தொன்று தொட்டு கதை எழுதி இயக்கி வரும் அதே டெய்லர் அதே வாடகை டைஃப் ஆஃப் கதைதான் அண்ணாத்த. தங்கச்சி சென்டிமென்டில் வேதாளம் கணேஷ், கொல்கத்தா சென்று போராடும் விஸ்வாசம் தூக்குதுரை என இவர் பட யுனிவர்ஸுக்குள்ளே சுற்றி தூக்கு கணேஷாக அண்ணாத்த கதாபாத்திரத்தை உருவாக்கியிருக்கிறார். இதில் இன்னும் சற்று பின்னோக்கி சென்று திருப்பாச்சி படத்தில் இருந்து சில சென்டிமென்ட் விஷயங்களையும் எடுத்திருக்கிறார்.
ஒரு கட்டத்தில் படம் செம போர் அடிக்கிறது. அண்ணனுக்கு தங்கச்சியையும், தங்கச்சிக்கு அண்ணனையும் எவ்வளவு பிடித்திருக்கிறது என்பது பார்வையாளர்களுக்கு புரிந்துவிட்டது. இதை நிமிடத்திற்கு நிமிடம் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை சிவா சாரே. காட்சிகள், பாசங்கள் ஒரு பக்கம் என்றால் பாடல்கள் இன்னொரு பக்கம் காதுகளை கிழிக்கிறது.
கமர்ஷியல் படங்களில் லாஜிக் மீறல்கள் கண்ணாமூச்சி விளையாடும் என்றாலும் அது ஓவர் டோஸ் ஆகி விளையாட்டு என்கிற பெயரில் மொத்த உடலையும் மூடிவிட்டது போல் தோன்றியது. நின்றால் பாடல், நடந்தால் பாடல், ஓடினால் பாடல் என மூச்சுக்கு முன்னூறு பாடல்கள் வந்துகொண்டே இருக்கிறது.
படத்தில் நடித்தவர்களின் லிஸ்ட்டை பட்டியலிட்டால் அண்ணா யுனிவர்சிட்டி எக்ஸாம் எழுதுவது போல் பக்கம் பக்கமாய் போகிறது. ரஜினி, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, பிரகாஷ் ராஜ், மீனா, குஷ்பு, பாண்டியராஜ், லிவிங்ஸ்டன், ஜகபதி பாபு, சூரி, சதீஷ், சத்யன், அபிமன்யூ சிங், ஜார்ஜ் மரியன், ரெடின் என எக்கச்சக்க ஆர்டிஸ்ட்கள். டீ சொல்வது போல் கால்ஷீட் வாங்கியிருக்கிறார்கள் போல. இத்தனை கதாபாத்திரங்கள் ஏன் என்ற கேள்வி வராமல் இல்லை. இவ்வளவு ஏன். நயன்தாராவே படத்திற்கு என்ன அவசியம் என்று தெரியவில்லை.
சிவா அவருக்கான ஃபார்முலாவை வடிவமைத்து அதே டிராக்கில் பயணிக்கிறார். அதைப் பார்க்கவும் ரசிகர்கள் தயாராக இருக்கிறார்கள்தான். ஆனால் அது எக்ஸ்ட்ரா டோஸ் ஆகி பார்க்கும் நம்மை கிரங்கடிக்கிரது. `ஷுகர் பேஷன்ட் சார் நாங்க’ என்ற ரேஞ்சில் அடிக்கடி ஆனது.
0 Comments