Hell என்று சொல்லப்படும் நரகத்தை பல்லாயிரம் ஆண்டுகளாக ஆள்பவர் லூசிஃபர் (டாம் எல்லிஸ்). இவரது தந்தைதான் கடவுள். இவருக்கு பல சகோதர, சகோதரிகள் இருந்தும் அமெண்டடீல்தான் (டிபி. வுட்சைட்) நெருங்கிய சகோதரர். இவர் சொர்கத்தின் ஏஞ்சல். மனித உருவில் லாஸ் ஏஞ்சல்ஸுக்கு வருகை தந்திருக்கும் லூசிஃபருக்கு க்ளோயி டெக்கர் (லாரன் ஜெர்மன்) என்பவர் மீது அதீத காதல் ஏற்பட்டுவிடும். 5 சீஸன்களின் கதையும் குறிப்பிட்ட சிலரைச் சுற்றிதான் நடந்துகொண்டிருக்கும். க்ளோயி டெக்கர் LAPD-யில் டிடெக்டிவ்வாக இருப்பார். தன்னிடம் இருக்கும் சக்தியையும், பேச்சு திறமையையும் வைத்து லூசிஃபர் LAPD-யில் கன்சல்டென்ட்டாக பணிபுரிவார். அந்த சமயத்தில் ஏற்படும் பிரச்னைகள், காதல், மோதல் குழப்படிகள் என எல்லாம் கலந்த கலவையாய் போய்க்கொண்டிருக்கும். திடீரென ஒரு பிரச்னையின்போது கடவுள் பூமிக்கு வருகை தந்திருப்பதோடு தான் ஓய்வு பெறப்போவதாகவும் சொல்வார். ஒரு பெரிய போரை நிகழ்த்தி லூசிஃபர் கடவுள் பொசிஷனை பெற்றுக்கொள்வார். ஆனால், ஏதோவொரு உறுத்தல் இவரை சுற்றிக்கொண்டிருக்க, தான் கடவுளாக பொறுப்பேற்பதற்கு முன்னாள் தன்னை தயார்படுத்திக்கொள்வதோடு இவரது காதல் வாழ்க்கையையும் எப்படி வழிநடத்துகிறார் என்பதே லூசிஃபர் ஃபைனல் சீசனின் கதை.
0 Comments