rajendra balaji

இப்படிலாமா சொன்னாங்க… தேர்தல் குபீர் வைரல்கள்!

தமிழகத் தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது. வாக்குகளைக் கவர கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் இலவசங்கள் தெறிக்கின்றன. அதேபோல், பிரசாரங்களின்போது நமது தமிழக அரசியல்வாதிகள் பேசிய வார்த்தைகள் இவை.

  • ஊர்ந்து சென்றல்ல; நடந்து சென்றுதான் முதலமைச்சர் பதவி ஏற்றேன் – எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளர்
  • விலையில்லா வாஷிங்மெஷின் வருவதால் இனி இல்லத்தரசிகளுக்குத் துணிகளை அடித்துத் துவைத்து அலுத்துப்போக தேவை இருக்காது – ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர்

  • ஸ்டாலின் அறிவித்து இருக்கும் தேர்தல் அறிக்கை எல்லாம் சீனி சக்கர சித்தப்பா, ஏட்டில் எழுதி நக்கப்பா என்று தான் இருக்கிறது… ஏமாற்றி பிழைக்கிற கூட்டம் தி.மு.க கூட்டம். உழைத்து பிழைக்கிற கூட்டம் அண்ணா தி.மு.க கூட்டம் – ராஜேந்திர பாலாஜி, ராஜபாளையம் அ.தி.மு.க வேட்பாளர்
  • காவிரிக் கரையில் பிரிந்து காவிரி மருத்துவமனையில் உயிர் பிரியும் வரை காவிரிக்காகக் குரல் கொடுத்தவர் கருணாநிதி; அவதூறு செய்தால் நாக்கு அழுகிவிடும் – மு.க.ஸ்டாலின், தி.மு.க தலைவர்
  • தி.மு.க ஆட்சி அமைந்து முதல்வராக ஸ்டாலின் 11 மணிக்குப் பதவியேற்றால், 11.05-க்கு மாட்டுவண்டிகளை ஆற்றுக்கு விடுங்கள். மணல் அள்ளுவதை யாரும் தடுக்க மாட்டார்கள் – செந்தில் பாலாஜி, கரூர் தி.மு.க வேட்பாளர்.
  • நடிகர் ரஜினிகாந்தின் ஆதரவு எப்போதும் எனக்குண்டு – ஆயிரம் விளக்கு தொகுதி பா.ஜ.க வேட்பாளர் குஷ்பு
  • தேர்தலுக்கு பின்னர் அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் 100 நாட்களில் அனைவரின் வீடு தேடி வாஷிங்மெஷின் வரும். எனவே, வீடுகளில் அதற்கான பிளக் பாய்ண்ட் அமைத்து தயாராக வைத்து கொள்ளுங்கள் – கடம்பூர் ராஜூ, கோவில்பட்டி தொகுதி அ.தி.மு.க வேட்பாளர்
  • 234 தொகுதிகளிலும் மக்களுக்குத் தெரிந்த முகமாக நான் இருக்கிறேன் – கமல்ஹாசன், ம.நீ.ம கட்சித் தலைவர்
  • விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிடாமலிருக்க என்னை ரூ.10 கோடிக்கு விலை பேசினார்கள் – ம.நீ.ம வேட்பாளர் கவிஞர் சினேகன்
  • அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா செனட்டராக இருந்தபோது அவர் அடிக்கடி தொகுதிக்குச் செல்வார். அதன் பிறகு வாரம் ஒருமுறையாவது தனது தொகுதிக்கு வருகிற அரசியல்வாதி இருக்கிறாரென்றால் அது மு.க.ஸ்டாலின்தான் – வைகோ, ம.தி.மு.க பொதுச்செயலாளர்.
  • தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் அராஜகம் நடக்கும். என் உறவினர் நிலத்தை தி.மு.க.வினர் மிரட்டி அபகரித்தனர் – அன்புமணி ராமதாஸ், பா.ம.க
  • கொரோனா காலகட்டம் என்பதால் தொண்டர்கள் தடுத்து நிறுத்தப்படுகிறார்கள். அதனால், மே 2-ம் தேதி தேர்தல் முடிவு அன்று எங்களுடைய எழுச்சி தெரியும் – பிரேமலதா, தே.மு.தி.க பொருளாளர்
  • அ.ம.மு.க பற்றி கேள்விகேட்டால் அடித்து விடுவேன் – ராஜேந்திர பாலாஜி, ராஜபாளையம் அ.தி.மு.க வேட்பாளர்
  • வீட்டிலுள்ள தாய்மார்கள், வீட்டுக்காரர் வெளியூர் போயிருக்காருன்னு கவலையேபடாதீர்கள். 1,500 ரூபாய் ஒன்றாம் தேதியானால் உங்கள் குடும்பத் தலைவியின் கணக்குக்கு வந்துவிடும் – திண்டுக்கல் சீனிவாசன்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top