேனலின் அடையாளம். அதையே ராகுல்காந்தியும் செய்ததுதான் இன்னொரு க்யூட் மொமண்ட். நடுவில் நானும் சமைப்பேன் என்று ஆச்சர்யப்படுத்தினார் ராகுல்.
-
3
ராகுல் ஆங்கிலத்தில் பேசியதை தமிழில் மொழிபெயர்த்துச் சொல்லிக் கொண்டிருந்தார் ஜோதிமணி. ஒரு இடத்தில் அவர்களிடம் ஆங்கிலத்திலேயே சொன்னார். ராகுலே 'தமிழ்ல சொல்லுங்க' என்று சொல்ல ஜோதிமணி அதை உணர்ந்து சிரித்தது செம ஜாலி மொமண்ட்.
-
4
வெளிநாட்டிற்கு போய் சமைக்க வேண்டும் என்று சொன்னவரிடம் உடனடியாக எனக்குத் தெரிஞ்ச ஒருத்தர் அமெரிக்காவில் இருக்காரு. அவர்கிட்ட சொல்லி ஏற்பாடு பண்றேன் என்று சொல்லி அவர்களை உற்சாகமாக்கியது.
-
5
"நாங்க உங்க சேனலோட ஃபேன்" என்று அவர்களை ஆச்சர்யப்படுத்தினார் ராகுல். பதிலுக்கு அவர்களும் "இந்திரா காந்தியோட பேரனை சந்திச்சது ரொம்ப சந்தோசம்" என்று ராகுலை நெகிழ்வாக்கினார்கள்.
-
6
தம்ப்நெய்ல் போட்டோவுக்கு போஸ் கொடுக்கும்போது அருகிலிருந்தவரை கலாய்த்துக்கொண்டிருந்தார் ராகுல். இதற்கும் இணையத்தில் 'ஜாலியான ஆளா இருக்காருப்பா' என்று ஹார்ட்டீன்கள் பறந்தது.
-
7
'சப்ஸ்கிரைபரை கூப்பிட்டு விருந்து வைக்கலாம்னு ஒரு ப்ளான் இருக்கு' என்று அவர்கள் சொல்ல 'அப்போ என்னையும் கூப்பிடுங்க' என்றார் இயல்பாக. அதோடு 'அடுத்தமுறை வரும்போது ஈசல் சமைச்சுக் கொடுங்க' என்று உரிமையாக கேட்டதும் ஸ்பெஷல் மொமண்ட்ஸ்.
-
8
இது போன்ற குட்டி குட்டி மொமண்ட்ஸ் நிறைய இருந்தாலும் இந்த வீடியோ இணையத்தில் வைரலாக ஒரு சீக்ரெட் இன்கிரிடியண்ட் சொல்லவேண்டுமென்றால் அது ராகுலின் எளிமை. நல்லவேளையாக கடைசியில் 'வில்லேஜ் குக்கிங் சேனலுக்கு லைக், கமெண்ட், சப்ஸ்கிரைப் பண்ணுங்க' என்று சொல்லாமல் விட்டார்.
0 Comments