• Spartans-ஐ தொடர்ந்து Army! – Army of dead, Army of thieves பார்க்கலாமா வேண்டாமா?!

  One Line

  லாஸ் வேகாஸில் ஜாம்பீக்கள் சூழ்ந்திருக்கும் பகுதியில் உயர் தர லாக் போடப்பட்ட பெட்டகத்தை மீட்டு பணத்தை திருட ஒரு டீம் செல்கிறது. இதுதான் Army of Dead சீரிஸின் ஒன்லைன். அதன் ப்ரீக்வெலாக அந்த உயர் தர லாக் போடப்பட்ட பெட்டகத்தை திறக்கும் புத்திசாலி Safe cracker செபாஸ்டீனின் கதையை சொல்கிறது Army of thieves.

  Streaming Link

  Story Line

  ஒரு நாள் திடீரென லாஸ் வேகாஸ் மொத்தமும் ஜாம்பீக்கள் ஆட்கொண்டுவிடுகிறது. மனித நடமாட்டமே இல்லாத அந்த ஊரில் சிலர் மட்டும் உயிர் பிழைத்து தடையெழுப்பி வாழ்ந்து வருகிறார்கள். அதில் நம் ஹீரோ ஸ்காட்டும் (பட்டீஸ்ட்டா) ஒருவர். ஒரு நாள் டனக்கா என்பவர் ஸ்காட்டுக்கு ஒரு அசைன்மென்ட் கொடுக்கிறார். அது என்னவென்றால் ஜாம்பீக்களுக்கு மத்தியில் இருக்கும் பில்டிங்கில் பல மில்லியன் பணம் ஒரு பெட்டகத்தில் இருக்கிறது. அதை எடுத்து வந்தால் இவருக்கும் ஷேர் தருவதாக சொல்கிறார். அங்கு சூழ்ந்திருக்கும் ஜாம்பீக்கள் சாதரண ஜாம்பீக்கள் கிடையாது. மிகவும் மோசமான, வேகமான, ரோசமான ஜாம்பீக்கள். அதற்காக ஒவ்வொரு டிபார்ட்மென்டிலும் ஸ்பெஷலிட்டுகளை ஒன்றிணைத்து டீம் ஃபார்ம் செய்கிறார் ஸ்காட். இதற்கு நடுவே மகளோடும் சில பல பஞ்சாயத்துகள் நடக்கிறது. இதையெல்லாம் சமாளித்து அந்த பெட்டகத்தை எடுத்து வருகிறாரா என்பதுதான் மீதிக்கதை.

  ஸ்காட் ஃபார்ம் செய்த டீமில் லூட்விக் டீட்டர் என்பவரும் இணைவார். அவர் இது போன்ற பெட்டகத்தின் இதயத் துடிப்பை உணர்ந்து திறப்பதில் கில்லி. அவரது கதையை ஆர்மி ஆஃப் தீவ்ஸ் என்று வெளிட்டார்கள் இதன் கிரியேட்டர்கள். அந்தப் படம் மொத்தமும் இவரைச் சுற்றியேதான் இருக்கும். ஒரு சீரிஸ் பார்ப்பது போல் ஒரே ஸ்ட்ரெச்சில் இந்த இரண்டு படங்களையும் பார்த்துவிடலாம். ஆக, இதுதான் இவ்விரு படங்களின் ஒன்லைன்.

