• Professor ரசிகர்களே உங்களுக்கு ஏமாற்றமே! – `Money Heist’ சீசன் 5 பார்க்கலாமா… வேண்டாமா?!

  One Line

  லாக்டவுனில் உலகம் முழுவதும் மாஸ் ஹிட் அடித்த வெப் சீரிஸ் மணி ஹெய்ஸ்ட். நான்கு சீசன்கள் முடிவடைந்த நிலையில் 5-வது சீசனின் முதல் வால்யூம் வெளியாகியுள்ளது. மீதமுள்ள எபிசோடுகள் 2-வது வால்யூமாக டிசம்பர் 3-ல் வெளியாகிறது. 

  முன் குறிப்பு : நான்கு சீசன்கள் பார்க்காமல் இந்த விமர்சனத்தைப் படிக்க வேண்டாம். நான்கு சீசன் பார்த்தவர்களும், இனிமேல் பார்க்கப்போகிறவர்களுக்குமானதே இந்த விமர்சனம். 

  Streaming Link

  Story Line

  நைரோபியின் இழப்பு, துப்பாக்கி முனையில் ப்ரொஃபசர் என மிகுந்த பரபரப்போடு முடிந்தது மணி ஹெய்ஸ்ட் சீசன் 4. அலிசியாவின் துப்பாக்கி முனையில் மாட்டிய ப்ரொஃபசர், துப்பாக்கி முனையில்தான் பல மணி நேரம் அவதிப்பட்டார். ஸோ, ப்ரொஃபசர் ரசிகர்களே உங்களுக்கு இது ஏமாற்றத்தையே கொடுக்கும். ஆனால், ப்ரொஃபசர் இல்லாமலே மரண மாஸாய் நகர்ந்தது 5-வது சீசனின் முதல் பாதி. கதை என்னவென்பது அனைவருக்கும் தெரிந்திருப்பதால் நேரடியாக வாவ், ஆவ் போர்ஷனுக்கு போய்விடலாம்.

