கிச்சன் ஸ்டோரீஸ் எபிசோட் 1 எப்படி இருக்கு?

கிச்சன் ஸ்டோரீஸ்
One Line

சுக்குக் காபி எப்படி போடுறாங்க என்பதுதான் கிச்சன் ஸ்டோரீஸ் முதல் எபிசோட் கதை.

Streaming Link

Story Line

நிறைய கருப்பட்டி போட்டு காரமா இல்லாமல் ஆரோக்கியமான சுக்கு காபி எப்படி போடுறாங்க அப்டின்றதுதான் கதை. அப்படியே, சுக்குக் காபியோட மகிமையையும் சந்தோஷ் நாராயணன் ஒருபக்கம் சொல்லிகிட்டு இருப்பாரு. இதை கேக்குற அவங்க குழந்தைகளோட ரியாக்‌ஷன் என்ன? சந்தோஷ் நாராயணனுக்கு குழந்தைகள் கொடுக்குற பதில் என்ன என்பது மீதிக் கதை.

கிச்சன் ஸ்டோரீஸ்

WoW Moments 🤩

* ‘வெள்ளக்காரன் ரிசர்ச் பண்ணான் வச்சுக்கயே. என்ன சொல்லுவான்னு தெரியுமா?’, சுக்கு காபி போடுறது ஒண்ணும் சாதாரண விஷயம் கிடையாது’, `சுக்கு காபி பத்தி பல தமிழ் எழுத்தாளர்கள் என்னென்ன எழுதியிருக்காங்க தெரியுமா?’ அப்டினு சந்தோஷ் கேட்க அதற்கு அவர் மகன், `ச.தமிழ்செல்வன்னு ஒரு எழுத்தாளர் என்ன தெரியுமா சொல்லியிருக்காங்க.. இப்படி உட்கார்ந்து இருக்காம. ஆண்களும் போய் சமைக்கனும்னு சொல்லியிருக்காங்க’ – இப்படி பல வசனங்கள் நம்முடைய கவனத்தை ஈர்க்குது.

* ஒருபக்கம் சுக்கு காபி ரெடியாகிட்டே இருக்க இன்னொரு பக்கம் அதோட மகிமையையும் சுக்கு காபி போடுற முறையையும் சந்தோஷ் குழந்தைகளுக்கு சொல்ல.. என அந்த கதை சொல்லல் முறையே கொஞ்சம் சுவாரஸ்யமா இருக்கு. 

* குழந்தைகள், சந்தோஷ், ஷர்மிளா எல்லாரும் அவங்களால முடிஞ்ச சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்காங்க. குடோஸ் குட்டீஸ்!

* பின்னாடி வர்ற இசையை கேட்கும்போது மனதுக்கு கொஞ்சம் இதமா இருக்கு. அந்த இசையை தேர்ந்தெடுத்ததுக்கு கிளாப்ஸ்களை கொடுக்கலாம்.

சுக்கு காப்பி

AWW Moments 😫

ஷார்ட் ஃபிலிமா.. இல்லை சமையல்.. வீடியோவானு ஒரு குழப்பம் வருது இதைப் பார்க்கும்போது. சமையல் வீடியோதான்னு முடிவு பண்றதுக்குள்ள அடுத்த சீன் `இல்ல இது ஷார்ட் ஃபிலிம்’னு நினைக்க வைக்குது. ஷார்ட் ஃபிலிம்னு நினைக்குறதுக்குள்ள அடுத்த சீன் `இல்ல இது சமையல் வீடியோ’னு நினைக்க வைக்குது. மத்தபடி ஐ லவ் யூ தான்!

Verdict

சமையல் வீடியோ, ஷார்ட் ஃபிலிம் இரண்டு ஜானரையும் விரும்பிப் பாக்குறவங்களுக்கு இந்த கிச்சன் ஸ்டோரீஸ் ரொம்பவே பிடிக்கும். வித்தியாசமான அட்டம்ட் பண்ணதுக்காகவே அவங்கள பாராட்டிட்டு வீடியோவைப் பார்க்கலாம்.

சந்தோஷ் நாராயணன்

Similar Movies to Watch

Mask 

Paadidu kuyilamme 

apoorva sagodharargal – அப்புவைத் தேடி

இளையராஜா கான்செப்ட் சித்திரங்கள்

சுக்கு காப்பி

Rating

Direction

4/5

Casting

4/5

Music

4/5

Screenplay

4/5

Editing

4/5

Overall Rating

4/5