பொன்ராம் பட டெம்ப்ளேட்களில் சற்றும் மாறாத மற்றுமொரு படமே இந்த எம்.ஜி.ஆர் மகன். நடுவில் நாட்டு மருத்துவம் பற்றியும், மலைகளில் கிடைக்கும் மூலிகைகள் பற்றியும் படத்தில் சொல்வார்கள். அது படம் நெடுக வந்திருந்தால் சற்று வித்தியாசமாக இருந்திருக்கும். ஆனால் லவ், காமெடி, சென்டிமென்ட், அப்பா – மகன் க்ளாஷ் என இது ஒரு க்ளிஷேவான படம்தான்.
படத்தின் இசையமைப்பாளர் அந்தோனி தாசனுக்கு இது 2-வது படம். புதிதாக எந்த முயற்சியும் செய்யவில்லை. மாஸ் காட்சிகளுக்குப் பயன்படுத்தப்பட்ட பிஜிஎம் கொஞ்சமும் மைண்டில் நிற்கவில்லை. பாடல்களும் பெரிதாக ஈர்க்கவில்லை.
படம் நிலையான எந்த ஒரு டிராக்கிலும் பயணிக்கவில்லை. சத்யராஜ் – பழ கருப்பையா மோதலில் முக்கியத்துவும் கொடுக்கப்பட்டதா என்றால் இல்லை. காமெடி டிராக்கில் பயணிக்கிறதா என்றால் இல்லை. திடீரென காட்டுத்தீ வந்தது, சித்த மருத்துவம் நாட்டு மருத்துவம் பற்றி பேசப்பட்டது. இப்படி கிடைக்கும் விஷயங்களை எல்லாம் வைத்து உப்புமா செய்துவைத்திருந்தார் இயக்குநர்.
0 Comments