  WoW Moments 🤩

  • ஆக்‌ஷன், ஹெய்ஸ்ட் போன்றவற்றை ஓவர்டேக் செய்யும் வகையில் எமோஷன்கள் இதில் அதிகப்படியாக நம்மை கனெக்ட் செய்தது. மணி ஹெய்ஸ்டின் திரைக்கதை முறை நம்மை ஆரம்பத்தில் இருந்தே ஈர்த்து வந்தது. அதில் கொஞ்சமும் விலகி நிற்காமல் அதே ஸ்டைலில்தான் திரைக்கதையானது நகர்கிறது. நிகழ்காலத்தில் நடக்கும் ஹெய்ஸ்ட் கதை, அந்த சூழலை பிரதிபலிக்கும் கடந்த கால நினைவு என ஒவ்வொருக்கும் அவரவர்களுடைய பின் கதையை அவ்வளவு அழகாக சொல்லியிருப்பார்கள்.
  • ப்ரொஃபசருக்கு அடுத்தபடியாக… ஏன் அவருக்கு நிகராக என்றுகூட சொல்லலாம். பெர்லினுக்கும் ப்ரொஃபசருக்கு நிகரான ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்த சீசனில் அவருடைய மகனை காட்டியிருப்பார்கள். ஒரு சின்ன ஹெய்ஸ்ட் ஒன்றை அரங்கேற்றி அவருக்கு அதை கற்றுத் தருவதோடு தன்னுடைய பார்வையில் வாழ்க்கை என்னவென்பதை இரண்டே வரியில் சொல்லியிருப்பார். அது அல்டிமேட். அவருக்கு அடுத்தபடியாக நைரோபிக்கும் டோக்கியோவுக்கும் கடந்த காலத்தில் ஒரு உரையாடல் நடந்திருக்கும். அதைப் பார்க்கும்போதும் கண்ணில் ஜலம் வெச்சுப்பேள். அவரைத் தொடர்ந்து டென்வர் மேல் ஜூலியாவுக்கு இருக்கும் கடந்த கால காதல் உணர்வும் க்யூட்.
  • இவர்களைத் தவிர டோக்கியோ ப்ரொஃபசர் டீமில் எப்படி இணைந்தார் என்பது சுவாரஸ்யமாக இருந்தது. அவருக்குள் எப்போது ஒரு வித இறுக்கத்துக்கான காரணத்தை இந்த சீசனில் சொல்லியுள்ளார்கள். போக, ரியோ அவர் சந்தித்த முதல் சந்திப்பையும் இதில் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். டோக்கியோவை தனது டீமுக்குள் கொண்டு வர சொல்வது வேறு யாரும் இல்லை, நம்முடைய பெர்லின்தான். அந்த காட்சியில் ஆரம்பித்து, ப்ரொஃபசர் தன்னுடைய பார்வையில் வாழ்க்கையின் புரிதலை டோக்கியவிடம் சொல்லும் காட்சியும் அழுகை மெட்டீரியல்தான்.
  • மணி ஹெய்ஸ்ட் இதற்கு முன்பு வரை ஆங்காங்கே சில காட்சிகளில் மட்டும்தான் நம்மை கரைத்திருப்பார்கள். ஆனால், இந்த சீசனில் நம்முடைய நவரசத்தையும் எக்ஸ்ட்ரீம் லெவலுக்கு வெளிப்படுத்த செய்திருக்கிறார்கள். ப்ரொஃபசர் என்ற ஒருவரையே மறந்து மற்றவர்கள் ஸ்கோர் செய்திருக்கும் சீஸன் இதுவாகத்தான் இருக்கும். இதற்காக ஆக்‌ஷன் இல்லாமல் வெறும் டிராமா மட்டும்தான் இருக்கிறதா என்று கேட்டாலும் இல்லை. முந்தைய சீசன்களை காட்டிலும் இந்த சீசனில்தான் ஆக்‌ஷன் ஜாஸ்தி. ஒரு வருத்தமான விஷயம் இன்னும் Bella Ciao பாடல் இன்னும் ஒலிக்கவில்லை.
  • இவர்கள் எல்லோரையும் தவிர அர்துரோ ரோமன் இந்த சீசனில் வெளுத்து வாங்கியிருந்தார். மறுபடியும் எமோஷனைத்தான் நான் ப்ளஸ்ஸாக சொல்வேன். அவருக்குள் இருந்த ஒரு வலி அந்த வலியானால் இவர் செய்யும் கிறுக்குத்தனங்களை சிறப்பாக பார்க்கும் நமக்கும் கடத்தியிருந்தார். இந்த கேரக்டர் இதுதானே என்று செட்டான நமக்கு புதிதாக என்ன செய்யப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அதை சிறப்பாகக் கையாண்டிருந்தார்.

  AWW Moments 😫

  • ஆபீஸ் நேரத்தில் இதை பார்க்க தொடங்கினால் ஒரே ஸ்ட்ரெச்சில் மொத்த எபிசோடுகளையும் பார்க்க வைப்பது சற்று வருத்தம் (Just Kidding). ஆபீஸ் நேரத்துல இதை பார்த்துட்டு உட்கார்ந்துருந்தா ப்ரொஃபசர் அவர் ஆட்டைய போட்ட காசுல இருந்து நமக்கு ஷேரா தரப்போறாரு?!
  • ப்ரொஃபசர் இப்படித்தான் துப்பாக்கி முனையில் இருந்து தப்பிப்பார் என்று யூகித்தது போலவேதான் நடந்தது. தவிர சில காட்சிகளின் போக்கை வைத்தே நாம் அதை கணித்துவிடலாம். அப்படித்தான் ஒவ்வொரு விஷயமும் நடந்தது.

  Verdict

  ஆக, குறிப்பிட்ட சொல்ல எந்த ஒரு ஆவ் மொமன்ட்ஸும் இல்லை. ஒருவேளை பார்க்கப் பார்க்க குற்றம் கண்டுபிடிக்க வேண்டும் என்று கண்டுபிடிக்கலாம். ஆனால், ஒரு படைப்பை ஒரு முறை பார்ப்பதே போதுமானது. முந்தைய சீசன்களைப் போல் முதலில் பார்க்கும்போதே நம்மை ஈர்க்கும் விதமாகத்தான் மணி ஹெய்ஸ்ட் சீசன் 5 முதல் வால்யூம் அமைந்திருக்கிறது. ஸோ, டோன்ட் மிஸ் இட்!

  Similar Movies to Watch

  • Lupin
  • Prison Break

  Rating

  Direction

  4/5

  Casting

  4/5

  Music

  4/5

  Screenplay

  4/5

  Editing

  4/5

  Overall Rating

  4/5