• ஜகமே தந்திரம் – Movie Review

  One Line

  `சோழர் பரம்பரையில் ஒரு லண்டன் தாதா’ எனப் படத்தில் இடம்பெற்ற இந்த வசனம்தான் ஜகமே தந்திரத்தின் ஒன்லைன்.

  Streaming Link

  Story Line

  `சோழர் பரம்பரையில் ஒரு லண்டன் தாதா’ எனப் படத்தில் இடம்பெற்ற இந்த வசனம்தான் ஜகமே தந்திரத்தின் ஒன்லைன். அப்படித்தான் படம் ஆரம்பிக்கும்போது தெரிந்தது. ஆனால், படம் தன்னால் ஒரு இடியாப்ப சிக்கலில் மாட்டி, பார்க்கும் நம்மையும் சோதித்துவிட்டது.

  மதுரையின் லோக்கல் ரவுடி ப்ளஸ் பரோட்டா மாஸ்டராக இருப்பவர் சுருளி (தனுஷ்). இவர் செய்த ஒரு கொலையால் ஒரு மாத காலம் தலைமறைவாக இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அந்த சமயம் லண்டனில் ஒரு ப்ராஜெக்ட் வருகிறது. இதைப் பயன்படுத்தி லண்டன் தாதா ஆகிடலாம் என பெட்டி படுக்கையை கட்டிக்கொண்டு லண்டன் பறக்கிறார் தனுஷ். அங்கிருந்து ஆரம்பமாகிறது ̀ஜகமே தந்திரம்’.

  WoW Moments 🤩

  • ̀பாகுபலி’ படத்தில் ஒற்றை ஆளாக சிலையை தூக்கி நிறுத்தும் பிரபாஸை போல ஒட்டுமொத்த படத்தை ஒற்றை ஆளாக தாங்கிப் பிடிக்க முயன்றிருக்கிறார் தனுஷ். ரவுஸு செய்யும் சென்னை மாரியை பட்டி டிங்கரிங் பார்த்து பவுடர் போட்டுவிட்டு மதுரைக்கு அழைத்து சுருளியாக ஆக்கியிருகிறார் இயக்குநர். பின் அவரை அலேக்காக தூக்கி லண்டனுக்கும் அழைத்து சென்றிருக்கிறார். எப்பேற்பட்ட கதாபாத்திரத்தையும் அசால்ட் செய்யும் தனுஷ் இதையும் சிறப்பாகவே செய்திருக்கிறார்.
  • ரஜினியின் பாணியில் தனுஷ் நடித்திருக்கிறார் என கார்த்திக் சுப்பராஜ் ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். ஃபேன் பாய் மொமன்ட்டாக ஓரிரு இடங்களில் அப்படி வைத்திருப்பார் எனப் பார்த்தால் படத்தின் முக்கால்வாசி போர்ஷனில் ரஜினி போலவே நடித்திருக்கிறார், ஸ்டைல் செய்திருக்கிறார். ̀அருணாசலம்’ படத்தில் ரஜினி கலட்டி வைத்த காப்பை தனுஷ் எடுத்து மாட்டிக்கொண்டார் போல.
  • ̀அதிக பணம் நிம்மதிக்குக் கேடுனு சொல்றவன் பூராம் பணக்காரங்களாதான் இருக்காய்ங்க. மொதல்ல கொடுங்க. அது வலிக்கிதா செரிக்கிதானு நாங்க அனுபவிச்சு பார்த்து சொல்றோம்’, ̀போரை தொடங்கதான் முடியும் அதை முடிக்க முடியாது’ போன்ற விரல்விட்டு எண்ணக்கூடிய நல்ல வசனங்கள் மட்டுமே நன்றாக இருந்தது.
  • மதுரை, லண்டன் எனப் படத்தின் திரைக்கதையோடு சந்தோஷ் நாராயணின் வாத்தியங்களும் ஜாலியாக பயணித்திருக்கிறது. மதுரை லோக்கல் ரவுடி என்றால் ̀ரகிட ரகிட’ என்று லோக்கலாக இறங்கி அடிப்பது, லண்டன் டான் என்றால் அதற்கு தகுந்த மாதிரி பிஜிஎம்மை மாற்றுவது என மனிதன் விளையாடியிருக்கிறார். படத்தின் கதையை புறம் தள்ளிவிட்டு ஒரு மாஸ் காட்சியாக பார்த்து ரசிக்க சந்தோஷின் இசை சிறப்பாய் உதவியிருக்கிறது.

