அமரர் கல்கி எழுதின மாஸ்டர் பீஸ் நாவல் `பொன்னியின் செல்வன்’. சோழகுல வரலாற்றில் புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவரான ராஜராஜ சோழன் அரியணை ஏறுவதற்கு முந்தைய பின்னணியை மையமா வைச்சு கற்பனை கலந்து எழுதப்பட்டிருக்கும் இந்த புதினம், தமிழ் நாவல் வரலாற்றில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்துனது. கிட்டத்தட்ட பல தசாப்தங்களா விற்பனையில் முக்கியமான இடத்தைப் பிடிச்சிருக்கும் இந்த நாவலோட கேரக்டர்களை நம்ம பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்துற ஒரு சின்ன முயற்சிதான் இது. ‘பொன்னியின் செல்வன் – கதை நாயகர்கள்’ங்குற இந்த சின்ன சீரீஸோட முதல் எபிசோடுல நாம பார்க்கப்போறது நாவலோட ஹீரோ வல்லவரையன் வந்தியத்தேவனோட கேரக்டரைப் பத்திதான்…

டிஸ்கிளைமர் – நண்பர்களே இது கல்கியோட பொன்னியின் செல்வன் நாவலை விமர்சிக்குற அல்லது எடைபோடுற முயற்சி கிடையாது. அந்த நாவலைப் படிக்கிறப்போ நான் உணர்ந்த அல்லது என்னால் புரிந்துகொண்ட அளவில் அதிலிருக்கும் ஒவ்வொரு கேரக்டர்களைப் பத்தியான ஒரு சின்ன உரையாடல்தான். அதேமாதிரி, மணிரத்னம் இயக்கியிருக்கும் பொன்னியின் செல்வன் படம் இந்த நாவலை அடிப்படையாக வைச்சுதான் உருவாக்கப்பட்டிருக்கு. அதனால, இந்த ஸ்டோரில அந்தப் படத்தோட சில ஸ்பாய்லர்கள் இருக்கவும் வாய்ப்பிருக்கு. சோ, படத்துல பார்த்துத் தெரிஞ்சுக்கிறேன்னு சொல்றவங்க Skip பண்ணிடுங்க.
யார் இந்த வந்தியத்தேவன்?
பொன்னியின் செல்வன் நாவலோட கதையே வந்தியத் தேவன் பயணத்தில் இருந்துதான் தொடங்கும். காஞ்சிபுரத்துல இருக்க இளவரசர் ஆதித்த கரிகாலர், தஞ்சாவூர்ல இருக்க தன்னோட தந்தை சுந்தர சோழருக்கும் பழையாறை சகோதரி குந்தவை தேவிக்கும் அவரிடம் ரகசியமாக ஓலை கொடுத்து அனுப்புவார். தொண்டை மண்டலத்தில் அவரோட பயணம் தொடங்குனாலும், வீர நாராயண ஏரிக்கரையில்தான் கல்கி அவரை நமக்கு அறிமுகப்படுத்துவார்.
கல்கியோட கூற்றுப்படி அவர் பழமையான வாணர் குலம் என்றழைக்கப்படும் சிற்றரசர் குலத்தைச் சேர்ந்தவர். வல்லம் என்கிற பகுதியை ஆண்டு வந்ததால் அவர்களை வல்லத்து அரசர்கள் என்றும் குறிப்பிடுகிறார். அவருடைய முன்னோர்கள் வீரத்தில் சிறந்து விளங்கியவர்கள் என்றும் தகவல் அளிக்கிறார். ஆனால், அவருடைய பெற்றோர்கள் பற்றியோ, உடன் பிறந்தவர்கள் பற்றியோ வேறு எந்த தகவலும் நாவலில் இடம்பெறவில்லை.
வந்தியத்தேவன் பயணம்
நாவல் முழுவதுமே வந்தியத்தேவனின் பயணம் முக்கியத்துவம் வாய்ந்தது. காஞ்சிபுரத்தில் இருந்து தஞ்சாவூர் செல்லும் வழியில், நண்பன் கந்தமாறனின் சம்புவரையர் மாளிகையில் தங்கும் வந்தியத்தேவன், மதுராந்தகரை அரியணையில் அமர்த்த பழுவேட்டரையர் தலைமையில் நடக்கும் சதியாலோசனையைத் தற்செயலாகக் கேட்டறிகிறான். இடையில், சோழ அரசின் அமைச்சர் அநிருத்த பிரமாயரின் ஒற்றன் ஆழ்வார்க்கடியனை சந்தித்து, அவன் மூலம் அவனது சகோதரியும் பழுவேட்டரையரின் மனைவியுமான நந்தினியைச் சந்திக்கும் வாய்ப்பைப் பெறுகிறார். அவர் கொடுக்கும் பனைமர முத்திரை சின்னத்தை தஞ்சை அரண்மனைக்குள் நுழையப் பயன்படுத்திக் கொள்ளும் வந்தியத்தேவன், ஒரு வழியாக சுந்தர சோழரை சந்தித்து ஓலையைக் கொடுக்கிறான். அங்கிருந்து பழையாறை சென்று குந்தவை தேவியிடம் அவருக்கான சேதியைச் சொல்லி ஓலையைக் கொடுத்ததும், அவர் இலங்கைக்குப் பயணம் செல்லுமாறு பணிக்கிறார்.

