ஸ்மார்ட் போன் வாங்குறப்போ கேமரா நல்லா இருக்கா, சார்ஜ் நிக்குமானு பார்த்துப் பார்த்து வாங்குவோம். ஆனா வாங்குனப்பறம் அதை சரியா மெயிண்டெயின் பண்றதுக்கு அவ்வளவா மெனக்கெட மாட்டோம். சமயங்கள்ல நாம கவனிக்காம விடுற சில சின்ன விஷயங்கள்தான் பெரிய பாதிப்ப ஏற்படுத்திடும். பிரச்னை வந்தப்பறம் ‘ச்சே இதை அப்பவே கவனிச்சிருக்கலாமே’னு ஃபீல் பண்றதுக்கு பதிலா, ஒரு செக்லிஸ்ட் வச்சி அப்பப்போ சரியா இருக்கானு செக் பண்ணிக்குறதுதான் புத்திசாலித்தனம். அப்படி ஒரு செக் லிஸ்ட்தான் இது.
-
1 டேட்டா சிக்கனம். தேவை இக்கணம்.
இன்னைக்கு எல்லாரும் 24 மணி நேரமும் டேட்டாவை ஆன்ல தான் வச்சிருக்கோம். எந்தெந்த ஆப் அதிகமா டேட்டா குடிக்குதுனு செட்டிங்க்ஸ்ல போய் அப்பப்போ செக் பண்ணிக்கோங்க. உங்களுக்கு தெரியாம எதாவது ஆப் அதிகமான டேட்டா எடுத்தா உடனே என்னனு பாருங்க. வாட்ஸப்ல மீடியா ஆட்டோ டவுன்லோட் Mode ல இருந்தா உங்களுக்கு யாரு என்ன போட்டோ/வீடியோ அனுப்பினாலும் ஆட்டோமேட்டிக்கா டவுன்லோடு ஆகிடும். இதனால உங்களுக்கு டேட்டாவும் வீணாகும். ஸ்பேஸூம் வீணாகும். அதனால வாட்ஸப்ல Auto Download ஆஃப் பண்ணி வைங்க.
-
2 தேவையில்லாத ஆப்ஸ்க்கு டாட்டா!
உங்க மொபைல்ல என்னென்ன ஆப் இருக்குங்குறதையும் அப்பப்போ செக் பண்ணுங்க. ஒரு வாரத்துக்கு மேல எதாவது ஆப் பயன்படுத்தாம இருந்தீங்கன்னா உடனே டெலிட் பண்ணிடுங்க. எல்லா ஆப்பையும் அப்பப்போ அப்டேட் பண்ணுங்க. நிறைய நாள் அப்டேட் ஆகாம இருக்குற ஆப்லாம் பயன்படுத்தணுமானு யோசிங்க.
-
3 பெர்மிசன் தேவையா?
அதே போல ஒரு ஆப் இன்ஸ்டால் பண்ணும்போது கேமரா, லொக்கேசன். கால் ஹிஸ்டரினு நிறைய பெர்மிசன் கேக்கும். அந்த ஆப்க்கு அந்த பெர்மிசன் நிச்சயம் தேவைனா மட்டும் Allow குடுங்க. லோக்கேசன் அக்ஸஸ் ஆப் ஓபன்ல இருக்கும்போது மட்டும் Allow பண்ற மாதிரி set பண்ணிக்கோங்க. அதனால தேவையில்லாத நேரங்கள்ல அந்த ஆப் உங்க லொக்கேசனை Access பண்ண முடியாது.
-
4 லொக்கேசன் ஜாக்கிரதை
வைஃபை, ப்ளூடூத், ஹாட்ஸ்பாட், லொக்கேசன் இதெல்லாம் எப்பவும் ஆன்ல வச்சிக்காதீங்க. குறிப்பா எந்தெந்த ஆப்லாம் உங்க லொக்கேசனை பயன்படுத்துதுனு செக் பண்ணுங்க. தேவையில்லாத ஆப் எதுவும் இருந்தா உடனே Access ரிமூவ் பண்ணுங்க.
-
5 தூண்டில் போடும் நோட்டிபிகேசன்ஸ்
அடிக்கடி நம்மளை மொபைலை ஓபன் பண்ண வைக்கிற தூண்டில், நோட்டிபிகேசன்தான். நீங்க மிஸ் பண்ணக்கூடாத நோட்டிபிகேசன்ஸ் எதுனு உங்களுக்கே தெரியும். உதாரணத்துக்கு வாட்ஸப், மெயில். இது தவிர மீதி ஆப்களோட நோட்டிபிகேசன்களை ஆஃப் பண்ணுங்க. குறிப்பா நீங்க டைம்பாஸ்க்காக வச்சிருக்குற ஆப். வாட்ஸப்ல கூட தேவையில்லாத க்ரூப் நோட்டிபிகேசன்களை ஆஃப் பண்ணுங்க. ஒருநாளைக்கு எந்தெந்த ஆப் உங்களுக்கு எவ்வளவு நோட்டிபிகேசன் அனுப்புதுனு செட்டிங்ஸ்லயே பார்க்க முடியும்.
-
6 பேக்கப் வச்சிக்கிறது பெட்டர்.
உங்க கேலரியை அடிக்கடி செக் பண்ணி தேவையில்லாத படங்கள், வீடியோக்களை அழிச்சுடுங்க. கூகுள் ஃபோட்டோஸ்ல Cloud பேக்கப் எடுத்து வச்சிக்கிறதால உங்களோட முக்கியமான போட்டோக்களை மிஸ் பண்ணாம இருக்கலாம்.
-
7 எந்த ஆப்? எவ்வளவு நேரம்?
உங்க மொபைல்ல ஸ்க்ரீன்டைம் ஆப்சன் இருந்தா அதை அடிக்கடி செக் பண்ணுங்க. இல்லைனா அதற்கான ஆப்ஸ் நிறையவே இருக்கு. கண்டிப்பா இன்ஸ்டால் பண்ணிடுங்க. ஒருநாளைக்கு மொபைலை எவ்வளவு நேரம் பயன்படுத்துறீங்க.. எந்தெந்த ஆப்ல எவ்வளவு நேரம் பயன்படுத்துறீங்கனு அது சொல்லும். இந்த ஆப்ல இவ்வளவு நேரம் டைம் செலவழிக்கிறது சரியானு யோசிங்க.
0 Comments