வித்தியாசமான கதைக்களம்; ஆனால்..?! `Kudi yedamaithe’ பார்க்கலாமா வேண்டாமா?

One Line

2020 பிப்ரவரி 29 அன்று இரவு 12 மணிக்கு ஒரு விபத்தில் இருவரும் டைம் லூபில் சிக்கி செத்து செத்து வருகிறார்கள். இதைப் பயன்படுத்தி குழந்தைக் கடத்தலை நிறுத்துவதோடு இந்த டைம் லூப்பையும் எப்படி நிறுத்துகிறார்கள் என்பதே AHA-வில் வெளியாகியிருக்கும் `Kudi Yedamaithe’ வெப் சீரிஸின் ஒன்லைன்.

Streaming Link

https://www.aha.video/originals/kudi-yedamaithe

Story Line

தன்னுடைய வாழ்க்கையில் நடந்த ஒரு சோக சம்பவத்தால் குடிக்கு அடிமையாகி இருக்கும் காவல்துறை இன்ஸ்பெக்டர் துர்கா (அமலா பால்). எப்படியாவது சினிமாவில் சாதித்து ஒரு நல்ல நடிகராகிவிட வேண்டும் என்று போராடும் ஆதி (ராகுல் விஜய்). சர்வைவலுக்காக டெலிவரி பாய் வேலை பார்த்து வருகிறார். ஒரு பக்கம் துர்காவின் வாழ்க்கையில் ஒரு போலீஸ் அதிகாரியின் இறப்பு குறித்த விசாரணையோடு, வரிசையாக நடக்கும் குழந்தை கடத்தல் விவகாரமும் போய்கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம் டெலிவரி பாய் என்ற எரிச்சலான வாழ்க்கையோடு ஊரில் நடக்கும் எல்லா ஆடிஷனுக்கும் சென்று அவமானத்தை அனுபவிக்கிறார் ஆதி. அன்றிரவு ஒரு வீட்டிற்கு டெலிவரி செய்யப் போயிருக்கும் ஆதி, கை அறுபட்ட நிலையில் சாகக் கிடக்கும் ஒரு பெண்ணைப் பார்க்கிறார். அந்த அதிர்ச்சியில் வேகமாக வண்டி ஓட்டி வரும் அவர், குடிபோதையில் ஜீப் ஓட்டி வரும் துர்காவின் வாகனத்தில் பலமாக மோதுகிறார். இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தும் போகிறார்கள். அப்படியே கட் ஆகி மீண்டும் அந்த நாள் புதிதாக தொடங்குகிறது. ஒரு கட்டத்தில் இருவரும் டைம் லூப்பில் மாட்டிக்கொண்டது தெரிந்து அதை எப்படி சரி செய்கிறார்கள் என்பதோடு கை அறுபட்ட நிலையில் கிடந்த அந்தப் பெண் யார், ஒரே ஸ்டைலில் குழந்தைகளை கடத்துவது யார், எதற்காக துர்கா குடிக்கு அடிமையாகியிருக்கிறார் போன்ற மர்மங்களுக்கு தீர்வு சொல்கிறது மீதிக் கதை.

WoW Moments 🤩

இப்படி ஒரு வித்தியாசமான கான்செப்டிற்காகவே மொத்த குழுவையும், கிரியேட்டர்களையும், இயக்குநரையும் பாராட்டலாம். லூசியா, யூ டர்ன் போன்ற படங்களை இயக்கிய பவன் குமார்தான் இதை இயக்கியிருக்கிறார். இப்படி ஒரு சிக்கல் நிறைந்த கதையை காட்சிகளாக பிசிறு இல்லாமல் காட்ட நினைத்திருக்கிறார்கள். டைம் லூப், டைம் டிராவல் என்று வந்துவிட்டாலே சயின்ஸ் ஃபிக்‌ஷன் என்ற ஒரு ஜானரும் ஒட்டிக்கொள்ளும். அதை நம்பகத்தன்மையோடு எடுப்பதுதான் இவர்களின் சவால். அதை டீல் செய்த விதம்தான் இந்த சீரிஸின் டாப் நாட்ச்!