அதை ஏற்று கோடியக்கரை வழியாக படகோட்டிப் பெண் பூங்குழலியின் உதவியோடு இலங்கை செல்லும் அவன், ஆழ்வார்க்கடியான் உதவியோடு இளவரசர் அருள்மொழி வர்மரை சந்திக்கிறார். இலங்கையிலிருந்து படகில் திரும்புகையில் புயலில் அருள்மொழியோடு வந்தியத்தேவனும் சிக்கி மீள்கிறார்கள். ஆனால், அப்போது உடல்நலமில்லாமல் போகும் இளவரசரை பூங்குழலியோடு சேர்ந்து நாகை சூடாமணி விஹாரத்தில் சேர்க்கிறார். இந்த செய்தியை பழையாறை சென்று குந்தவை தேவியிடம் சொல்கிறான் வந்தியத்தேவன். அதே சமயத்தில் கடம்பூர் சம்புவரையர் மாளிகைக்கு ஆதித்த கரிகாலன் செல்ல இருக்கும் சேதி தெரிந்து, அவரை அங்குபோகாமல் தடுக்க வந்தியத்தேவனையே குந்தவை அனுப்புகிறார். அது முடியாமல் போகவே, சம்புவரையர் மாளிகையில் பட்டத்து இளவரசர் ஆதித்த கரிகாலன் கொல்லப்படுகிறார். கொலைப்பழியும் வந்தியத் தேவன் மீது விழுகிறது. சிறையில் அடைக்கப்படும் வந்தியத்தேவன், ஒரு கட்டத்தில் அங்கிருந்து தப்புகிறார். பின்னர், பழையாறை அரண்மனையில் ஆற்றில் குதிக்கும் கந்தன்மாறனின் சகோதரி மணிமேகலையை காப்பாற்றுகிறார். வந்தியத்தேவன்பால் தூய அன்பு கொண்டிருந்த மணிமேகலை, இறுதியில் அவர் மடியிலேயே உயிரை விடுவார். பழுவேட்டரையரால் கொலைப்பழியில் இருந்து தப்பும் வந்தியத் தேவன், அருள்மொழி வர்மரின் ஆசைக்கிணங்க மதுராந்தகருக்கு முடிசூட்ட உதவுவான். இறுதியில், தான் மனம் கவர்ந்த சோழகுல இளவரசியும் அருள்மொழியின் சகோதரியுமான குந்தவையை மணந்துகொள்வார்.

இப்படியாக பொன்னியின் செல்வன் நாவலின் முதல் அத்தியாயமான ’ஆடித்திருநாள்’ தொடங்கி ஐந்தாம் பாகத்தின் இறுதியில் வரும் 84-வது அத்தியாயமான `தியாக சிகரம்’ வரை வந்தியத்தேவன் நீக்கமற நிறைந்திருப்பார். பொன்னியின் செல்வன் வாசகர்களின் மனம் கவர்ந்த கேரக்டர்களுள் வந்தியத்தேவன் முதன்மையானவர். சோழ இளவரசரின் பெயரைத் தாங்கி நிற்கும் பொன்னியின் செல்வன் நாவலின் உண்மையான கதாநாயகன் வந்தியத்தேவன்தான். வாழ்நாளில் இவ்வளவு பயங்கரமான சிக்கல்கள் ஏற்பட்டு, அதிலிருந்து தப்ப வந்தியத்தேவனால்தான் முடியும் என்று வாசகர்களை ஆழமாக நம்பவைத்திருப்பார் கல்கி. அந்த அளவுக்குத் தமிழ் இலக்கிய வரலாற்றில் சாகாவரம் பெற்றது வந்தியத்தேவன் கேரக்டர்.
வந்தியத்தேவனுக்கு அடுத்து பொன்னியின் செல்வனோட எந்த கேரக்டரைப் பத்தி பாக்கலாம்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க!
Nandhini
Ampalakararanaiyum vanthiyan listla join panni utungada