நமது அன்றாட வாழ்க்கையில் தினசரி செய்து வரும் சில விஷயங்கள், அவை சட்டவிரோதம் என்பது தெரியாமலேயே நாம் செய்துகொண்டிருக்கிறோம். அப்படி டெய்லி ரொட்டீன்ல இருக்க 5 சட்டவிரோத விஷயங்களைப் பட்டியலிட்டிருக்கிறோம்.
பட்டம் விடுவது
போலீஸாரிடம் உரிய அனுமதி பெறாமல் பட்டம் விடுவது சட்டப்படி குற்றமாகும். இந்திய விமானச் சட்டம் 1934-ன் கீழ் அது தடை செய்யப்பட்டதாகும். விமானங்களுக்குப் பறக்க அனுமதி கொடுக்கும் சட்டப்பிரிவு இதுவாகும். அதேபோன்று ஒரு அனுமதி இருந்தால் மட்டுமே நீங்கள் பட்டம் பறக்க விட முடியும்.
மீம் உருவாக்குவது
காப்பி ரைட்டட் கண்டெண்டுகளைப் பயன்படுத்துவது சட்டவிரோதமாகும். ஆன்லைனில் வைரலாகும் பெரும்பாலான மீம்களில் காப்பி ரைட்டட் போட்டோ அல்லது வீடியோக்களே பயன்படுத்தப்படுகின்றன. அதனால், இப்படியான மீம்களை உருவாக்குவதும் அதைப் பகிர்வதும் சட்டப்படி குற்றமாகும்.
டோரண்ட் பயன்பாடு
உங்கள் விருப்பமான படங்கள் அல்லது வெப் சீரிஸ்களை டோரண்ட் தளங்களில் இருந்து டவுன்லோடு செய்து பார்ப்பவரா நீங்கள்? ஆம், என்றால் நிச்சயம் நீங்கள் செய்வது சட்டவிரோதமாகும். சட்டப்படி ஒரு படம் அல்லது வெப் சீரிஸை பணம் கட்டாமல் ஆன்லைனில் நீங்கள் பார்க்கமுடியாது.
ஃபேக் ஐடி
ஆன்லைனில் உண்மையான அடையாளத்தை மறைத்து பொய்யான தகவல்கள் மூலம் புரஃபைலை உருவாக்குவது சட்டவிரோதமாகும். அப்படிப் பார்த்தால், நம்மில் பலருக்கு ஃபேஸ்புக் தொடங்கி இன்ஸ்டா, ட்விட்டர் என பல சமூக வலைதளங்களில் ஃபேக் ஐடிக்கள் இருக்கும். இதுவும் சட்டவிரோதமே.
சப்ஸ்கிரிப்ஷன் பாஸ்வேர்டுகளை ஷேர் செய்வது
நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ போன்ற ஸ்ட்ரீமிங் தளங்களில் கணக்கு வைத்திருக்கும் நாம், அதை குடும்பத்தினர், நண்பர்களுக்கு ஷேர் செய்வதுண்டு. அந்த நிறுவனங்களின் சட்டப்படி தனிநபர் கணக்கு என்பது தனி நபர் ஒருவருக்கானது. அதன் பாஸ்வேர்டுகளை ஷேர் செய்வது குற்றமாகும்.
Also Read – சுஷில் குமார் முதல் மைக்கேல் பெல்ப்ஸ் வரை… வழக்குகளில் சிக்கிய 5 ஒலிம்பிக் மெடலிஸ்ட்!