சேலம் மாவட்டம் ஐ.பி.எஸ் பொன் மாணிக்கவேல் (பிரபு தேவா). நியாயத்தின் பக்கம் நிற்க முடியாமல் போலீஸ் வேலையை ராஜினாமா செய்து மாடு மேய்கிறார். பின் சென்னையில் நீதிபதி ஒருவர் இறந்ததையடுத்து பொன் மாணிக்கவேல் அந்த வழக்கை விசாரிக்க குறுக்கே மறுக்கே ஓடித்திரியும் தன் மனைவி (அன்பரசி மாணிக்கவேல்) நிவேதா பெத்துராஜை அழைத்துக்கொண்டு சென்னை வருகிறார். நீதிபதியைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் ஒருவரும் கொல்லப்பட அடுத்தடுத்து லிஸ்டில் பெரிய தலைக்கட்டின் பெயர்கள் அடிபடுகிறது. இதற்கெல்லாம் பின்னால் யார் இருக்கிறார்கள், எதற்காக கொல்லப்படுகிறார்கள், யார் கொல்கிறார்கள், இறுதியில் பார்த்த நாம் உயிரோடு இருக்கிறோமா என்பதுதான் பொ(பு)ன் மாணிக்கவேல் படத்தின் மீதிக்கதை.
0 Comments