* அஜித்தின் திரைமொழி ரசிகர்களை உற்சாகப்படுத்தும். மாஸான ஓபனிங் சீன், அப்பப்போ பில்டப், எதிர்களுக்கு சவால் விடுவது என போன படத்தில் மிஸ் ஆன அத்தனைக்கும் சேர்த்து இந்த படத்தில் கொடுத்திருக்கிறார். பைக் சேஸிங், வீலிங் பண்ணுவது, பைக்கில் பறந்து பறந்து வில்லன்களை பொளக்கும்போதெல்லாம் கூஸ்பம்ப் நிச்சயம்.
* படத்தின் வில்லன்களான ‘Satan Slave’ குரூப் எவ்வளவு வலிமையானவர்கள் என்பதைக் காட்டும் கொலை, கொள்ளைக் காட்சிகள் அதன் கொடூரத்தன்மை குறையாமல் காட்டியிருப்பது பதைபதைப்பைத் தருகிறது. அதுவே கதையோடு ஒன்றக் காரணமாக இருக்கிறது. த்ரில்லுக்கு பலம் சேர்த்தது நீரவ் ஷாவின் கேமரா.
* பரபர ஆக்சன் காட்சிகள் படத்தின் செம்ம ப்ளஸ். குறிப்பாக இடைவேளைக்கு முன்பு வரும் பைக் சேஸிங், இடைவேளைக்குப் பிறகு வரும் பஸ் சேஸிங் இரண்டும் ரசிகர்களின் இத்தனை வருடக் காத்திருப்புக்கு செம தீனியாக இருக்கும். ஸ்டண்ட் டைரக்டர் திலீப் சுப்பராயனுக்கும் எடிட்டர் விஜய் வேலுக்குட்டிக்கும் சபாஷ்!
* வில்லன் போடும் திட்டங்களை ஹீரோ எப்படி முறியடிக்கிறார் என்ற வழக்கமான திருடன் – போலீஸ் விளையாட்டில் ஆங்காங்கே வரும் குட்டி குட்டி சர்ப்ரைஸ்கள் ரசிக்க வைக்கின்றன.
0 Comments