  AWW Moments 😫

  • ̀இயக்கம்னு சொல்லு தீவிரவாதம்னு சொல்லாத’, ̀நம்ம பசங்க புலிங்கடா விலை போக மாட்டாங்க’ என்பது போன்ற புரட்சிகரமான வசனங்கள் எல்லாம் தனியாக பார்த்தால் சூப்பர். ஆனால், கதையோடும் படத்தின் ஐடியாலஜியோடும் ஒட்டவே இல்லை.
  • கேங்ஸ்டர் படமாக ஆரம்பிக்கும் கதை ஒரு கட்டத்தில் ஈழத்தைப் பற்றி பேசுகிறது. இரண்டும் வெவ்வேறு களம். ஒன்று கேங்ஸ்டர் படமாக கொண்டு போயிருக்க வேண்டும் அல்லது நல்ல ஒரு புரிதலோடு முழு நீள ஈழத்தைப் பற்றி பேசும் படமாக எடுத்திருக்க வேண்டும். இரண்டையும் ஒன்றிணைத்தது எடுபடவே இல்லை. ஒரு இயக்கத்தின் தலைவன் காட்டப்படும் ஜோஜு ஜார்ஜ் நல்லது செய்வதைப் போல் காட்டப்படுகிறார். ஆனால், அவர் எதற்காக ஆயுதக் கட்டத்தல், தங்கக் கடத்தல், கேங் வார் போன்றவற்றில் எல்லாம் ஈடுபடுவதைப் போல் காட்ட வேண்டும். நாடு நாடாக அவர் ஏன் இதை அனுப்பி வைக்க வேண்டும். இதற்கெல்லாம் ஒரு வசனத்தில் அவர்களே பதிலும் சொல்கிறார்கள். ஆனால், அதுவும் உப்புக்கு சப்பாகவே வைக்கப்பட்டிருந்தது.
  • ஒரு படத்தில் கதையின் நாயகன் ஒரு கட்டத்தில் தன்னைத் திருத்திக்கொண்டு நல்லவனாக மாறுவது எல்லாம் ஓகே. ஆனால், எப்பேற்பட்ட சூழலையும் சாமர்த்தியமாக கையாளும் மூளைக்காரனாகத்தான் சுருளி கதாபாத்திரத்தைக் காட்டுகிறார்கள். கொலை செய்கிறார், சண்டை போடுகிறார், ஆயுதம் எப்படி கடத்தப்படுகிறது என்பதைக் கண்டுபிடிக்கிறார், அந்த ஆயுதங்களே இவரே பயன்படுத்தவும் செய்கிறார். இப்பேற்பட்டவருக்கு ஈழம் குறித்த குறைந்தபட்ச புரிதல் கூடவா இருக்காது? ஈழம் என்றால் என்னவென்றே தெரியாத அளவு அவரின் கதாபாத்திரத்தை வடிவமைத்திருந்தது அபத்தம். வெறுமனே ஐஸ்வர்யா லட்சுமி சொல்லும் சில நிமிட ஃப்ளேஷ்பேக்கில் புரிய வைக்கக்கூடிய விஷயமா ஈழப் பிரச்னை?
  • ஜோஜு ஜார்ஜ் அவருக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்துக்கு நடிப்பாக ஓரளவுக்கு நியாயம் சேர்த்திருக்கிறார். ̀கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ புகழ் ஜேம்ஸ் காஸ்மோ தலையும் புரியாமல் வாலும் புரியாமல் ஏதோ நடித்திருக்கிறார். கலையரசன், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, ஷரத் ரவி, கார்த்திக் சுப்பராஜ் தந்தை கஜராஜ், வடிவுக்கரசி, பாபா பாஸ்கர் எனப் படத்தில் ஏகப்பட்ட நடிகர்கள். ஆனால், தனுஷை தவிர யாருக்கும் பெரிதாக ரோல் இல்லை.

  Verdict

  சில விஷயங்களை தனித் தனியாக சொல்வதுதான் சரியாக இருக்கும். ̀இந்த உடல் அந்தத் தலையோடு இணையப்போகிறது’ என்கிற வகையில்தான் இரண்டு பிரச்னைகளுக்கும் முடிச்சு போட்டு குழப்பி இருக்கிறார் இயக்குநர்.

  Similar Movies to Watch

  Rating

  Direction

  3/5

  Casting

  2/5

  Music

  3/5

  Screenplay

  2/5

  Editing

  2/5

  Overall Rating

  2.5/5