The Little things படம் எப்படி? Movie Review

One Line

ஒரு நகரத்தில் இளம்பெண்கள் தொடர்ந்து கொலை செய்யப்படுகிறார்கள். துப்பறியும் காவலருக்கு உதவியாக இன்னொரு வயதான காவலர் கடந்த காலத்தை சுமந்துகொண்டு வருகிறார். அந்தத் தொடர் கொலையாளி யார்? அந்தக் காவலர்கள் என்ன செய்தார்கள்? அந்தக் காவலர்களை சந்தேகத்துக்குரியவன் என்ன செய்தான்?

Streaming Link

Story Line

சீரியல் கில்லரைத் தேடும் காவலர்கள் என்ற வழக்கமான கதைக்களத்தில், டென்ஸல் வாஷிங்டன், ரமி மாலிக் மற்றும் ஜேரட் லாட்டோ போன்ற அசகாய நடிகர்கள். பழக்கப்பட்ட கதைக்களம் என்றாலும் தங்கள் நடிப்புத்திறமையால் படத்திற்கு மரியாதை செய்கிறார்கள்.

Joe “Deke” Deacon, Kern County-யில் நடந்த ஒரு கொலை தொடர்பான சாட்சியங்களை பெற்று வர , Los Angeles காவல்துறை தலைமையகத்துக்குச் செல்கிறார். அவர் ஏற்கனவே அங்கு பணிபுரிந்தவர். அங்கு நடக்கும் தொடர்கொலைகளை விசாரிக்கும் Jimmy Baxter-க்கு தனிப்பட்ட விருப்பத்தில் உதவுகிறார். பல ஆண்டுகள் முன்பு நடந்த சில கொலைகளுக்கும் தற்போதைய கொலைகளுக்கும் இருக்கும் தொடர்புகளை கோர்த்து கிட்டத்தட்ட சந்தேகத்துக்கு உரிய ஒரு நபரை நெருங்குகிறார்கள். அதற்குப் பிறகு ‘கொலையாளியாக இருக்க வாய்ப்பிருக்கும்’ அந்த நபர் இந்த இரண்டு காவலர்களுடன் விளையாடும் ‘ஓர் உளவியல் தாக்குதல்’ தான் மீதிப்படம்.

Little Things review

WoW Moments 🤩

  • Slow Burn Thriller வகை ரசிகர்களுக்குப் பிடிக்கலாம்.
  • டென்ஸல் வாஷிங்டன், ரமி மாலிக் மற்றும் ஜேரட் லாட்டோ போன்ற நடிகர்களின் அசத்தலான பெர்ஃபார்மன்ஸ்.
  • டென்ஸல் வாஷிங்டன், கடந்த கால கொலைகள் தொடர்பான ஒரு குற்ற உணர்ச்சியிலும் தனக்கான விடிவுக்காகவும் போராடும் பாத்திரத்திலும் கச்சிதமாகப் பொருந்திப் போகிறார்.
  • ரமி மாலிக், விசாரணையின் துவக்கத்தில் இருக்கும் துள்ளலும், தான் ஒரு படி இந்த விளையாட்டில் மேலே இருக்கிறோம் என்ற மமதையுமாக சுற்றித்திரிபவர். இறுதியில் எல்லாம் உடைந்து போய் உறைந்துவிடும் காட்சி வரைக்குமாக தான் ஒரு சிறந்த நடிகன் என்பதை பதியவைக்கிறார்.
  • ஜேரட் லாட்டோ, நீண்ட முடியும் தொப்பையும் ஒய்யார நடையுமாக மிரட்டுகிறார். விசாரணைக் காட்சிகளில் அவருடைய உடல்மொழியும் உச்சரிப்பும், அலட்சியப் பார்வையும் காவலர்களிடம் காட்டும் எகத்தாளமுமாக மிரட்டுகிறார்.
  • படத்தின் முன்பகுதியில் Devil Is in the detail என்பதைப் போல கொஞ்சம் கொஞ்சமாக பிற்பகுதிக்கு அடித்தளம் இடுகிறது. ஸ்பார்மா மீது சந்தேகம் விழத்தொடங்கிய பிறகு படம் முழுக்க இந்த மூவருக்குமான உளவியல் ரீதியான போராட்டமாக மாறி இது ஒரு திரில்லர் படம் என்ற நிலையில் இருந்து Psychological thriller படமாக உருமாறுகிறது.
  • நெடுஞ்சாலையில் ஜோ டீகனுடன் ஸ்பார்மா விளையாடும் ஆட்டம், விசாரணை அறையில் Good Cop, Bad Cop விளையாட்டு, ஸ்பார்மா வீட்டுக்குள் ஜோ டீகன் துப்பறியும் காட்சியின் போது அவன் செய்யும் சேட்டை, இறுதிக்காட்சிகளில் ஜிம்மி மீது ஸ்பார்மா நிகழ்த்தும் உளவியல் தாக்குதல் என Psychological thriller ரசிகர்களுக்கு படம் தீனி போடுகிறது.
டென்ஸல் வாஷிங்டன்