  WoW Moments 🤩

  • இரண்டு பாகங்களையும் ஒப்பிட்டுப் பார்க்கையில் இரண்டாம் பாகம்தான் அதிக மார்க் பெருகிறது. காரணம், ஆர்மி ஆஃப் தீவ்ஸ் படத்தில் அந்த பெட்டகத்தின் வகையறா, வரலாறு என பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொண்டு எடுக்கப்பட்டிருக்கிறது. அதற்கான நியாயமான நடிப்பையும் வெளிப்படுத்தியிருக்கிறார் கதாநாயகன் மாத்தியஸ். இவரேதான் படத்தின் இயக்குநரும்கூட. எமோஷன், பரபரப்போடு சேர்த்து இவருக்கு காமெடியும் ஜஸ்ட் லைக் தட் வருகிறது. படம் பார்த்து முடித்த பிறகு இவருக்கு கட்டாயம் ஃபேன் ஆகிவிடுவீர்கள்.
  • நம்முடைய நாஸ்டால்ஜியா நாயகன் பட்டீஸ்ட்டா இதன் முதல் பாகத்தில் நடித்திருக்கிறார். சிறு வயது மல்யுத்தத்தில் பார்த்தைவிட பல மடங்கு பெரிதாக இருந்தார். இவரின் மிடுக்கான உடலுக்கு ஏற்ப ஆக்‌ஷன் காட்சிகளும் இடம்பெற்றிருந்தது. ஒரு சின்ன ஏக்கம் முதல் பாகத்தின் க்ளைமாக்ஸில் அந்த ஜாம்பீ வில்லனுடன் இவர் நேரடியாக சண்டையிட்டு ஜெயித்திருக்கலாம். சண்டை வரும் என எதிர்பார்த்திருந்த நேரத்தில் பொசுக்கென்று முடிந்துவிட்டது. இரண்டு பாகங்களிலும் நடிகர்கள் கொஞ்சம்கூட பிசிறு தட்டாமல் நடித்திருந்தார்கள்.
  • இரண்டாவது பாகத்தில் ஆக்‌ஷன், சென்டிமென்ட், காமெடி என எல்லாமே கலந்துகட்டி இடம்பெற்றிருந்தது. 300 பருத்தி வீரர்கள் படத்தில் ஆரம்பித்து மேன் ஆஃப் ஸ்டீல், ஜஸ்டிஸ் லீக் போன்ற முக்கியமான படங்களை இயக்கிய ஸாக் ஸ்னைடர்தான் இதை இயக்கியுள்ளார். என்ன ஒரு சோகம் முன்பே சொன்னது போல் முதல் பாகத்தைவிட இரண்டாவது பாகம் சிறப்பாக அமைந்திருந்தது. ஆனால், முதல் பாகத்தைத்தான் ஸாக் இயக்கியுள்ளார்.
  • இரண்டிலும் விஷுவல் ஒன்றுக்கு ஒன்று சலைத்தது இல்லை. ஜாம்பீக்கள் அவ்வளவு தத்ரூபமாக இருந்தது. போக வைரஸால் பாதிக்கப்பட்ட புலி ஒன்று ஜாம்பீயாக மாறியிருக்கும் அதையெல்லாம் பார்க்கும்போது பக்கத்தில் இருந்து மிரட்டுவது போலவே இருந்தது. இரண்டாவது பாகம் அப்படியே நேரெதிரான திரைக்கதை. பக்கா ஹெய்ஸ்ட் ஜானர் படம். அதற்குத் தேவையான விஷுவலும் படத்தில் அமைந்திருந்தது.

  AWW Moments 😫

  • முதல் பாகத்தின் கதைக்கும் ஆக்‌ஷனுக்கு நிறைய ஸ்கோப்பும், ஸ்பேஸும் இருந்தது. அதையெல்லாம் பயன்படுத்தி எடுத்திருந்தால் இரண்டாம் பாகத்தை அடித்து தூக்கியிருக்கும். ஆக்‌ஷன் காட்சிகளும் முழுக்க தூப்பாக்கி சூட்டிலே கடத்திவிட்டார்கள். ஜாம்பீ, பரபரப்பு, பயம் என்ற எதையும் கடத்தாமல் ரொம்பவே ஃப்ளாட்டான ஒரு ஸ்க்ரீன்ப்ளேவாக இருந்தது.
  • இரண்டாம் பாகத்தின் ட்விஸ்ட் எளிதில் கணிக்கக்கூடியதாக இருந்தது. அதையெல்லாம் கொஞ்சம் மாற்றியமைத்து திரைக்கதை எழுதியிருந்தால் அந்த ஜானருக்கான நியாயத்தை படம் செய்திருக்கும்.
  • ஹீரோ பெட்டகத்தை திறக்கும்போது விஷுவலையும் அந்த மெக்கானிஸத்தையும் இன்னுமே பிரமாண்டமாக செய்திருக்கலாம். அவர் பெட்டகத்தை திறக்கும்போதெல்லாம் ஒரே மாதிரியான விஷுவலும் மைண்ட் செட்டும் இருந்ததுபோல் தெரிந்தது.

  Verdict

  ஆவரேஜான ஒரு ரோலர் கோஸ்டர் ரைடுக்கு கட்டாயம் இரண்டும் படங்களையும் பார்க்கலாம்.

  Similar Movies to Watch

  • Finch
  • Kate
  • Nightbooks

  Rating

  Direction

  3/5

  Casting

  4/5

  Music

  4/5

  Screenplay

  3/5

  Editing

  3/5

  Overall Rating

  3.5/5