மனிதர்களின் வன்முறை ஓகே; ஆனால்?! – ‘பூமிகா’ பார்க்கலாமா… வேண்டாமா.?

One Line

மனிதர்கள் பூமி மீது நிகழ்த்தும் வன்முறையை பேய் கதை கலந்து சொல்லியிருக்கிறது `பூமிகா’.

Streaming Link

Story Line

ஊட்டிக்கு அருகே 10 ஆண்டுகளாக மனித நடமாட்டமே இல்லாத இடத்தை வைத்து வியாபாரம் பார்க்க நினைக்கிறார் கௌதம் (விது). இதற்காக தனது மனைவி சம்யுக்தா (ஐஷ்வர்யா ராஜேஷ்), மகன், தங்கை மாதூரி, தோழி சூர்யா என இந்த ஐந்து பேரும் அந்த இடத்திற்கு செல்கிறார்கள். இவர்களோடு சேர்த்து பணியாளாக பாவெல் நவகீதனும் அங்கு செல்கிறார். போன இடத்தில் சில பல அமானுஷ்யங்கள் நடக்க, இதற்கெல்லாம் காரணமாக பூமிகா (அவந்திகா) என்ற ஒரு பெயர் வருகிறது. எதற்காக பூமிகா இப்படி செய்கிறார், அவருக்கு நேர்ந்த சோகம் என்ன என்பதை பேசும் படமே  `பூமிகா’.

WoW Moments 🤩

  • படத்தின் இயக்குநர் ரதீந்திரன், பூமிகா கதாபாத்திரத்திற்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுத்து எடுத்திருக்கிறார். பூமிகாவாக நடித்த அவந்திகா அதைப் புரிந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். பூமிகா ஓவியக் கலையில் சிறந்து விளங்குபவர் என்பதை போகின்ற போக்கில் காட்டாமல் அதை இயற்கையோடு ஒன்றிணைத்து அவர் வரையும் ஓவியங்களின் வாயிலாகவும் உணர்த்தியிருக்கிறார் இயக்குநர்.
  • அடுத்ததாக பாவெல் தனது சிறந்த நடிப்பின் மூலம் அந்தக் கதாபாத்திரத்தை மெருகேற்றி இருக்கிறார். பிரத்யேகமான ஒரு ஸ்லாங்கில் தனது தாத்தா கதையை சொல்லும் இடம் பெரிய தாக்கத்தை உண்டாக்குகிறது. சிந்திக்க வைக்கும் பல வசனங்களை இவர்தான் பேசுகிறார்.
  • பூமி மீது மனிதர்கள் நிகழ்த்தும் வன்முறையையும், அதை அழிக்க நாம் செய்யும் காரியங்களையும் இயக்குநர் ரதீந்திரன் பேச நினைத்ததற்காகவே அவருக்கு பாராட்டுகள். மலையும், மலை சார்ந்த இடங்களுமாக படத்தில் விஷுவல் ஒவ்வொன்றும் அட்டகாசமாக இருக்கிறது. ராபர்டோ ஜஸாராவின் கேமரா படத்திற்கு பெரிய பலமாக அமைந்துள்ளது. 

AWW Moments 😫

  • ஆரம்பத்தில் ஏனோதானோ என்று நகரும் கதை, கடைசி 20 நிமிடங்களில்தான் சூடுபிடிக்கிறது. இதுவே பெரிய மைனஸாக தெரிகிறது. இயக்குநரின் இந்த முயற்சி பாராட்டுக்குரியதாக இருந்தாலும் கதை சொல்வதற்காக எடுத்துக்கொண்ட நேரம் ரொம்பவே நீளம். வழக்கமான க்ளிஷே ஹாரர் காட்சிகளில் ஆரம்பித்து பேய் படத்தில் நாம் பார்த்து புளித்த அனைத்து விஷயங்களும் இதில் இருக்கிறது. ஆனால், கதைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் போனதால் படமாக முழுமை பெறவில்லை.
  • நடிப்பாக பார்த்தாலும் அவந்திகா, பாவெல் கதாபாத்திரத்தைத் தவிர யாருக்குமே பெரியளவில் ஸ்கோப் இல்லை. படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த விதுவுக்கு இதுதான் அறிமுகம். படத்தின் போக்கிற்கு ஏற்ப நடித்திருக்கிறாரே தவிர ஹைலைட் செய்து சொல்லும் அளவிற்கு ஒன்றும் இல்லை.
  • இவரைத் தவிர மாதூரியின் நடிப்பு ஒரு வித கடுப்பைத்தான் ஏற்படுத்துகிறது. போனில் மெசேஜ் டோன் வரும்போதெல்லாம் கத்துகிறாரே தவிர நடிப்பு கடுகளவு கூட வெளிவரவில்லை. படத்தில் ஐஷ்வர்யா ராஜேஷிற்கும் வழக்கமான ஒரு ரோல்தான். அதை அவரது ஸ்டைலுக்கு ஏற்ப செய்திருக்கிறார். விதுவின் தோழியாக நடித்த சூர்யாவும் ஓகே ரக நடிப்புதான்.
  • இயற்கை காட்சிகளின் விஷுவல்கள் வரும்போதெல்லாம் ப்ருத்வி சந்திரசேகரின் சவுண்ட் ட்ராக் பின்னணியில் ஒட்டாமல் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

Verdict

பாதி பேய் கதை, பாதி சொல்ல வந்த கதையாக எடுத்திருந்தால் இது ஒரு வழக்கமான பேய் படத்தில் இருந்து தனித்து தெரிந்திருக்கும்.

Similar Movies to Watch

  • Aval
  • Game over

Rating

Direction

3/5

Casting

2.5/5

Music

2/5

Screenplay

2.5/5

Editing

2.5/5

Overall Rating

2.5/5