* படத்தில் எங்கு திரும்பினாலும் கலர்ஃபுல்லான விஷுவல்கள் கண்களை நிறைக்கின்றன. ஃபேன்டஸி – அனிமேஷன் என்பதால் விஷுவலில் புகுந்து விளையாடியிருக்கிறார்கள். இதில் கூடுதல் ஸ்பெஷல் என்னவென்றால் படத்தின் மொத்த அனிமேஷனையும் வொர்க் ஃப்ரமில் தயார் செய்துள்ளனர். வீட்டில் இருந்தே இவ்வளவு துல்லியமாக எப்படி வேலை பார்க்க முடியும் என்கிற ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது இந்த படம்.
* Sea monsters – Land monsters என்கிற இந்த பார்வையை குழந்தைகளின் லாங்குவேஜில் சிறப்பாக கடத்தியிருக்கிறார்கள். வேற்று கிரகவாசிகளை போல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கிறார்கள். இறுதியில் அதை Myth ஆக உடைத்து சமத்துவம் போற்றுவோம் ரக கிளைமாக்ஸ் செம சென்டிமென்டாக ஒர்க் ஆகியிருக்கிறது.
* ரசிக்கும்படியான காமெடி டிராக் கதையோடு சேர்த்து இன்னொரு பக்கம் பயணித்து கொண்டு வருகிறது. கடலில் இருக்கும் மனிதர்கள் நிலத்தில் வந்தால் சாதாரண மனித தோற்றத்திற்கு மாறிவிடுவார்கள். ஒருவேளை அவர்கள் மீது தண்ணீர் பட்டால் நிஜ அடையாளம் தெரிந்துவிடும். இதை சிறப்பாக பயன்படுத்தி காமெடியில் புகுந்து விளையாடி இருக்கிறார்கள் இதன் கிரியேட்டர்கள்.
* லூகா – ஆல்பெர்ட்டோ இந்த இருவருக்குமான ஃப்ரெண்ஷிப்பை நிதர்சனத்தோடு காட்டியிருக்கிறார் இயக்குநர். ஒரு ஃப்ரெண்ஷிப் புதிதாக எப்படி பிறக்கிறது, அவர்கள் செய்யும் லூட்டி, இவர்களுக்குள் இருக்கும் Possessiveness, கோபம், சண்டை, பாசம் என ஒட்டுமொத்த உணர்வையும் மிகைபடுத்தாமல் அழகியலோடு காட்டியிருக்கிறார்கள். அந்த இரு கேரக்டர்களுக்கும் குரல் கொடுத்தவர்கள் கச்சிதமான தேர்வு. கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து சிறப்பாக டப்பிங் கொடுத்திருக்கிறார்கள்.
0 Comments