வாழ்க்கையில் எல்லாருக்கும் காதல் இருக்குதோ இல்லையோ.. ஆனால், க்ரஷ் கண்டிப்பா இருக்கும். இன்றைய சூழலில் அந்த க்ரஷ் சினிமா, யூ டியூப் மற்றும் டிக் டாக் பிரபலங்களாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். அப்படி காலேஜ் பெண்களின் மனதில் இடம்பிடித்திருக்கும் க்ரஷ் லிஸ்ட் இதோ…
Also Read : மேஷம் முதல் மீனம்… வார ராசி பலன் ஜூன் 07-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை..!
-
1 அர்ஜூன் தாஸ்
கைதி, மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்த அர்ஜூன் தாஸ்க்கு காலேஜ் பெண்களின் ஃபேன்பேஸ் மிகவும் அதிகம். அவரது கெத்தான குரலுக்கே அவ்வளவு ஃபேன்ஸ் இருக்காங்க.
-
2 அதர்வா
பானா காத்தாடி திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான அதர்வாக்கு பெண்களின் ஃபேன்பேஸ் அதிகம். குருதி ஆட்டம், தள்ளிப்போகாதே, ஒத்தைக்கு ஒத்தைனு பல படங்கள்ல கமிட் ஆகி நடிச்சிட்டு இருக்காரு. இடையில் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான போதை கோதை ஆல்பம் பாடலும் பெரிய ஹிட்.
-
3 கவின்
சரவணன் மீனாட்சி சீரியல் வழியாக வேட்டையனாக பெண்களின் மனதில் இடம்பிடித்த கவின் பிக் பாஸ் சீசன் 3 வழியாக அந்த இடத்தை தக்க வச்சுக்கிட்டாரு. சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான அஸ்க் மாரோ, இன்னா மைலு போன்ற பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன.
-
4 முகேன் ராவ்
பிக் பாஸ் சீசன் 3 வழியாக ஃபேமஸானவர்களில் முகேன் ராவும் ஒருவர். `சத்தியமா நான் சொல்லுறண்டி’ என்ற இவரது பாடல் காலேஜ் பெண்களின் ஆல் டைம் ஃபேவரைட். பிக் பாஸ்க்கு அப்புறமா இவரது பாடல்களும் அதிக அளவில் கவனம் பெற்று வருகின்றன.
-
5 கார்த்திக்
கனா காணும் காலங்களில் அறிமுகமாக கார்த்திக் ராஜ் ஆஃபிஸ் சீரியல் வழியாக காலேஜ் பெண்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தைப் பிடித்தார். தற்போது செம்பருத்தி சீரியல் வழியாகவும் பரவலாகக் கவனத்தைப் பெற்றுள்ளார். திரைப்படங்கள், வெப் சீரிஸ், குறும்படங்கள் போன்றவற்றிலும் நடித்துள்ளார்.
-
6 அஸ்வின்
குக் வித் கோமாளி வழியாக தனிக்கென தனி ஃபேன் பேஸை அஸ்வின் உருவாக்கியுள்ளார். அந்த ஃபேன் பேஸில் பெண்கள்தான் மிகவும் அதிகம். சமீபத்தில் வெளியான குட்டி பட்டாஸ் பாடல் மிகப்பெரிய ஹிட். இதனைத் தொடர்ந்து வெளியான கிரிமினல் க்ரஷ் மற்றும் லோனர் ஆகிய பாடல்களும் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளன. எனை நோக்கி பாயும் தோட்டா, ஓகே கண்மணி போன்ற திரைப்படங்களிலும் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து பல திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
-
7 ஸ்ரீராம்
வேற யாரும் இல்லங்க.. மைக் செட் ஓனர் ஸ்ரீராம்தான். இவருக்கு பெண்கள் ஃபேன்ஸ் அதிகம்னு சொல்லித் தெரிய வேண்டியதில்லை. என்ன டாபிக்ல வீடியோ போட்டாலும் யூ டியூபில் டிரெண்டிங்கில் இவரது வீடியோ வந்துடும். இவரோட டைமிங் சென்ஸ், காமெடி சென்ஸ், குட்டி குட்டி ரியாக்ஷன் எல்லாத்துக்கும் பெண்கள் ஃபேன்பேஸை சேமிச்சு வச்சிருக்காரு.
-
8 என்.பி
நரேந்திர பிரசாத் என்கிற என்.பி நடித்த பார்த்த ஞாபகம் இல்லையோ எபிசோடுகள் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றன. இதனைத் தொடர்ந்து பல வீடியோக்களில் சைட் கேரக்டராகவும் லீட் கேரக்டராகவும் நடித்தார். கடைசியில் ஆகா கல்யாணம் வழியாக மொத்த பெண்கள் ஃபேன் பேஸையும் தன் பக்கம் ஈர்த்தார்.
-
9 டீஜே
அசுரன் படம் வழியா நடிப்பால பலரையும் கவர்ந்த டீஜே அருணாச்சலத்துக்கு பெண்கள் ஃபேன்ஸ் ரொம்பவே அதிகம். முட்டு முட்டு ஆல்பம் பாடல் மூலம் தனக்கென தனி பெண்கள் ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிய டீஜே தொடர்ந்து ஆசை, பொம்மை உள்ளிட்ட பல பாடல்களை வெளியிட்டு தனது ரசிகர் பட்டாளத்தை தக்க வைத்துக்கொண்டுள்ளார்.
-
10 சாம் விஷால்
சூப்பர் சிங்கர் வழியாக பெண் ரசிகர்கள் பலரை இவர் ஈர்த்திருக்காரு. இவரோட வாய்ஸ்க்கு அவ்வளவு ஃபேன்ஸ் இருக்காங்க. சூப்பர் சிங்கர் செட்ல இருக்குறவங்களுக்குகூட இவரை ரொம்ப புடிக்கும்னா பார்த்துக்கோங்களே!
-
11 பி.டி.எஸ்
உலகையே கலக்குற பி.டி.எஸ் குழுவுக்கு தமிழ்நாட்டுல நிறைய பெண்கள் ஃபேன்பேஸ் இருக்கு. பெரும்பான்மையான காலேஜ் பெண்களின் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்களை பார்த்தா இவங்களோட பாடல்கள்தான் இருக்கும். அவ்வளவு தூரம் இவங்க மேல பயித்தியமா இருக்காங்க. இவ்வளவு ஃபேன்கள் இருக்குறதுக்கும் வொர்த்தான ஆளுங்கதான் இவங்களும். கடைசியா வெளியான பட்டர் பாடல் இன்னும் பல சாதனைகளை படைச்சிட்டு வருதுனா பார்த்துக்கோங்க!
0 Comments