சந்தானத்தின் `டிக்கிலோனா’ பார்க்கலாமா, வேண்டாமா?

டிக்கிலோனா
One Line

`ஓ மை கடவுளே’ படத்தின் கதையை எடுத்துக்கொண்டு அதோடு கொஞ்சம் சயின்ஸ் ஃபிக்‌ஷனைச் சேர்த்துக்கொண்டால் அதுதான் டிக்கிலோனா படத்தின் ஒன்லைன்.

Streaming Link

https://www.zee5.com/movies/details/dikkiloona/0-0-1z51648

Story Line

ஓ மை கடவுளே படத்திற்கு முன்பே எடுக்கப்பட்ட படம்தான் டிக்கிலோனா. சில காரணங்களால் இது அடுத்ததாக வரவேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுவிட்டது. படத்தின் கதை நேரடியாக 2027-ல் ஆரம்பிக்கிறது. EB-யில் லைன்மேனாக பணி புரிகிறார் மணி (சந்தானம்). மனநல மருத்துவமனைக்கு ஃப்யூஸ் போட வரும் அவருக்கு, அருகே ஒரு இடத்தில் டைம் மிஷின் செய்துகொண்டிருப்பது தெரிய வருகிறது. டைம் மிஷின் இருக்குமே தவிர அங்கிருக்கும் விஞ்ஞானிகளுக்கு அதை இயக்கும் ஃபார்முலா தெரியாது. மணி வருகை தந்திருக்கும் அந்த நேரத்தில் ஒரு விபத்து நடக்க, அங்கு பணியாளாக இருக்கும் ஆல்பர்ட் (யோகி பாபு) ஐன்ஸ்டீனாக மாறி டைம் மிஷினுக்கான ஃபார்முலாவை சொல்லிவிடுவார். இதை பயன்படுத்தி 2020-ல் நடந்த தனது திருமணத்தை நிறுத்த முடிவு செய்கிறார் மணி. 7 வருட காலம் வாழ்ந்து முடித்த இவருக்கு தனக்கான ஜோடி ப்ரியா (அனகா) இல்லை என முடிவு செய்கிறார்.  இங்கிருந்து போகும் மணி அங்கிருக்கும் மணியிடம் 7 வருட காலம் அவர் அனுபவித்த கொடுமைகளை சொல்லி 2020 மணியை 2027-க்கு அனுப்பி ஒரு வார காலம் வாழச் சொல்கிறார். ஒரு வாரம் கழித்து தலை தெறிக்க ஓடி வந்து கல்யாணத்தை நிறுத்தியும் விடுகிறார். நிறுத்துவது மட்டுமல்லாமல் ப்ரியாவின் தோழியான மேக்னாவை (ஷிரின்) திருமணம் செய்ய முடிவெடுக்கிறார். கடைசியில் அந்த வாழ்க்கையும் நன்றாக அமையவில்லை. இப்படி குழப்படியும் குளறுபடியும் போய்க்கொண்டிருக்கும் மணியின் வாழ்க்கை இறுதியில் என்னவானது என்பதே கதை.

டிக்கிலோனா

WoW Moments 🤩

* வழக்கம் போல் மொத்த படத்தையும் தாங்கி நிறுத்துவது சந்தானத்தின் சென்ஸ் ஆஃப் ஹ்யூமர்தான். சில இடங்களில் பட்டாசான காமெடி கலாய்களை ஜஸ்ட் லைக் தட் தெளித்துவிட்டுப் போகிறார். இவர் இல்லாமல் விஞ்ஞானிகளாக வரும் அருண் அலெக்ஸாண்டர், யோகி பாபு, ரோஷன் ஆகியோர்களின் காமெடிகளும் ஆங்காங்கே சிரிக்க வைக்கிறது.

* நட்பே துணை படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான அனகாவுக்கு இந்தப் படத்தில் அந்தப் படத்தைக் காட்டிலும் ஸ்கோப் அதிகம் இருந்தது. அதைப் பயன்படுத்தி நன்றாகவே நடித்திருக்கிறார்.

* சயின்ஸ் ஃபிக்‌ஷன் அதோடு சேர்த்து ஒரு காதல் கதை என வித்தியாசமான முயற்சியை மேற்கொண்டிருக்கிறார் இயக்குநர். படத்தின் ஓரிரு காமெடிகள் மட்டும் செய்துவிட்ட போன சிலர் படம் முடியும் வரை மனதில் நிற்கிறார்கள். நிழல்கள் ரவியின் வாய்ஸ் ஓவர் மற்றும் அவரின் க்ளைமாக்ஸ் டிவிஸ்ட் அல்டி.

டிக்கிலோனா

AWW Moments 😫

* படமே காமெடி களத்துக்கானதுதான் என்பதால் ஸ்க்ரிப்ட்டில் காமெடியில் கதகளியே ஆடியிருக்கலாம். அந்தளவிற்கு ஸ்பேஸ் இருந்தது. ஆனால், வெறும் சந்தானத்தையும் அவரது டைமிங் கவுன்டர்களையும் மட்டுமே நம்பி வசனங்களில் சொதப்புவது போல் இருந்தது.

* ஆங்காங்கே வந்த காட்சிகளில் பெண்கள் என்றாலே இப்படித்தான் என்கிற ஸ்டீரியோடைப் மனோபாவத்தை மாற்றியிருக்கலாம் என்ற எண்ணம் தோன்றாமல் இல்லை. அரைகுறையாக டிரெஸ் அணிந்து டிக்டாக் செய்வது, பாய் பெஸ்டியால் கல்யாணம் செய்தவர்கள் படும் கஷ்டம் போன்றவற்றை எல்லாம் வம்படியாகத் திணித்ததுபோல் இருந்தது.

* படத்தில் பல கேரக்டர்கள் வந்து போகிறார்கள். சந்தானத்தை தவிர அனைவரும் ஓரிரு காட்சிகளில் மட்டுமே வந்து போகிறார்கள். அவர்களுக்கான நேரத்தை ஒதுக்கிக் கொடுத்து கதையில் மெனக்கெட்டிருந்தால் படம் வேறு லெவலில் வந்திருக்கும். காரணம் சில இடங்களில் சந்தானத்தை ஓவர் டேக் செய்யும் அளவிற்கு இருந்தது அப்படி வந்தவர்களின் பர்ஃபாமன்ஸ்.

* படத்தில் தேவையில்லாத ஆணிகள் நிறைய இருந்தது. அதை மட்டும் நீக்கிவிட்டு படத்தை செம ஹ்யூமராக எடுத்திருக்கலாம்.

டிக்கிலோனா

Verdict

முழுக்க சந்தானத்தை மட்டுமே நம்பியிருக்காமல் இயக்குநர் திரைக்கதையிலும் வசனத்திலும் உழைப்பை கொட்டியிருந்தாலும் ஒரு சிறந்த சயின்ஸ் ஃபிக்‌ஷன் காமெடி சினிமாவாக டிக்கிலோனா அமைந்திருக்கும்.

டிக்கிலோனா

Similar Movies to Watch

* பாரிஸ் ஜெயராஜ்

* சக்கபோடு போடு ராஜா

* A1

டிக்கிலோனா

Rating

Direction

2.5/5

Casting

2.5/5

Music

2.5/5

Screenplay

2.5/5

Editing

2.5/5

Overall Rating

2.5/5