டார்க் காமெடி ரோலர் கோஸ்டர்! – SK-வின் டாக்டர் ஆபரேஷன் சக்ஸசா ஃபெயிலியரா?!

One Line

கோலமாவு கோகிலா படத்திற்குப் பின் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம் டாக்டர். Human trafficking எனும் சென்சிட்டிவான விஷயத்தை கொஞ்சமே கொஞ்சம் சீரியஸ், நிறைய நிறைய டார்க் காமெடியை வைத்து டாக்டர் ஆபரேஷனை கையாண்டிருக்கிறார் இயக்குநர்.

Streaming Link

Theatre

Story Line

ராணுவத்தில் டாக்டர் பணி செய்துகொண்டிருப்பவர் வருண் (சிவகார்த்திகேயன்). ஒரு நிகழ்ச்சியில் பார்த்த பத்மினியின் (பிரியங்கா அருள் மோகன்) மீது காதல் வயப்படுகிறார் கையோடு தன் வீட்டோடு சென்று அவரது வீட்டிலும் பேசி திருமணத்திற்கு க்ரீன் லைட் வாங்குகிறார். ஆனால் மிகவும் அந்நியன் பட அம்பி போல் இருக்கிறார் என்று சொல்லாமல் சொல்லி ரிஜெக்ட் செய்கிறார் அந்த நேரத்தில் பத்மினியின் அண்ணன் மகள் சின்னு (ஸாரா வினீத்) கடத்தப்படுகிறார். பத்மினியின் குடும்பமான சுமதி (அர்ச்சனா), நவனீத் (அருண் அலெக்ஸாண்டர்), ப்ரீத்தி (தீபா) ஆகியோருடன் பாப்பாவைக் கண்டுபிடிக்கும் ஆபரேஷனில் இறங்குகிறார் டாக்டர். இதற்கு நடுவில் ப்ரதாப் (யோகி பாபு), பகத்தும் (ரெடின்) டீமில் இணைந்துகொள்கின்றனர். விசாரிக்க விசாரிக்க ஏகப்பட்ட உண்மைகளும், இதற்குப் பின்னால் ஒரு பெரிய நெட்வொர்க்கே இருப்பதும், ஹ்யூமன் டிராஃபிக்கிங் இருப்பதும் தெரியவருகிறது. இறுதியில் ஆபரேஷன் சக்ஸஸ் ஆனதா இல்லையா என்பதே டாக்டர் படத்தின் கதை.

WoW Moments 🤩

 • இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் வேறு ஒரு ஆளாக தெரிகிறார். எந்த இடத்திலும் சிரிக்காமல் ஒருவித இறுக்கத்துடனே அந்த கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன். இப்படி ஒரு சிவாவை இதுவரை அவரது ரசிகர்கள் கூட பார்த்திருக்க மாட்டார்கள் அப்படி ஒரு Subtle ஆன நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் எஸ்.கே. வாழ்த்துகள் ப்ரோ!
 • நெல்சன் படமென்றாலே ரெடினின் பர்ஃபாமன்ஸ் தாறுமாறாய் இருக்கிறது. கோலமாவு கோகிலா படத்திலும் இது ஒர்க் ஆகியிருந்தது டாக்டர் படத்தில் அது வேறு லெவலுக்கு சென்றிருக்கிறது. முக்கால்வாசி படத்தில் வருகிறார் யோகி பாபுவோடு இணைந்து வெளுத்து வாங்கியிருக்கிறார்.
 • பல யுகங்கள் கழித்து இந்தப் படத்தில் யோகி பாபுவின் பர்ஃபாமன்ஸை பார்த்து சிரிப்பு வந்தது. ரெடின் – யோகி பாபு காம்போ டாக்டர் படத்திற்குப் பெரிய பலம். அதுவும் அந்த மூக்குப்பொடி விளையாட்டு காமெடி எல்லாம் அல்டிமேட் ஃபன்.
 • படத்தின் மற்றொரு பலம் டெக்னிக்கல் விஷயங்கள். சிவகார்த்திகேயனுக்கு நிகரான ஹீரோயிஸத்தை அனிருத்தின் இசைக் கருவிகள் கொடுத்திருக்கிறது. சூழலுக்கு தகுந்த பிஜிஎம் படத்தை எங்கும் நழுவச் செய்யாமல் இறுக்கிப் பிடித்து ரசிகர்களைக் கட்டிப்போடுகிறது.
 • அதே சமயம் படத்தின் ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக்கும் அபார உழைப்பைக் கொடுத்திருக்கிறார். முதல் பாதி சென்னையிலும் இரண்டாம் பாதி கோவாவிலும் நடக்கிறது படக்குழுவோடு பார்க்கும் நம்மையும் அந்தந்த இடத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறது ஒளிப்பதிவு. குறிப்பாக மெட்ரோவில் இடம்பெற்ற சண்டைக்காட்சி ஒன்றே போதும் இவரின் உழைப்பைச் சுட்டிக்காட்ட.
 • அர்ச்சனா, இளவரசு, அருண் அலெக்ஸாண்டர், குட்டிப்பாப்பா ஸாரா வினீத், தீபா என அனைவரின் பர்ஃபாமன்ஸும் படத்திற்கு பொருந்திப்போயிருந்ததது. சர்ப்ரைஸ் விஷயமாக அமைந்தது ஒன் ஆஃப் தி வில்லன்களாக வந்த ராஜீவ் லக்‌ஷமணன் ட்வின்ஸின் பர்ஃபாமன்ஸ்.
 • ஆங்காங்கே வரும் மகாலியும் அவரது கூட்டாளியும் கூட காமெடியில் லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கியிருக்கிறார்கள்.

