`The Tomorrow war’ படம் எப்படி?

One Line

30 வருடங்களுக்குப் பிறகு எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் ஒரு பேரழிவைத் தடுப்பதற்காக நிகழ்காலத்தில் இருந்து கிளம்பும் ஹீரோ, என்னவெல்லாம் சாகசங்கள் செய்து உலகைக் காப்பாற்றுகிறார் என்பதே `The Tomorrow War’ படத்தின் ஒன்லைன். 

Streaming Link

Story Line

நிகழ்காலமான 2022-ல் உயிரியல் டீச்சராக பணியாற்றி வருபவர் டேன் ஃபாரஸ்டர் (கிறிஸ் ப்ராட்) . அவருடைய மகள் மியூரி ஃபாரஸ்டர் (வோன் ஸ்ட்ராஹோவ்ஸ்கி). கால்பந்து ஆட்டத்தை டிவியில் பார்த்துக் கொண்டிருக்கும்போது திடீரென ஒரு கமாண்டோ படை விண்ணில் இருந்து இறங்கி, `இந்த உலகமே அழியப் போகிறது. நாம் அனைவரும் சேர்ந்து போராடினால்தான் 50 வருடங்களுக்கு பிறகு நடக்க இருக்கும் ஒரு பேரழிவைத் தடுக்க முடியும். அதற்கு ஒவ்வொருவருடைய உதவியும் தேவை’ என்கிறார்கள். அதற்காக அந்த ஊரில் இருக்கும் ஒவ்வொருவரும் Jumplink வழியாக எதிர்காலத்திற்கு சென்று அந்த பேரழிவைத் தடுக்க போர் செய்ய வேண்டும். அப்படி ஒரு டர்ன் நம்முடைய ஹீரோ கிறிஸ் ப்ராட்டுக்கும் வருகிறது. அவர் செய்யும் சாகசம் என்ன, எதிர்காலத்தில் இவர்கள் சண்டை போடும் `அந்த’ பேரழிவை ஏற்படுத்துவது என்ன என்பதை ஆக்‌ஷன் கலந்த சயின்ஸ் ஃபிக்‌ஷனோடு சொல்லியிருக்கிறது `The Tomorrow war’.

WoW Moments 🤩

  • பொதுவாக ஹாலிவுட்டில் இது போன்ற சயின்ஸ் ஃபிக்‌ஷன் கலந்த ஆக்‌ஷன் படங்களின் கிராஃபிக்ஸ் உலகத் தரத்தில் இருக்கும். அந்த வகையில் கிராஃபிக்ஸானது இந்தப் படத்தில் எந்தவித தொய்வும் இன்றி பிரமிக்க வைக்கிறது. எதிர்காலத்தில் உலகத்தை அழிக்க நினைக்கும் அந்த உயிரனங்களில் ஆரம்பித்து அதோடு சண்டை போடும் நடிகர்களின் நடிப்பு வரை அனைத்தும் கச்சிதமாக சிங்க் ஆகியிருக்கிறது.
  • ஹாலிவுட் படங்கள் 2 மணி நேரத்திற்கு மேல் இருப்பது அபூர்வம். அப்படி இருந்தால் அதற்கான நியாயத்தை அவர்கள் அந்தப் படத்தில் செய்திருக்க வேண்டும். அதை பிசிறு இல்லாமல் ஓரளவு ஈடு செய்திருக்கிறது படம்.
  • கதை டிமாண்ட் செய்யும் எமோஷன்களை தனது நடிப்பின் மூலம் சென்சிடிவ்வோடு ஹேண்டில் செய்திருக்கிறார் ஹீரோ கிறிஸ் ப்ராட். ஆக்‌ஷனில் ஆரம்பித்து மகள் – அப்பா எமோஷன், உலகத்தை காக்கும் பொறுப்பு வரை அந்த வேவ் லெங்க்த்தை புரிந்து கொண்டு நடித்திருக்கிறார்.
  • எதிர்காலத்தில் டேன் ஃபாரஸ்டரின் மகளாக நடித்த மியூரி ஃபாரஸ்டரின் நடிப்பு அத்தனை அழகு. கிறிஸ் ப்ராட்டை மீறி அவரை கவனிக்க வைக்கிறார். தவிர இறுதியின் கிறிஸ் ப்ராட்டின் அப்பாவாக நடித்த ஜே.கே.சிம்மன்ஸும் க்ளைமாக்ஸ் காட்சியில் அப்ளாஸ் பெறுகிறார்.

AWW Moments 😫

  • இது போன்ற சயின்ஸ் ஃபிக்‌ஷன் – ஆக்‌ஷன் ஜானர் படங்களில் லாஜிக் ஓட்டைகள் இருக்கும்தான். ஆனால், அதற்குள் எமோஷன் ரீதியாக என்னென்ன விளையாட்டுகள் செய்யலாம் என்பதற்கு உதாரணமாக பல படங்களை சொல்லலாம். அப்படி உதாரணமாக சொல்லும் அளவுக்கு இந்தப் படமானது அமையவில்லை.
  • இந்த மாதிரியான ஜானர் படங்களுக்கு சிறந்த உதாரணம், டாம் க்ரூஸ் நடிப்பில் வெளியான `Edge of tomorrow’. அதில் ஃபேன்டசி, ஆக்‌ஷன், காமெடி, பிரமிப்பு என அனைத்தும் சரியான அளவில் இருக்கும். அதே சமயம் அந்தத் தளத்திற்கு உண்டான ஒரு நம்பகத்தன்மையும் சுவாரஸ்யமும் இடம்பெற்றிருக்கும். அப்படி ஒரு முழுமையான படமாக இது அமையவில்லை.
  • Protagonist வலுவாக இருந்தது போல் Antagonist-ம் வலுவாக அமைத்திருக்கலாம். வெறுமனே ஏலியன் உயிரினங்களை வில்லத்தனமாக காட்டியிருக்காமல் அதை ஏவிவிடும் நபராக ஒருவரை வில்லனாக காட்டியிருந்தால் சுவாரஸ்யம் அடுத்த லெவலுக்கு சென்றிருக்கும்.

Verdict

எந்தவித லாஜிக்கும் எதிர்பார்க்காமல் முழுக்க ஒரு விஷுவல் விருந்துக்காகவே `The tomorrow war’ படத்தை என்ஜாய் செய்யலாம்!

Similar Movies to Watch

Edge of Tomorrow (Netflix)

Oblivion (Amazon Prime Video)

Source code (Amazon Prime Video)

Rating

Direction

3/5

Casting

3/5

Music

3/5

Screenplay

3/5

Editing

3/5

Overall Rating

3/5