`கதை மட்டும் போதுமா; திரைக்கதை வேண்டாமா?’ சித்திரை செவ்வானம் பார்க்கலாமா, வேண்டாமா?

One Line

மருத்துவ வசதிகள் இல்லாத தனது ஊரைக் காக்க மகளை டாக்டருக்குப் படிக்க வைக்கிறார் அப்பா. ஆனால், நீட் எக்ஸாமுக்குத் தயாராகிக் கொண்டிருக்கும் அவரது வாழ்க்கையில் அசம்பாவிதம் ஒன்று நிகழ, அதற்கு நியாயம் தேடி ஓடும் தந்தையின் கதைதான் சித்திரை செவ்வானம்.

Streaming Link

https://www.zee5.com/movies/details/chithirai-sevvaanam/0-0-1z548461

Story Line

தமிழ் சினிமாவின் முக்கிய ஸ்டன்ட் மாஸ்டர்களில் ஒருவரான சில்வாவின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம்தான் இது. பொள்ளாச்சியில் நிகழ்ந்த தமிழகத்தையே உலுக்கிய பாலியல் சம்பவத்தை மையமாக கொண்டுதான் படத்தின் கதையை வடிவமைத்திருக்கிறார் விஜய். அதற்கு ஸ்க்ரின்ப்ளே எழுதி முதன் முதலாக இயக்குநராக அவதாரம் எடுத்திருக்கிறார் ஸ்டன்ட் சில்வா.

அரசம்பாளையம் ஊரில் விவாசயம் செய்து வருபவர் முத்துப் பாண்டி (சமுத்திரக்கனி). அவரது பாசமகள் ஐஸ்வர்யா (பூஜா கண்ணன்). தனது மனைவி கரன்ட் ஷாக் அடித்து, மருத்துவ வசதிகள் இல்லாத காரணத்தினால் இறந்துவிட, மகள் ஐஸ்வர்யாவை டாக்டராக்கி ஊருக்கே இலவச வைத்தியம் பார்க்க வைக்க எண்ணுகிறார். தனது லட்சியக் கனவை ஐஸ்வர்யாவிடம் சொல்கிறார். ப்ளஸ் 2-வில் மாவட்ட முதல் இடம் வாங்கும் ஐஸ்வர்யாவுக்கு அடுத்ததாக நீட் என்ற சவால் வருகிறது. அதைப் படிக்க ஹாஸ்டலில் சேரும் ஐஸ்வர்யாவின் வாழ்க்கையில் திடுக்கிடும் சம்பவம் ஒன்று நிகழ்வதோடு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார், பின் காணாமலும் போகிறார். இதை போலீஸ் ஒரு பக்கம் விசாரிக்க, அப்பா முத்துப் பாண்டி இன்னொரு பக்கமும் விடை தேடி அலைகிறார். இறுதியில் என்னவானது என்பதே சித்திரை செவ்வானம் சொல்ல வரும் கதை.

சித்திரை செவ்வானம்

WoW Moments 🤩

  • தமிழ் சினிமாவுக்கு புது வரவு பூஜா கண்ணன். முதல் படம் என்ற தயக்கமே இல்லாமல் சென்டிமென்ட் காட்சிகளில் ஆரம்பித்து பதைபதைக்க வைக்கும் காட்சிகள் வரை அலட்டல் இல்லாத நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் அவர்.
  • ஸ்டன்ட் மாஸ்டரின் படம் என்பதால் ஸ்டன்ட் காட்சிகளுக்கு எந்தவித குறையுமே இல்லை. படத்தில் வரும் சில ஸ்டன்ட் காட்சிகளும் எந்தவித ஹீரோயிசமும் இல்லாமல் இயல்பாக இடம்பெற்றிருந்தது.
சித்திரை செவ்வானம்

AWW Moments 😫

  • இதுவரை பார்த்த வழக்கமான கதாபாத்திரம், கொஞ்சம் மிகையான நடிப்பு என்று களமிறங்கியிருக்கிறார் சமுத்திரக்கனி. சந்தோஷத்தில் ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறார், துக்கத்தில் கதறி கதறி அழுகிறார். கொஞ்சமும் வெரைட்டி இல்லாமல் உறுத்தலான நடிப்பைதான் சமுத்திரக்கனி இதில் வெளிப்படுத்தியிருக்கிறார்.
  • படத்தின் இசை மாநாடு படத்தை போல் லூப் மோடில் ஒரே மாதிரி சுற்றிக்கொண்டிருந்தது. ஜாலி சென்டிமென்ட் சிச்சுவேஷனில் சாதாரணமாகவும், அழுகை சென்டிமென்ட் சிச்சுவேஷனில் அதே பின்னணி இசை ஸ்லோ மோஷனில் மங்கல வாத்தியங்களோடு இசைக்கிறது.
  • போலீஸ் கதாபாத்திரம் என்றாலே மிடுக்கான பாடி லாங்குவேஜ் என்று ஆகிவிட்டது. கூலிங் கிளாஸை கழட்டாமல், கொஞ்சமும் ரியாக்‌ஷன் இல்லாமல் ஆங்கிரி மோடிலேயே நடித்திருக்கிறார் ரீமா கலிங்கல்.
  • வன்கொடுமைக் காட்சிகளுக்கும், அந்த கொடுமையை செய்பவரின் கதாபாத்திர சித்திரிப்பும் என்று மாறுமோ தெரியவில்லை. இதுபோன்ற படங்களில் தொன்று தொட்டு ஒரே மாதிரியாக வருகிறது. இது போன்ற அசம்பாவிதம் செய்பவர்கள் கும்பலாக சியர்ஸ் சொல்லி பீர் அடிப்பார்கள். தனது மானத்திற்கு ஒரு பெண்ணால் இழுக்கு ஏற்பட்டால் அவரை வன்கொடுமை செய்து கொலை செய்வார்கள். அவ்வளவுதான். தெளிவான ஒரு அரசியல் பார்வை இல்லாமல் வெறுமனே நடந்த அவலத்தை மட்டும் வைத்து பார்வையாளர்களின் அனுதாபத்தைச் சம்பாதிக்க நினைத்திருக்கிறார் இயக்குநர்.
ரீமா கலிங்கல்

Verdict

நிஜ சம்பவங்களைப் படமாக்கும்போது தெளிவான அரசியல் பார்வையோடு எடுத்தால் படம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

சித்திரை செவ்வானம்

Similar Movies to Watch

* கமலி பிரம் நடுக்காவேரி

* பரியேறும் பெருமாள்

Rating

Direction

2/5

Casting

2/5

Music

2/5

Screenplay

2/5

Editing

2/5

Overall Rating

2/5