`8 லட்சம் இன்சூரன்ஸ், மாஸ்டர் மைண்ட் குரூப்!’ – ‘Kurup’ பார்க்கலாமா, வேண்டாமா?!

One Line

கேரளாவைச் சேர்ந்த சுகுமார குரூப்பின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்த படம் குரூப்.

Streaming Link

Theatrical release

Story Line

விமானப்படையில் சேர்ந்து பயிற்சிகள் எடுத்துக்கொண்டு மும்பைக்கு வேலைக்கு செல்கிறார் கோபி கிருஷ்ணன் (துல்கர் சல்மான்). தன்னுடைய சிறு வயதில் இருந்தே வினோதமான செயல்கள் எதையாவது செய்துகொண்டே இருப்பவர் இவர். விமானப்படையின் வேலை ஒரு கட்டத்தில் கடுப்பைக் கிளப்ப, உடம்பு சரியில்லை எனச் சொல்லி ஒரு மாத காலம் மெடிக்கல் லீவில் ஊருக்கு செல்கிறார். ஒரு நாள் விமானப்படைக்கு கோபி கிருஷ்ணன் தற்கொலை செய்துகொண்டார் என்று செய்தி வருகிறது. ஆனால், தன்னுடைய இறப்பை Fake செய்து சுதாகர குரூப்பாக அவதாரம் எடுக்கிறார். அதன் பின்னர் பெர்ஷியாவின் ஒரு பெரிய கம்பெனியில் நல்ல வேலைக்கு செல்கிறார். அங்கு சென்ற பின்னும் ஒரு வினோதமான யோசனை குரூப்பிற்கு தோன்றுகிறது. மீண்டும் தன்னுடைய இறப்பை Fake செய்ய திட்டமிடுகிறார். இம்முறை 8 லட்சம் என்கிற இன்சூரன்ஸ் பணத்திற்காக. இந்த திட்டத்தை செயல்படுத்த கேரளாவுக்கு வந்திருக்கும் குரூப் பிள்ளைச்சன், ஷாபு, பொன்னப்பன் ஆகிய நண்பர்களை கூட்டு சேர்கிறார். தன்னைப் போன்ற ஒரு பிணம் கிடைக்காத காரணத்தினால் பக்கத்து ஊரை சேர்ந்த சார்லி (டொவினோ தாமஸ்) என்பவரைக் கொன்று நாடகத்தை அரங்கேற்றுகிறார்கள். இந்த மோசச் செயலை போலீஸ் தங்களுடைய விசாரணையில் கண்டுபிடிக்கிறது. ஊர் ஊராக தலைமறைவு வாழ்க்கையை வாழ்ந்து வரும் சுதாகர குரூப்பை போலீஸார் கைபற்றினார்களா அல்லது குரூப் தான் திட்டமிட்ட இன்சூரன்ஸ் பணத்தை பெற்றாரா அல்லது இது இல்லாமல் வேறு ஏதாவது நடந்ததா என்பதே படத்தின் மையக்கதை.