AWW Moments 😫

  • தொடர் கொலையாளியைத் தேடும் காவலர்கள் என்றக் கதைக்களத்திலே சில ஆயிரம் படங்களாவது உலகம் முழுக்க வெளியாகி இருக்கிறது எனும் போது, இந்தப் படமும் அந்த வரிசையில் இன்னொன்றாக சேர்ந்துவிடுகிறது.
  • ‘The past becomes the future, becomes the past, becomes the future, becomes the past, becomes the future.’ என்ற வரிகளை ஜோ உச்சரிக்கும் போது, தானாகவே True Detective வெப் சீரிஸில் Rust Cohle சொல்லும் “Time Is a Flat Circle” என்ற வசனம் நினைவுக்கு வந்து விடுகிறது. படத்தின் பல இடங்களில் இது நிகழ்ந்துவிடுகிறது.
  • Little Things படத்தின் கதையை John Lee Hancock 1993-ம் ஆண்டே ‘ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்’கிற்காக எழுதி இருக்கிறார். பல நிராகரிப்புகள், தடைகளுக்குப் பிறகு Hancock இப்போது தானே இந்தப் படத்தை இயக்கி இருக்கிறார். ஆனால், அதற்கு முன்பாகவே இந்தப் படத்தின் கதையுடனே அப்படியே ஒத்துப்போகும் Se7en, True Dective, Insomnia போன்ற படங்கள் ஏற்கனவே வெளியாகி இருக்கின்றன, அதுவும் David Fincher, Nic Pizzolatto, Christopher Nolan போன்ற தேர்ந்த கலைஞர்களால் உருவாக்கப்பட்டு பிரபலமானவை அப்படங்கள். அதனால் படத்தின் கதை முழுக்க முழுக்க ஏற்கனவே பழக்கப்பட்ட உணர்வைத் தந்துவிடுகிறது.
  • பின்குறிப்பு : அமெரிக்க ஊடகங்களில் படத்துக்கு அவ்வளவு சிறப்பான ரேட்டிங் இல்லை.
ரமி மாலிக்

Verdict

டென்ஸல் வாஷிங்டன், ரமி மாலிக் மற்றும் ஜேரட் லாட்டோ ஆகியோரின் அட்டகாசமான நடிப்பிற்காக கட்டாயம் ஒரு முறை பார்க்கலாம். Psychological thriller, Slow Burn படத்தைப் பார்க்க விரும்புபவர்கள் பார்க்கலாம்.

ஜேரட் லாட்டோ

Similar Movies to Watch

  • Se7ven
  • True Detective (Web series Season 1)
  • Insomnia (Christopher Nolan)
  • Zodiac
லிட்டில் திங்ஸ் review

Rating

Direction

3/5

Casting

5/5

Music

4/5

Screenplay

3/5

Editing

3/5

Overall Rating

3.6/5