AWW Moments 😫

 • டார்க் காமெடி என்றாலே லாஜிக் மீறல்களை கழட்டி வைத்துவிட்டு பார்க்க வேண்டும் என்ற கட்டாயம் ஏற்ப்பட்டுவிட்டது. அப்படித்தான் இந்தப் படத்திலும் பல இடங்களில் இது சீரியஸ் காட்சியா சிரிப்பு காட்சியா என்று ஆகிவிட்டது. குறிப்பிட்ட ஒரு எமோஷனில் பயணம் செய்து ஒரு காட்சியை அணுக முடியாமல் போகிறது. இறுக்கமான ஒரு காட்சியைப் பார்த்து உணர்வதற்குள் ஒரு காமெடி ட்ராக் சடாரென வந்துவிடுகிறது.
 • படத்தை காமெடி, சீரியஸ் என இரண்டாக பிரித்து செயல்பட்டிருந்தால் சிரிப்பு வரும் இடத்தில் காமெடியையும் சீரியஸான இடத்தில் எமோஷனையும் உணர்ந்திருக்கலாம். Hangover, Horrible bosses என ஹாலிவுட் பட பாணியில் காமெடியின் ஸ்டைல் ஆஃப் மேக்கிங்கைஅணுகியதால் ஆங்காங்கே கோலிவுட்டோடு இணைத்துப் பார்க்க முடியவில்லை.
 • துப்பறிவாளன் பட பாணியிலே வில்லனிஸத்தை கையாண்டிருக்கிறார் வினய். இருப்பினும் பெரிய உறுத்துலாக தெரியாமல் ஓகே ரக நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
 • யோகி பாபு விளையாடும் அந்த போட்டியின்போது தோற்பவர்கள் பெண்கள் போல நைட்டி அணிந்து தலையில் பூ வைத்துக்கொள்ள வேண்டும் என்பது போல வசனங்களையும் போர்ஷன்களையும் தவிர்த்திருக்கலாம்.

Verdict

லாஜிக் மீறல்கள், எமோஷன்ஸ் போன்ற அம்சங்களை ஓரம்கட்டி வைத்துவிட்டு முழுக்க காமெடி என்ற ஒற்றை ஆபரேஷனை மட்டும் நம்பி டாக்டரை கன்சல்ட் செய்யலாம்!

Similar Movies to Watch

 • கோலமாவு கோகிலா
 • நானும் ரவுடி தான்

Rating

Direction

3.5/5

Casting

3.5/5

Music

4/5

Screenplay

3.5/5

Editing

3.5/5

Overall Rating

3.5/5