WoW Moments 🤩

  • சுகுமார குரூப்பாக துல்கர் சல்மான். நிஜ குரூப்பை அப்படியே உள்வாங்கி நடித்திருக்கிறார் துல்கர். வெறும் செய்திகளில் படித்த குரூப்பின் நிஜ கேரக்டரை தன்னுடைய நடிப்பின் மூலமும், உடல்மொழியின் மூலமும் உயிர் கொடுத்து திரையில் வெளிப்படுத்தியிருக்கிறார். படத்தின் அடுத்த நாயகன் பிள்ளைச்சனாக நடித்த ஷைன் டாம் சாக்கோவின் நடிப்பு. குரூப்பின் நண்பராக நடித்திருக்கும் இவர் துல்கரை மிஞ்சும் பர்ஃபாமன்ஸை சில இடங்களில் கொடுத்திருக்கிறார்.
  • போலீஸாக நடித்த இந்திரஜித் சுகுமாரன், குரூப்பின் ஜோடியாக நடித்த சோபிதா, 10 நிமிடங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பரத் என படத்தின் மொத்த நடிகர்களும் சிறப்பான தரமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். படத்தின் கருவே கடைசி 40 நிமிடங்கள் துல்கர் அவருடைய பாயின்ட் ஆஃப் வியூவில் இருந்து சொல்லப்படும் கதைதான். அதை சின்ன பிசிறு கூட இல்லாமல் எழுதி இயக்கியிருந்தார்கள். படம் நெடுக போடப்பட்ட பல முடிச்சுகளை அவிழ்த்தது கடைசி அத்தியாயம்.
  • படத்தின் டெக்னிக்கல் ஒர்க் பிரமிக்க வைக்கும் அளவிற்கு வந்திருந்தது. 1980-களில் நடக்கும் கதை, போக குறிப்பிட்ட சில இடங்கள் என இல்லாமல் பல்வேறு இடங்களில் கதை நகர்கிறது. மும்பையின் பல்வேறு பகுதிகள், ஏர்போர்ட்கள், துறைமுகங்கள் என படத்தின் ஆர்ட் ஒர்க்கை பார்ப்பதற்கே கண்ணுக்கு குளிர்ச்சியாக அமைந்திருந்தது.
  • அடுத்தது ஆர்டிஸ்களின் ரெட்ரோ லுக் காஸ்டியூம். ஆர்ட் ஒர்க்கிற்கு ஈடு கொடுக்கும் அளவிற்கு அமைந்திருந்தது காஸ்டியூம். மூன்றாவது படத்தின் பின்னணி இசை. இசையமைப்பாளர் சுஷின் ஷ்யாமின் இசைக் கருவிகள் தீப்பறக்க மியூசிக்கை அள்ளி வழங்கியிருக்கிறது. படத்தின் ஒளிப்பதிவாளர் நிமிஷ் ரவியும் அபார உழைப்பை கொடுத்துள்ளார்.

AWW Moments 😫

  • படத்தின் கதை ஒவ்வொருவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நகர்கிறது. இந்தவொரு Non-Linear முறை திரைக்கதையே படத்திற்கு மிகப் பெரிய பலமாக தெரிந்தாலும் முதல் பாதியில் இது மொத்தமாக சொதப்பிவிட்டது. படம் இவ்வளவுதானா என்கிற எண்ணம் ஆரம்பித்திலேயே வந்தது மிகப் பெரிய அயர்ச்சியை ஏற்படுத்தியது.
  • விமானப்படையின் பல காட்சிகளை ஓரங்கட்டிவிட்டு படத்தின் பிரதான விஷயங்களுக்கு அதிக கவனம் செலுத்தியிருக்கலாம். குரூப்பை பற்றி வெறுமனே வெளிவந்திருக்கும் செய்திகளை வைத்து எடுத்திருந்தது அப்பட்டமாக தெரிந்தது. நிஜ சம்பவங்களின் அடிப்படையோடு சேர்த்து சினிமாத்தனமான பல விஷயங்களை படத்தில் புகுத்தாமல் தேவையானதை மட்டும் சேர்த்திருக்கலாம். பைலிங்குவலாக உருவாகும்போது தாய் மொழி மலையாளம் மட்டுமில்லாமல் தமிழுக்கும் அதிக கவனம் செலுத்தியிருக்கலாம்.

Verdict

ஒரு சில குறைகள் இருந்தாலும் படம் முடித்த பின்னர் சுகுமார குரூப் யார் என்பது தெளிவாக தெரிகிறது. தவிர, படத்தின் ஆர்ட், மியூசிக் ஆகிய இரண்டையும் பெரிய திரையில் கண்டு மகிழ்ந்ததே அலாதியான அனுபவம்.

Similar Movies to Watch

  • KGF
  • Kuruthi

 

Rating

Direction

3.5/5

Casting

3.5/5

Music

3.5/5

Screenplay

3.5/5

Editing

3.5/5

Overall Rating

3.5/5