• மலைப்பாதையில ஒருத்தன் தனியா போகையில புலி அவனை துரத்துனா?! – ‘கடைசீல பிரியாணி’ பார்க்கலாமா, வேண்டாமா?!

  One Line

  அப்பாவைக் கொன்றவனை பழிவாங்கக் கிளம்பும் மூன்று சகோதரர்களின் குரோதம் படிந்த பயணம்தான் கடைசீல பிரியாணி.

  Streaming Link

  Theater

  Story Line

  வட்டிக்குப் பணம் வாங்கி திருப்பி செலுத்த முடியாத காரணத்தினால் கேரளாவை சேர்ந்த ரப்பர் எஸ்டேட் ஓனர் தமிழகத்தை சேர்ந்த ஒருவரை கொன்றுவிடுகிறார். கொல்லப்பட்டவரின் மூன்று மகன்கள் கொன்றவரைப் பழிக்குப் பழி வாங்க கேரளாவுக்குக் கிளம்புகிறார்கள். அவர்களது இந்த பயணத்தில் கொன்றார்களா, கொல்லப்பட்டார்களா என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

  WoW Moments 🤩

  • பழிவாங்கல் கதைகள் கொண்ட படங்களை பல மொழிகளில் நாம் பார்த்திருப்போம். கடைசீல பிரியாணி அதில் கொஞ்சம் தனித்து தெரிகிறது. இயக்குநரின் முதல் படத்திலேயே வித்தியாசமான முயற்சியை மேற்கொண்டதற்காக பாராட்டுகள். போக சவப்பெட்டி காட்சியின்போது அரங்கேறிய டார்க் ஹ்யூமர் படத்தின் அடிபொலி மேட்டர். ஒரு கதை சொல்லட்டா சார் என்கிற பாணியில் படத்தின் கதையை விஜய் சேதுபதி நரேட் செய்த விதமும் சிறப்பு.
  • கேரள ரப்பர் எஸ்டேட், அடர்ந்த காடு என விஷுவலாக நம்மையும் அந்த இடத்திற்கே அழைத்து செல்கிறது கேமராவும் சவுண்ட் எஃபெக்ட்ஸும். அடர்ந்த காட்டின் அனுபவத்தை அப்படியே திரையில் கொண்டு வந்ததற்கு ஒளிப்பதிவாளர் அஸீம் முகமது – ஹெஸ்டின் ஜோஸ் காம்போவிற்கும், பின்னணி இசையில் புகுந்து விளையாடிய வினோத் தணிகாசலத்திற்கும் வாழ்த்துகள்.
  • படத்தின் முதல் பாதியில் சிக்குபாண்டியின் (விஜய் ராம்) மூத்த அண்ணன் வசந்த் செல்வமின் ஆளுமைதான். கொல்ல வேண்டுமென்ற வெறி, குறிக்கோளில் தடம் மாறி போகும் தம்பியை அடித்து வெளுத்தல், இக்கட்டான ஒரு சூழலிலும் இவர் கண்கள் வெளிப்படுத்தும் குரோதம் என தான் வந்து போகும் இடங்களில் எல்லாம் ஸ்கோர் செய்கிறார். அதே போல் ஹக்கீம் ஷாஜகானும் சைக்கோத்தனத்தின் உச்சத்தில் நின்று நடித்து மிரட்டியிருக்கிறார்.

  AWW Moments 😫

  • படத்தின் பிரதான கருத்து சாதாரணமான வாழ்க்கை வாழ வேண்டும் என்கிற சிக்குபாண்டியின் ஆசைதான். இந்தக் கருத்தை ஆழமாகப் பதிய வைத்திருந்தால் படமும் நம் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கும். திடீரென சிக்கு பாண்டிக்கு வீரம் எழுகிறது, திடீரென தன்னுடைய ஆசையை அப்போது அறிமுகமாகியிருக்கும் லாரி டிரைவரிடம் சொல்வது, அந்த சமயம் ஒரு ஃப்ளேஷ்பேக் சொல்லி ஒரு பர்ஸை சிக்கு பாண்டியிடம் கொடுப்பது என எல்லாமே திடீர் திடீரென நடந்து முடிந்துவிடுகிறது.
  • ஹக்கீமின் நடிப்பு பாராட்டுக்குரியது என்றாலும் போலீஸ்களை இவர் டீல் செய்த விதமும், அவர்களை மட்டம் தட்டி பேசும் வசனங்களும் ஏற்க முடியாமல் போகிறது. சைக்கோத்தனத்தின் உச்சத்திற்கு செல்லும் ஹக்கீம் இந்த காட்டையே கொளுத்த வேண்டும் என்கிறார், ஏன் என்று கேட்கும் போலீஸை இழிவாய் நடத்துகிறார். அவரைப் பற்றின எந்தவித பின் கதையும் தெரியாமல் அந்த காட்சிகளைப் பார்ப்பதற்கு ஓட்டாமல் இருந்தது.
  • ஒட்டுமொத்தமாக படத்தை அணுகும்போது சில்லு சில்லாக ஆங்காங்கேதான் படத்தை ரசிக்க முடிகிறது. ரெட்ரோ ஸ்டைலில் இடம்பெற்ற டைட்டில் கார்டு, ரசிக்க வைக்கும் விஜய் சேதுபதியின் கதை சொல்லல், எதிர்பாராமல் நிகழும் கேளிக்கை விபத்து, வில்லனின் மிரட்டல் பர்ஃபாமன்ஸ், பிடிக்காதார்களுக்கு வைக்கும் பட்டப்பெயர்கள் என அங்கும் இங்குமாகத்தான் படம் நம்மை ரசிக்க வைக்கிறது.

  Verdict

  ஒரு சிறந்த திரை அனுபவத்திற்காகவே கடைசீல பிரியாணியை டிரை பண்ணி பார்க்கலாம்.

  Similar Movies to Watch

  • சூப்பர் டீலக்ஸ்
  • ஜிகர்தண்டா

  Rating

  Direction

  3.0/5

  Casting

  3.0/5

  Music

  3.0/5

  Screenplay

  3.0/5

  Editing

  3.0/5

  Overall Rating

  3.0/5