கிரியேட்டர் சொல்ல வருவதை உணர்ந்து கேமராவை கையாண்டிருக்கிறார் ஒளிப்பதிவாளர். ரிப்பீட் மோடில்தான் காட்சியின் ஓட்டமானது அமைந்திருக்கும். இதில் மெயினாக இடம்பெற்றிருக்கும் 5 காட்சிகளும் சின்ன சின்ன மாறுதல்களோடு ஒன்று போலத்தான் நடக்கும். கதைக்கு இப்படியான காட்சி ஓட்டம் தேவைப்படுவதால் அதை உணர்ந்து கேமரா ஒர்க் செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் அத்வைத்தா குருமூர்த்தி. தவிர கேமராவில் இவ்வளவு சிக்கல்கள் இருந்தால் எடிட்டர் எப்பேற்பட்ட சவால்களை கையாண்டிருப்பார்?! சுரேஷ் ஆறுமுகமுகத்தின் நேர்த்தியான உழைப்பின் மூலம் வேறு ஒரு த்ரில்லர் உணர்வைக் கொடுக்கிறது இந்த சீரிஸ்.டைம் லூப்பில் சிக்கும் அமலா பால், ராகுல் விஜய் ஆகிய இருவரும்தான் பிரதான கதாபாத்திரம். அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து நல்ல நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். ஒரே காட்சி மீண்டும் மீண்டும் நடப்பதால் ஒரே பூட்டேஜை பயன்படுத்தாமல் வேறு வேறு காஸ்ட்யூம்ஸ் அணிந்து நடித்திருக்கிறார்கள். நிஜ காரணம் இருவருக்கும் தெரிந்த பின் அதற்கு ஏற்ற மாதிரியும் நடிக்க வேண்டும். டைரக்டர் சொல்ல வருவதை தங்களது நடிப்பின் மூலம் கொண்டு வந்திருக்கிறார்கள்.

AWW Moments 😫

டைம் லூப்பை இன்னும் கொஞ்சம் குறைத்திருந்தால் க்ரிஸ்ப்பாக இருந்திருக்கலாம் என்ற எண்ணம் தோன்றாமல் இல்லை. டாம் க்ரூஸ் நடித்த Edge Of Tomorrow கான்செப்ட்டில்தான் இந்த சீர்ஸையும் டீல் செய்திருக்கிறார்கள். இருப்பினும் காட்சிக்கு காட்சி அவர்கள் காட்டியிருந்த கிரியேட்டிவிட்டியை கொஞ்சம் கதையிலும் காட்டியிருக்கலாம். காட்சிதான் பிரமிக்க வைக்கிறதே தவிர கதையாக இதுதான் நடக்கும் என எளிதில் கணிக்குபடியாகத்தான் இருந்தது.
இசையமைப்பாளருக்கு இதில் புகுந்து விளையாட ஏகப்பட்ட ஸ்கோப் இருந்தது. இவர் கற்றுக்கொண்ட மொத்த வித்தையையும் டைட்டிலில் மட்டுமே இறக்கியிருக்கிறார். அதுவும் 1953-ல் வெளியான தேவதாஸு படத்திலிருந்து இன்ஸ்பயர் ஆகியிருக்கிறார். பவன் குமார் இயக்கிய லூசியா, யூ டர்ன் ஆகிய இரண்டு படங்களுக்கும் இவர்தான் இசையமைப்பாளர். படத்தில் கலக்கிய இவர், வெப் சீரிஸ் என்பதாலோ என்னவோ கொஞ்சம் மட்டுமே விளையாட முடிந்திருக்கிறது.

Verdict

வித்தியாசமான ஒரு களத்தை நம்ம ஊர் ஃப்ளேவரில் அனுபவிக்க `குடி எடமாய்தே’ வெப் சீரிஸுக்குள் நிச்சயம் போயிட்டு வரலாம்!

Similar Movies to Watch

Lucia
Edge of tomorrow
The tomorrow war
You Turn

Rating

Direction

4/5

Casting

4/5

Music

3.5/5

Screenplay

4/5

Editing

4/5

Overall Rating

4/5