`உட்கார்ந்து பேசியிருக்கலாம் பேச்சிலரே!’ – GVP-யின் `Bachelor’ பார்க்கலாமா, வேண்டாமா?!

One Line

அரண்மனைக் கிளி, அலைபாயுதே தொடங்கி அர்ஜுன் ரெட்டி, பியார் ப்ரேமா காதல் என பல காதல் படங்களைப் பார்த்துவிட்டடோம். அந்த வகையில் பேச்சிலர் படமும் லிஸ்டில் இணைகிறது.

Streaming Link

Theater

Story Line

கோயம்புத்தூரில் இருந்து பெங்களூர் வந்து, ‘கும்பலாக சுத்துவோம் நாங்க ஐடி கம்பெனியில சேருவோம்’ என நண்பர்கள் வட்டம் அனைவரும் ஒரே ஐடி கம்பெனியில் வேலை பார்க்கிறார்கள். அதில் நம் நாயகன் டார்லிங்கும் (ஜி.வி.பிரகாஷ்) ஒருவர். அந்த வட்டத்துக்கே அண்ணனாகச் செயல்படுபவர் பக்ஸ் (பகவதி பெருமாள்). அனைவரையும் சீனியர் என்ற முறையில் புத்திமதி சொல்லி பார்த்துக் கொள்கிறார். ஒரு நாள் கொட்டும் மழையில் வழக்கமான ஸ்லோ மோஷனில் பட்டாம்பூச்சி பறக்க நாயகி சுப்புவை (திவ்யபாரதி) சந்திக்கிறார் டார்லிங். பின் எதிர்பார்த்ததுபோல் நாயகியும் நாயகனும் காதல் வயப்பட, இருவரும் லிவ்வினில் ஒரே வீட்டில் உறவாட, எதிர்பாராத ஒரு விஷயம் நடக்க, கடைசியில் சண்டை சச்சரவில் போய் முடிகிறது இவர்களின் ரிலேஷன்ஷிப். அது சரியானதா, இல்லையா என்பதுதான் பேச்சிலரின் கதை.

WoW Moments 🤩

  • படத்திற்கு A சர்டிஃபிகேட் என்பதால் அடல்ட் ஒன்லி காமெடிகளில் பட்டையைக் கிளப்பும் சுதந்திரம் இயக்குநருக்கு கிடைத்துவிட்டது. அந்த சுதந்திரம் கெட்டுவிடாமல் சரியான மீட்டரில் அதை பயன்படுத்தி பல இடங்களில் ஏ ஜோக்குகளை சரமாரியாக போட்டு தாக்கியுள்ளார். அரங்கமும் சிரிப்பால் நிறைகிறது.
  • நாயகி திவ்யபாரதிக்கு இது முதல் படம். படத்தில் இவர் கதாபாத்திரம்தான் பிரதானம். க்ளைமாக்ஸில் அவர் செய்யும் ஒரு செயலுக்குத்தான் மொத்த படத்தையும் எடுத்திருக்கிறார் இயக்குநர் சதீஷ் செல்வகுமார். இதை உணர்ந்து படம் முழுக்க அதை நன்றாகவே கடத்த முயற்சி செய்திருக்கிறார் திவ்யபாரதி. ஒரு சில இடங்களில் ஜி.வி பிரகாஷ் நம்மைக் கவர்கிறார். படத்தின் சர்ப்ரைஸாக வருவது மிஷ்கினின் என்ட்ரி. வழக்கமான டார்க் ஹ்யூமரை அவரது ஸ்டைலிலே வெடிக்க செய்துவிட்டு போனார்.
  • தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம். டார்லிங் – சுப்பு காதல், சண்டை காட்சியில் ஆரம்பித்து தோப்புக்குள் கிரிக்கெட் விளையாடும்போது தேனீ துரத்தும் காட்சி வரை அபார உழைப்பை கொட்டியிருக்கிறார் தேனி ஈஸ்வர். படத்தின் கலர்களும் அவ்வளவு அழகாக அமைந்திருந்தது.

AWW Moments 😫

  • படத்தின் தாக்கத்தை பார்வையாளர்கள் எப்போதோ உணர்ந்துவிட்டார்கள். அதை அப்படியே தக்க வைத்து படத்தை முடித்திருக்கலாம். ஆனால் அதுதான் நடக்கவில்லை. ஒரு கட்டம் வரை ரசிக்கப்பட்ட காமெடி காட்சிகளே ரொம்ப நீ….ளமான ஃபீலைக் கொடுத்தது
  • பின்னணி இசையின் ஸ்ட்ரிங்ஸில் அங்கமாலி டைரீஸ், பிரேமம் என இரு படங்களின் ரிதம்களும் ஒலித்தது. சீரியலில் வருவது போல் ‘இவருக்கு பதில் இவர்’ என்ற எஃபெக்ட்டை கொடுத்தது. இசையை பொறுத்தவரை பல பேர் இந்த படத்திற்காக வேலை பார்த்திருக்கிறார்கள். ஒருவராவது ஃப்ரெஷ்ஷாக இசைத்திருக்கலாம். பாடல்கள் கவர்ந்தாலும் பின்னணி இசை எங்கோ கேட்டது போலத்தான் இருந்தது.
  • ரிலேஷன்ஷிப்பில் இருக்கும்போது எதிர்பாராத சமயத்தில் இருவருக்கும் சண்டை ஏற்படுவது எல்லோருக்கும் நிகழும்தான். அந்த சமயத்தில் ஏற்படும் Spur of moment-ல் மாறி மாறி வார்த்தைகளை விடுவதும் வழக்கம்தான். ஆனால் அதைத் தாண்டி அந்த பிரச்னைக்கு என்ன தீர்வு என்று Sort பண்ணுவதில்தானே இருக்கிறது லவ்வுக்கும் லஸ்ட்டுக்குமான வித்தியாசம். சடசடவென படத்தின் திசை மாறி எங்கெங்கோ எங்கெங்கோ பயணிப்பது, இயக்குநர், ‘நான் இதையும் சொல்வேன் அதையும் சொல்வேன்’ என்று சொன்னது போல இருந்தது.

Verdict

உட்கார்ந்து பேசியிருந்தால் பேச்சிலருக்குத் தீர்வு கிடைத்திருக்கும்.

Similar Movies to Watch

  • Arjun reddy
  • Isapde Rajavum Idhayaraniyum

Rating

Direction

3/5

Casting

3/5

Music

3/5

Screenplay

3/5

Editing

3/5

Overall Rating

3/5