‘ஆணும் பெண்ணும்’ ஆந்தாலஜி எப்படி இருக்கு?

Aanum pennum
One Line

ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே மலரும் மூன்று காலகட்ட காதலை வெவ்வேறு எமோஷன் கலந்து சொல்லியிருக்கிறது ‘ஆணும் பெண்ணும்’ எனும் ஆந்தாலஜி மலையாள சினிமா.

Streaming Link

Story Line

முதலில் சாவித்ரி (சம்யுக்தா மேனன்). சுதந்திரம் வாங்கிய பின்னர் கேரளாவில் கம்யூனிஸ்டுகள் துன்புறுத்தப்பட்டார்கள், தேடித் தேடி கொல்லப்பட்டார்கள். அவர்கள் ஒரு இயக்கமாக மாறி வாழ்வாதாரத்திற்காக போராடி வந்தார்கள். அதில் ஒருவரான சாவித்ரி, தனது அடையாளத்தை மறைத்து ஜோஜு ஜார்ஜ் வீட்டில் பணியாளாக சேர்ந்து சில பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்.

 

இரண்டாவது ராச்சியம்மா (பார்வதி). 60-களில் நடக்கும் கதையாக காட்டப்படுகிறது. பால் விற்பனை செய்யும் இவருக்கும், ஒரு எஸ்டேட்டின் இன்சார்ஜாக வேலை செய்யும் ஆசிஃப் அலிக்கும் காதல் மலர்கிறது. குடும்ப சூழல் காரணமாக ஆசிஃப் அலி அவரிடம் இருந்து விலகிவிடுகிறார். ஆனால், ராச்சியம்மாவோ அவரது நினைவுகளில் வாழ முடிவெடுக்கிறார்.

 

மூன்றாவது ராணி (தர்ஷனா). இது சமகாலத்தில் நடக்கும் கல்லூரி காதல் கதை. ரோஷன் மேத்யூ, தர்ஷனா இருவரும் பைக் ட்ரிப்பாக ஒரு மலைப்பிரதேசத்துக்கு செல்கிறார்கள். இவர்கள் காதல்வயப்பட்டு தனிமையில் இருக்கும் சமயத்தில் ஒரு திருட்டு நடக்க, வெடித்து சிரிக்கும் ஒரு சம்பவத்தோடு முடிகிறது கதை.

 

சாவித்ரி, ராச்சியம்மா, ராணி ஆகிய மூவரின் காதலும் எப்படி வெளிப்படுகிறது என்பதே கதைக்கரு. ஜெய் கே, வேணு, ஆஷிக் அபு ஆகிய மூவரும்தான் இந்த மூன்று கதைகளையும் இயக்கியவர்கள். இதில் வேணு அவர் இயக்கிய படத்தை அவரே ஒளிப்பதிவும் செய்துவிட்டார்.

Aanum pennum

WoW Moments 🤩

ஆந்தாலஜி என்பதால் ஜோஜு ஜார்ஜ், சம்யுக்தா மேனன், இந்திரஜித் சுகுமாரன், பார்வதி, ஆசிஃப் அலி, ரோஷன் மேத்யூ, தர்ஷனா, நெடுமுடி வேணு என படத்தில் ஏகப்பட்ட கதாபாத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். எல்லோரும் அவர்களுடைய கதாபாத்திரத்துக்கான நியாயத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள். இந்த படத்தின் நாயகிகளான சம்யுக்தா, பார்வதி, தர்ஷனாவுக்கு கூடுதல் அப்லாஸ். அவர்களின் கதாபாத்திரம் முழுமை பெறும் இடத்தை சென்சிவ்வாக கையாண்டிருக்கிறார்கள்.
அந்தந்த காலகட்டத்தில் நடக்கிறது என்பதை நம்ப வைக்கும் விதமாக அவர்களின் காஸ்டியூமில் ஆரம்பித்து லொக்கேஷன் வரை அனைத்தும் கச்சிதம். கிட்டத்தட்ட மஹாபாரதத்தின் பெண்கள் கதாபாத்திரத்தை இன்ஸ்பிரேஷனாக வைத்துதான் மூன்று பெண்களின் கதையும் உருவாக்கப்பட்டிருக்கிறது. அந்த முயற்சியும் பாராட்டுக்குரியதே.
ஆணும் பெண்ணும்

AWW Moments 😫

கதை ஒவ்வொன்றும் அடர்த்தியாக இருந்ததே தவிர திரைக்கதை ரொம்பவே ஃப்ளாட்டாக அமைந்திருந்தது. இயக்குநர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்பது மேலோட்டமாக புரிகிறது ஆனால் அதற்கான பர்பஸ் என்னவென்பது வெளிவர முடியாமல் தொக்கி நிற்கிறது.
ஜோஜு ஜார்ஜில் ஆரம்பித்து அந்தக் கதையில் வரும் அவரது மகன், ராச்சியம்மா கதையில் ஆசிஃப் அலி, ராணி கதையில் வரும் ரோஷன் என எல்லோரும் பெண்களிடம் ஏதோவொரு எதிர்பார்ப்போடு இருப்பதைப் போல் காட்டியிருப்பது அபத்தம்.
காதலை வெவ்வேறு பரிமாணத்தை வெளிக்காட்டும் சினிமா ஓகே. ஆனால், மொத்தமாக ஆண்களை தப்பான சைடில் காட்டியிருக்க வேண்டாம். கல்லூரி காதலில் காதலி வேண்டாம் என்று சொன்னால் காதலன் அழுவதைப் போல் காட்டியிருப்பது, சொல்லி புரிய வைக்கும் ஒரு சூழலில் காமம்தான் தீர்வு என்று முடிவெடுப்பது போன்ற விஷயங்கள் உறுத்தலாக இருந்தது.
ஆணும் பெண்ணும்

Verdict

ஆந்தாலஜி என்பதால் குறிப்பிட்ட நேரத்திற்குள் ஒரு கதையை புரிய வைக்க வேண்டும். ஆனால் எந்த ஒரு கதையும் முழுமை பெறாமல் ஏதோ ஒன்று மிஸ்ஸிங் என்ற ஃபீலை கொடுக்கிறது  ̀ஆணும் பெண்ணும்’.
ஆணும் பெண்ணும்

Similar Movies to Watch

Solo
5 Sundarikal
ஆணும் பெண்ணும்

Rating

Direction

2/5

Casting

3/5

Music

2.5/5

Screenplay

2/5

Editing

2.5/5

Overall Rating

2.4/5