ரன்வீர் சிங் (கபில் தேவ்) தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் 1983-ல் நடந்த உலகக் கோப்பை தொடரில் விளையாடியது. வீரர்களுக்கே நம்பிக்கை இல்லாமல் ரிட்டர்ன் டிக்கெட்டை ஃபைனல் மேட்சுக்கு முன்பே முன்பதிவு செய்துவிடுகின்றனர். ஆனால், விளையாடிய முதல் இரண்டு மேட்சுகளையும் சிறப்பாய் வெல்கிறது இந்திய அணி. வென்றும் இவர்களுக்கு தாங்கள் ஃபைனல் ஆடப்போகிறோம் என்ற நம்பிக்கையே ஏற்படாது. கபில் தேவ் மட்டும் விடாமுயற்சியோடு போராடி, வீரர்களை ஊக்கப்படுத்திக்கொண்டே இருப்பார். போதாக்குறைக்கு அங்கிருக்கும் மீடியாக்களும் இந்திய அணி போராடி பெற்ற வெற்றியை ‘குத்துமதிப்பான வெற்றி’ என்ற ஹெட்லைன்ஸோடு நியூஸ் போட்டுக்கொண்டிருக்கும். இவ்வளவு அவமானங்களுக்கு மத்தியில் ஃபைனலை வென்ற இந்திய அணியின் பாதையைப் படமாக பேசியிருக்கிறது 83.
0 Comments