`மாடத்தி’ படம் எப்படி? Movie Review

Maadathy Review
One Line

ஆதிக்க சாதியினரின் அடக்குமுறையால் அவதிப்படும் புதிரை வண்ணார்களின் கதைதான் இந்த `மாடத்தி’.

Streaming Link

Story Line

ஆதிக்கச்சாதிகளால் எப்படி பட்டியலினச் சாதிகள் ஒடுக்கப்படுகிறதோ, அதே போல் பட்டியலினச் சாதிகளால் ஒடுக்கப்படுபவர்கள்தான், புதிரை வண்ணார்கள். ஊரைவிட்டு ஒதுக்கிவைக்கப்பட்ட இவர்களின் குலத்தொழிலே, தாழ்த்தப்பட்ட மக்களின் துணிகளை துவைப்பதுதான். அந்தத் தொழில் செய்பவர்கள்தான் சுடலையும், வேணியும். இவர்களின் மகள்தான் யோசனா. தனது அப்பா, அம்மாவைப் போல் அடிமையாக வாழ விரும்பாத யோசனா, ஊருக்குள் சுற்றித்திரிய ஆசைப்படுகிறாள். திருவிழா நடக்கும் சமயத்தில் யாருக்கும் தெரியாமல் ஊருக்குள் செல்கிறாள் யோசனா. யோசனாவுக்கு என்ன ஆச்சு; மாடத்திக்கும் யோசனாவுக்கும் என்ன சம்பந்தம் என்பதுதான் ‘மாடத்தி’ படத்தின் க்ளைமேக்ஸ்.

மாடத்தி சினிமா விமர்சனம்

WoW Moments 🤩

* படத்தில் நடித்திருக்கும் நடிகர் – நடிகைகளின் தேர்வு மிகவும் நேர்த்தியாக இருந்தது. ஒவ்வொருவரும் கதாபாத்திரத்திற்கு ஏற்றார் போல் இருந்தார்கள். நடிப்பிலும் எந்தக் குறையும் வைக்கவில்லை. குறிப்பாக யோசனாவாக நடித்த அஜ்மினா காசிமும், யோசனாவுக்கு அம்மாவாக நடித்திருந்த செம்மலர் அன்னமும்  சிறப்பாக நடித்திருந்தார்கள்.
* படத்தின் மிகப்பெரிய பலமே வசனமும், வட்டார வழக்கு மாறாத பேச்சும்தான். சாதி அரசியலை எதிர்த்துப் பேசும் படங்களில் வசனங்கள் மிகவும் முக்கியம் என்பதை உணர்ந்து எழுதியிருக்கிறார்கள் ரபீக் இஸ்மாயிலும், கிரிக்கெட் மூர்த்தியும்.
* பெரும்பாலும் சுயாதீன திரைப்படங்களில் கன்ட்டென்டிற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் டெக்னிக்கல் விஷயங்களுக்கு கொடுக்கப்படாது என்றே சொல்லாம். ஆனால், ‘மாடத்தி’யில் அந்த குறை துளியும் இல்லை. ஒளிப்பதிவு, எடிட்டிங், சவுண்ட் என எல்லாமே படத்தோடு நம்மை ஒன்றிப்போக வைத்திருக்கிறது. குறிப்பாக, படத்தின் செட் வொர்க் ரொம்பவே எதார்த்தமாக இருக்கிறது. மெயின் ஸ்ட்ரீம் படங்களுக்கு நிகராக ஒரு முழுமையான படத்தை கொடுத்திருக்கிறார், இயக்குநர் லீனா மணிமேகலை.
*  புதிரைவண்ணார்கள் அளவில் சிறுபான்மை சாதிதான். இவர்களுக்கு சாதிச்சான்றிதழ் கிடைப்பதே சிரமமான நிலையில், இவர்கள் எத்தனை சதவீதம் இருக்கிறார்கள் என்பதற்கும் எந்த முறையான ஆவணமும் இல்லை. பலருக்கும் தெரியாத புதிரை வண்ணார்களின் பிரச்னையை பேசியிருப்பதாலேயே இது முக்கியமான படமாக இருக்கிறது.
மாடத்தி சினிமா விமர்சனம்

AWW Moments 😫

* படத்தின் நீளம் 90 நிமிடங்கள்தான் என்றாலும் ரொம்பவே மெதுவாக நகர்வது சில இடங்களில் சோர்வைத் தருகிறது. திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்.

* சில கதாபாத்திரங்களின் வடிவமைப்பில் முழுமை இல்லாதது படத்தில் இருக்கும் சில குறைகளில் ஒன்று. அதிலும் முக்கிய கதாபாத்திரங்களாக வரும் யோசனாவின் தாத்தா கதாபாத்திரத்தையும், யோசனா ஒருதலையாகக் காதலிக்கும் பன்னீர் கதாபாத்திரத்தையும் தெளிவாக வடிவமைத்திருக்கலாம்.

Maadathy Review

Verdict

பலரும் அறியப்படாத பிரச்னைகளைப் பற்றி பேசியிருப்பதாலும், சுயாதீன திரைப்படமாக இருந்தாலும் மெயின் ஸ்ட்ரீம் படங்களுக்கு நிகரான குவாலிட்டில் படத்தை இயக்கியிருப்பதாலும், தவிர்க்காமல் ‘மாடத்தி’யைப் பார்க்கலாம்.

Maadathy Movie Review

Similar Movies to Watch

லீனா மணிமேகலை இயக்கிய பிற படங்களைப் பார்க்கலாம்.

  • செங்கடல்
  • தேவதைகள்
  • பெண்ணாடி
Maadathy

Rating

Direction

3.5/5

Casting

3.5/5

Music

3/5

Screenplay

2.5/5

Editing

3/5

Overall Rating

3/5