ஒவ்வொரு படத்திலும் கதை, திரைக்கதை நன்றாக அமைந்ததா என்பது சந்தேகம்தான் என்றாலும் ஒவ்வொரு படத்தின் டெக்னிக்கல் விஷயங்களும் நன்றாக அமைந்திருந்தது. செட்டில் ஆரம்பித்து, லைட்டிங், கேமரா ஆங்க்கிள், கலர்ஸ் லொக்கேஷன் என அனைத்தும் சிறப்பாக அமைந்திருந்தது.
எந்த நடிகரும் சொத்தப்பலாக தங்களுடைய நடிப்பை வெளிப்படுத்தவே இல்லை. ரேவதி, பிரகாஷ் ராஜ் ஆகிய இருவருடனும் விஜய் சேதுபதியின் உரையாடல், பார்வதி – சித்தார்த் காம்போவின் நடிப்பு, சூர்யாவின் துள்ளலான காதல் காட்சிகள், அரவிந்த் சாமியின் மேதாவித்தனம் நிறைந்த நடிப்பு, ‘பசங்க’ ஶ்ரீராம் பர்ஃபாமன்ஸ், டெல்லி கணேஷ் என ஒவ்வொருவரும் தங்களுடைய நடிப்பின் மூலம் அந்த பாத்திரத்திற்கான நியாயத்தை செய்திருக்கிறார்கள்.
கருணை: ரேவதி, பிரகாஷ் ராஜ் ஆகிய இருவருடனும் தனித்தனியே விஜய் சேதுபதி தன்னுடைய வலியை எடுத்து சொல்லும் காட்சி, அதற்கு அவர்கள் சொல்லும் விளக்கம் டச்சிங்!
சிரிப்பு: லொக்கேஷனில் ஆரம்பித்து ஒளிப்பதிவு, செட் என படத்தின் டெக்னிக்கல் விஷயங்கள், மேக்கிங் அனைத்தும் ரிச்சாக இருந்தது.
ஆச்சரியம்: மேதாவித்தனத்தில் ஆரம்பித்து தான் செய்த ஒரு பெரிய தவறு வரை அனைத்து எமோஷனையும் ஒருவித இறுக்கத்துடன் ஹேண்டில் செய்திருக்கிறார் அரவிந்த் சாமி.
அருவருப்பு: கும்பகோணத்தில் 1965 ஆம் ஆண்டு நடக்கும் கதை என்பதால் அந்த காலகட்டத்தை அப்படியே கண்முன் கொண்டுவந்திருக்கிறார்கள். தி.ஜானகிராமனின் சிறுகதைக்கு திரைமொழியால் நியாயம் சேர்த்திருக்கும் திரைக்கதை அமைத்திருக்கிறார்கள்.
அமைதி: அமைதி என்கிற எமோஷனுக்கு நேரெதிரான போரைக் களமாக எடுத்துக்கொண்டு, ‘அமைதி இருக்கிறதா’ என கேள்வியோடு படத்தை முடித்திருப்பது அருமை.
கோபம்: இயக்குநராக அரவிந்த் சுவாமி நம்மை பிரமிக்க வைக்கிறார். கோபம் என்கிற எமோஷனுக்காக கதை எழுதாமல், கோபம் எப்படி மனிதர்களை மாற்றுகிறது என காட்டியிருக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு, ஏ.ஆர்.ரஹ்மான் இசை என படம் டெக்னிக்கலாகவும் மிரட்டலாக இருக்கிறது.
பயம்: பார்வதியின் பயந்து நடுங்கும் கண்களும், சித்தார்த்தின் குரூர சிரிப்பும்.
வீரம்: அடர் காட்டையும், அதன் அழகையும் ஆபத்தையும் அப்படியே பறவைக் கோணத்தில் கொண்டு வந்த ஒளிப்பதிவு அட்டகாசம். முப்பது நிமிடத்துக்குள் கச்சிதமாக கதையைக் கொண்டு சென்ற திரைக்கதை.
காதல்: ஆர்ப்பாட்டமில்லாத காதல், இளமை துள்ளும் வசனங்கள்.
0 Comments