கடந்த ஜூலை 2-ம் தேதி இதன் முதல் பாகம் வெளியானது. அதைத் தொடர்ந்து 2-ம் பாகம் 9-ம் தேதியும், 3-ம் பாகம் 16-ம் தேதியும் அடுத்தடுத்து வெளியானது. 1994-ல் நடக்கும் பயங்கரமான கொலைக்கு 1978-ல் நடந்த கோர சம்பவத்தின் மூலம் லீட் கிடைக்கிறது. முதல் இரண்டு பாகமும் அதை சுற்றியேதான் கதை நகரும். அதைத் தொடர்ந்து வெளியான கடைசி பகுதியில் மொத்த மிஸ்ட்ரிக்கும் விடை சொல்கிறது இந்தப் படம்.
Shadyside, Sunnyvale என இரு பகுதிகள். பாப்பம்பட்டி ஏப்பம்பட்டி போல் இந்த இரு ஊரார்களுக்கும் வாய்க்கால் சண்டை நடந்து கொண்டே இருக்கிறது. Sunnyvale பகுதியில் இருப்பவர்கள் வசதி படைத்தவர்கள். Shadyside-ல் இருப்பவர்கள் சபிக்கப்பட்டவர்கள் போல் எந்த ஒரு வசதியும் இல்லாமல் பாவம்போல் இருப்பார்கள். அதற்கு எல்லாம் காரணம் Sarah Fier என்று சொல்வார்கள். இந்த ஒரு பெயர் மூன்று பாகங்களிலும் ஒலித்துக் கொண்டே இருக்கும். நடக்கும் கொடூர கொலைகளின் காரணமாகவும் இவரைத்தான் சொல்வார்கள். யார் இவர், Shadyside சபிக்கப்பட்டதற்கும் இவருக்கும் என்ன சம்பந்தம். 1666-ல் எதற்காக இவரை தூக்கிலிட்டு பலி கொடுத்தார்கள். இப்படிப் பல மர்ம முடிச்சுகளை திகில் நிறைத்து பொறுமையாக மூன்று பாகங்களிலும் அவிழ்கிறது இந்த Fear Street படம்.
0 Comments