Dwayne Johnson ரசிகர்களை இப்படி ஏமாத்திட்டீங்களே? – `Red Notice’ பார்க்கலாமா, வேண்டாமா?!

One Line

க்ளியோபட்ராவுக்கு சொந்தமான பழமைவாய்ந்த மூன்று தங்க நகைகளைத் திருட முயற்சிக்கும் இரண்டு திருடர்கள், அவர்களை சேஸ் செய்யும் ஒரு போலீஸ் ஆகிய மூவரின் கதைதான் ரெட் நோட்டீஸ்.

Streaming Link

Story Line

உலகிலேயே நம்பர் ஒன் ஆர்ட் திருடன் என்று தன்னை நினைத்துக் கொண்டிருப்பவர் நோலன் பூத் (ரையான் ரெனால்ட்ஸ்). அதனால் க்ளியோபட்ராவுக்கு சொந்தமான பல வருடங்கள் பழமைவாய்ந்த மூன்று தங்க முட்டைகளைத் திருட ஆரம்பிக்கிறார். வெற்றிகரமாக முதல் தங்க முட்டையை திருடிவிட்டு வீடு வந்து சேர்கிறார், ஆனால், அவர் வருவதற்குள் FBI ஏஜென்ட் ஜான் ஹார்ட்லி (டிவைன் ஜான்சன்) அவரை வரவேற்கிறார். போலீஸ் அவரைக் கைது செய்து கொண்டு செல்லும் கேப்பில் கைபற்றப்பட்ட தங்க முட்டையை இன்னொருவர் டூப்ளிகேட் முட்டையை வைத்துவிட்டு ஆட்டையைப் போடுகிறார் அவர் யார் என்று பார்த்தால் சாரா ப்ளாக் என்கிற தி பிஷப் (கேல் கேடட்). இந்த முட்டை தன்னால் ஹார்ட்லி பக்கம் திரும்ப, `நீதான்டா அந்த முட்டையைத் திருடிருக்க’ என்று இன்டர்போல் அவரைக் கைது செய்கிறது. ஆக, அந்த இரு திருடர்களுக்கும் மூன்று முட்டைகளைத் திருட வேண்டும், ஏஜென்ட் ஹார்ட்லிக்கு தான் நல்லவர் என்று நிரூபிக்க வேண்டும். இதுதான் ரெட் நோட்டீஸ் படத்தின் மீதிக்கதை.

WoW Moments 🤩

  • டிவைன் ஜான்சன், கேல் கேடட் இருந்தும் கவனம் தன்னால் ரையன் ரெனால்ட்ஸ் பக்கம் செல்கிறது. டெட்பூல் படத்தில் இவர் செய்த அதகளத்தை மறக்க முடியுமா என்ன? தமிழ் ரசிகர்களுக்கு மத்தியில் இவர் பிரலமாக காரணம் தமிழில் இவருக்கு டப்பிங் கொடுத்தவர்தான். அந்தப் படம் அளவிற்கு இல்லையென்றாலும் தான் வந்துபோகும் காட்சிகளில் கவர வைத்தார்.
  • வெறும் 2 மணி நேரத்தில் ரோம், Bali, ரஷ்யா, லண்டன் என பல்வேறு நாடுகளுக்கு அழைத்துச் சென்றுவிட்டது. ஒரு இடத்தில் தேங்காத ஹரி படத்தைப் போல் படத்தின் திரைக்கதை இங்கும் அங்குமாக ஆர்பரித்து ஓடியது. இதனால் பெரிதாக போர் அடிக்காமல் படம் நகர்ந்தது.
  • படத்தின் முதல் காட்சியே வேறு லெவல் சண்டை காட்சியோடு ஆரம்பித்தது. டிவைன் ஜான்சன் துரத்த பார்க்கர் முறையில் ரையான் தப்பித்து ஓட என ஸ்டன்ட் காட்சிகள் மிக இயல்பாகவும் சூப்பரகாவும் இடம்பெற்றிருந்தது. அதற்குப் பின் கேல் கேடட் இவர்கள் இருவரையும் அடித்து வெளுக்கும் காட்சியின்போது அவரும் ஹார்ட்ஸ் வாங்கினார். பாவம் டிவைன் ஜான்சனுக்குத்தான் எந்தவித மாஸும் க்ளாஸும் இல்லாமல் போனது.

AWW Moments 😫

  • We’re the millers, Central Intelligence, Skyscraper ஆகிய படங்களை இயக்கிய ராசன் மார்ஷல்தான் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். மேலே சொன்ன மூன்று படங்களையும் கலந்துகட்டி எடுத்திருக்கிறார். காமெடியாகவும் படத்தை அணுகாமல், பரபரப்பான ஒரு ஆக்‌ஷன் படமாகவும் அணுகாமல் மேலோட்டமான ஒரு திரைக்கதையினால் படத்தை அணுகியிருக்கிறார்.
  • பொதுவாக படத்தின் சிஜி விஷயங்கள் அது சிஜி என்று தெரிந்தாலும் நம்பகத்தன்மையோடு இடம்பெறும்போது நம்முடைய கவனத்தை ஈர்க்கிறது. ஆனால் இந்தப் படத்தின் சிஜி அப்பட்டமாக எந்த வித நம்பகத்தன்மையும் இல்லாமல் இடம்பெற்றது. Bull fighting மைதானத்திற்கு மத்தியில் இடம்பெற்ற காட்சி, கடைசி முட்டையைத் திருடப்போகும் காடு என ஆங்காங்கே காமெடி சிஜிக்கள் இடம்பெற்றிருந்தன.
  • தொன்றுதொட்டு தமிழ் சினிமாவில் சில கதாபாத்திரங்கள் டெம்ப்ளேட்டான ஒரே கேரக்டரில் நடித்துக்கொண்டிருப்பார்கள். ‘அட்வைஸ் ப்ரோ’ சமுத்திரக்கனியில் ஆரம்பித்து ‘கிராமத்து கேரக்டர்’ சசிகுமார், ‘போலீஸ்’ கே.எஸ்.ரவிக்குமார் போல் ஹாலிவுட்டில் நாம் ராக் என்கிற டிவைன் ஜான்சனைச் சொல்லலாம். இவர் நடித்த முக்கால்வாசி படங்களில் இவர் போலீஸ்தான். போக இந்தப் படத்தில் இவரது கதாபாத்திரத்துக்கு வெயிட்டேஜும் இல்லை. கேரக்டர் மாத்துங்க ராக் டூட்.

Verdict

இது வழக்கமான ஒரு கொஞ்சம் ஆக்‌ஷன் – கொஞ்சம் காமெடி படம். இந்த வீக் எண்ட்டின் பாப் கார்ன் படமாக இதையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

Similar Movies to Watch

  • Central Intelligence
  • We’re the millers
  • Fast and furious movie series

Rating

Direction

3/5

Casting

3/5

Music

3/5

Screenplay

3/5

Editing

3/5

Overall Rating

3/5

0 Comments

Leave a Reply