இது ஒரு குடும்பக் கவிதை – `ஹோம்’ கண்டிப்பா பாருங்க..!

One Line

கேரளத்தின் ஒரு அழகிய வீட்டைச் சேர்ந்த ஒரு அழகிய குடும்பத்துக்குள்ளே பழமைக்கும் புதுமைக்கும் நடக்கும் ஸ்வீட் சண்டையே #Home படத்தின் ஒன்லைன்.

Streaming Link

Story Line

ஒரு படம் சக்சஸ் கொடுத்துவிட்டு இரண்டாவது படத்திற்கான கதையை எழுத போராடிக்கொண்டிருக்கும் நாயகன் ஆன்டனி ஆலிவர் டிவிஸ்ட் (ஶ்ரீனாத் பாசி). தயாரிப்பாளரின் நச்சரிப்பால் அமைதியைத் தேடி தன் வீட்டிற்கு வருகிறார். அப்படி வந்தும் ஆன்டனிக்கு கதையின் முதல் வரியைக் கூட எழுத முடியாமல் இருக்கும். இதற்கு நடுவே அவ்வப்போது அப்பா ஆலிவர் டிவிஸ்டின் (இந்திரன்ஸ்) சில செயல்கள் ஆன்டனிக்கு எரிச்சலையும் தருகிறது. உலகமே ஸ்மார்ட்போனில் இயங்கிக் கொண்டிருப்பதை பார்க்கும், ஆலிவருக்கு ஒரு புது மொபைல் வாங்க வேண்டுமென்ற ஆசை ஏற்படுகிறது. ஆனால் அதுவே மிகப்பெரிய ஒரு விபரீதத்தை ஏற்படுத்திவிடுகிறது. போன் வாங்கிய கையோடு ஃபேஸ்புக்கில் ஆரம்பித்து இன்ஸ்டாகிராம் வரை அனைத்தையும் இன்ஸ்டால் செய்கிறார். ஒரு தருணத்தில் தெரியாத்தனமாக ஆலிவரின் மொபைல் ஆன்டனியின் நிஜ முகத்தை ஃபேஸ்புக் லைவ் செய்து, அவரின் மொத்த இமேஜுக்கும் இழுக்கு ஏற்படுத்துகிறது. அதிலிருந்து எப்படி மீண்டார் என்பதே ‘ஹோம்’ படத்தின் மீதி கதை.

WoW Moments 🤩

* இந்தப் படத்தைப் பார்க்கையில் அந்த வீட்டின் ஒரு மூலையில் நாமளும் அங்கு நடப்பதை பார்க்கும் ஓர் உணர்வை ஏற்படுத்துகிறது. எந்தவித சினிமாத்தனமும் இல்லாமல் ஒரு சினிமா எடுப்பதுதான் இயக்குநருக்கிருக்கும் ஒரு பெரிய சவாலே. அதை போகின்ற போக்கில் கதை எழுதி காட்சிகளாக மேஜிக் நிகழ்த்தியிருக்கிறார் இயக்குநர் ரோஜின் தாமஸ். படத்தின் விஷுவலாகட்டும், அவர் கதையாக எழுதிய வரிகளாகட்டும்… ஒவ்வொன்றிலும் வெவ்வேறு இனத்தைச் சேர்ந்த அழகிய பூக்கள் பூத்துக் குலுங்கியிருக்கிறது. படம் பார்த்து முடித்த பின் ஒரு எளிய கவிதையை படித்து அதை உணர்வுபூர்வமாக அனுபவித்தது போல் இருந்தது.

