எப்படியாவது வாழ்க்கையில் பெரியாள் ஆகிவிட நினைக்கும் பாஸ்கர், இரட்டை வாழ்க்கை வாழும் பலே கில்லாடி. ஒரு பக்கம் சின்னச் சின்ன திருட்டுகள் செய்து, ஜெராக்ஸ் கடையில் வேலை செய்பவர். அந்த ஜெராக்ஸ் கடையிலும் செவ்வனே என வேலை செய்ய மாட்டார். கிடைக்கும் கேப்களில் கேப்மாரித்தனம் செய்து காசு சம்பாதிப்பார். இன்னொரு பக்கம் ஐடியில் வேலை செய்வதாக கூறி சஞ்சனாவை (மேகா ஆகாஷ்) காதல் செய்து ஏமாற்றிக் கொண்டிருப்பார். ஆனால், காதலில் நேர்மையாக இருப்பார். இன்னொரு டிவிஸ்ட் என்னவென்றால் இவருக்கு திரு… இல்லை வேண்டாம் படம் பார்த்து தெரிஞ்சுக்கங்க. இப்படிப்பட்ட சிக்கல் மிகுந்த வாழ்க்கையை ஜஸ்ட் லைக் தட் டீல் செய்து வாழ்ந்து வருவார். திருட்டின் லெவல் கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து ஒரு மெகா திருட்டு கேஸில் மாட்டிக்கொள்வார், தவிர இவரது இரட்டை வாழ்க்கையும் ஒரு நாள் அம்பலமாகிவிடும். அதையெல்லாம் எப்படி சமாளிக்கிறார் என்பதே மீதிக் கதை.
0 Comments