துபாயில் இருந்து நண்பர் ஒருவருக்கு ரெஜிஸ்டர் மேரேஜ் செய்து வைக்க கோயம்புத்தூர் வருகிறார் அப்துல் காலிக் (சிம்பு). தனது ஃப்ளைட் பயணித்தில் நாயகி சீதா லக்ஷ்மியை (கல்யாணி ப்ரியதர்ஷன்) சந்திக்கிறார். அவர் செல்லும் திருமணத்திற்குதான் அப்துலும் செல்கிறார். ஆனால், கல்யாண பெண்ணை கடத்தி தன்னுடைய நண்பனுடன் சேர்த்து வைப்பதற்காக. அந்த முயற்சியின்போது ரஃபீக் என்பவர் இவர்களது காரில் மோதி உயிரிழக்கிறார். அந்த சமயம் DCP தனுஷ்கோடிக்கு (எஸ்.ஜே.சூர்யா) அறிமுகமாகிறார் காலிக். ரஃபீக் முடிக்க வேண்டிய மிஷினை முடிக்க அப்துல் காலிக்கை அனுப்புகிறார் தனுஷ்கோடி. முதலமைச்சரை கொல்வதுதான் அந்த மிஷின். அதேபோல் முதலமைச்சர் கொல்லப்படுகிறார், அந்த சிக்கலில் அப்துல் காலிக் மாட்டுகிறார், பின் அவரும் கொல்லப்படுகிறார், செத்து கண் முழித்து பார்க்கும்போது ஃப்ளைட்டில் அதே நாள் மறுபடியும் ஆரம்பிக்கிறது. அதன் பின்னர் வர்றார், சுடுவார், போனார், ரிப்பீட்டு… இதுதான் மாநாடு. இந்த டைம் லூப் எப்படி முடிந்தது என்பதே கதை.
0 Comments