* படத்தின் மொத்த அழகியலையும் ஆலிவராக நடித்த இந்திரன்ஸின் நடிப்பு வெளிப்படுத்தியது. வெள்ளந்தி தனம், இயலாமை, ஏக்கம், பாசம், அன்பு என ஒரு இன்னொசன்ட் அப்பாவுக்குத் தேவையான மொத்த குணாதிசயத்தையும் நடிப்போடு சேர்த்து தனது உடல்மொழியில்கூட வெளிப்படுத்தியிருக்கிறார். அடுத்தது ஶ்ரீனாத் பாசி. எழுத்தாளர்களுக்கு ஏற்படும் Writer’s block, அப்பாவிடம் வெளிப்படுத்தும் கோபம், அது தவறென்பதை உணர்ந்தபின் வெளிப்படுத்தும் பாசம் என ஒவ்வொரு எமோஷனையும் தனது நடிப்பின் வாயிலாக பார்வையாளர்களுக்கும் கடத்துகிறார்.

* படத்தில் இடம்பெற்றிருக்கும் சின்னச் சின்ன கதாபாத்திரங்கள் கூட அவ்வளவு அழகாய் நடித்திருக்கிறார்கள். முகம் சுழிக்க வைக்கும் ஒரு காட்சி கூட படத்தில் கிடையாது. ஆலிவரின் அப்பாவாக வரும் அப்பச்சன் (கைனாகரி தங்கராஜ்), தொடர்ந்து தனது கணவர் அவமானப்படுப்பத்தப்படுவது தெரிந்து ஒரு காட்சியில் வெடித்துச் சிதறும் குட்டியம்மா (மஞ்சு பிள்ளை), ஆன்டனியின் தம்பியாக நடித்திருந்த சார்லஸ் ஆலிவர் டிவிஸ்ட் (நல்சென் கே. கஃபூர்), ஆலிவரின் பால்ய நண்பராக நடித்த சூர்யன் (ஜானி ஆன்டனி) என  ஒவ்வொருவருக்கும் ஒரு அழகிய தருணம் வந்துகொண்டே இருக்கிறது.

* குறிப்பிட்ட ஒரு கதாபாத்திரத்துக்குள் படம் சுற்றிக்கொண்டு இருக்காமல் இருப்பதுதான் இந்தப் படத்தின் தனி அழகு. இதன் ஏதோ ஒரு கதாபாத்திரத்தில் ஏதோ ஒரு மூலையில் நம்மை நாம் பொருத்திப் பார்க்க முடியும். இதுதான் ஒரு அழகிய குடும்ப டிராமா படத்திற்கு தேவைப்படும் ஒரு அம்சம். படத்தின் விமர்சனத்தை எழுதும்போது என்னை மீறி அழகிய என்ற வார்த்தை தன்னால் கீபோர்டை தட்டுகிறது. படம் பார்த்து முடித்த பின் உங்களுக்கு இது தோன்றும்.

*முன்பே சொன்னது போல் படத்தின் கதையை எழுதிய இயக்குநரின் பேனா மை, பூக்களை சிதற விட்டிருக்கிறது. யதார்த்தை ஒத்து எழுதியிருக்கும் வசனங்கள் அனைத்தும் நம்முள் இருக்கும் மென்மையான செல்களை வருடிவிடுகிறது. இதுபோன்ற ஒரு நாளை அழகாக மாற்றக் கூடிய சில படங்களை விமர்சனம் என்ற வட்டத்திற்குள் வாவ் – ஆவ் என பிரித்துவைக்காமல் அதன் போக்கிலே போய்விட வேண்டும்.

AWW Moments 😫

போய் படம் பாருங்க பாஸ்!

Verdict

ஐந்து பேர் கொண்ட இந்த குடும்பத்தின் கைகோத்து ஆறாவது ஆளாக ஒரு முறையேனும் இந்த படத்தை அனுபவித்துவிட வேண்டும். அடி பொலி Rojinetta!

Similar Movies to Watch

  • The Great Indian Kitchen
  • Jacobinte Swargarajyam
  • Ente Ummante Peru

Rating

Direction

4/5

Casting

4/5

Music

4/5

Screenplay

4/5

Editing

4/5

Overall Rating

4/5

0 Comments

Leave a Reply