• விஜய் ஆண்டனியின் `கோடியில் ஒருவன்’ – பார்க்கலாமா, வேண்டாமா?

  கோடியில் ஒருவன்
  One Line

  கலெக்டராக வேண்டும் என ஆசைப்படும் ஹீரோ எப்படி வில்லனின் வலையில் விழுகிறார்; அதையும் மீறி அவரது லட்சியம் நிறைவேறியதா என்பதே கோடியில் ஒருவன் படத்தின் ஒன்லைன்.

  Streaming Link

  Story Line

  அரசியல்வாதியின் சூழ்ச்சியால் தனது கணவரை இழந்த ஹீரோவின் அம்மா, தனது மகனை கலெக்டராக்க வேண்டும் என ஆசைப்படுகிறார். கம்பம் பக்கத்தில் சின்ன கிராமத்தில் இருந்து அம்மாவின் ஆசைக்காக சென்னைக்கு படிப்பதற்காக வரும் ஹீரோ, சந்தர்ப்ப சூழ்நிலையால் வில்லனின் கோபத்திற்கு ஆளாகிறார். வில்லனிடம் சிக்கியதால் ஹீரோவின் கலெக்டர் ஆசை நிறைவேறியதா, வில்லனிடம் ஏற்பட்ட பகை என்ன ஆனது என்பதே படத்தின் கதை.

  WoW Moments 🤩

  * படத்தின் மிகப்பெரிய ப்ளஸ் இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன். அவரது முந்தைய படமான ‘மெட்ரோ’வில் சென்னையில் அதிகரித்து வந்த செயின் பறிப்பு சம்பவங்களின் பின்னணி பற்றி விரிவான பேசியிருந்தார். அதேபோல், இந்தப் படத்திலும் கவுன்சிலர் பதவிக்காக நடக்கும் அரசியலையும், ஒரு வார்ட்டும் என்னென்ன அரசியல்கள் நடக்கும் என்பதையும், வடசென்னை ரெளடிசம் பற்றியும் விரிவாக பேசியிருக்கிறார். குறிப்பாக, படத்தின் சீரியஸ் வசனங்களும் சிரிப்பு வசனங்களும் அதற்கான வரவேற்பை பெறுகின்றன.
  * விஜய் ஆண்டனியின் நடிப்பில் இருக்கும் வழக்கமான அலட்டல் இல்லாத உடல்மொழி, வசன உச்சரிப்பு இதிலும் இருந்தாலும், மற்ற படங்களில் அவர் முயற்சி செய்யாத சில காட்சிகளை இந்தப் படத்தில் முயற்சி செய்திருக்கிறார். படத்தின் எமோஷனுக்கு அது ஓரளவுக்கு உதவவும் செய்கிறது. படத்தின் எடிட்டராகவும் விஜய் ஆண்டனி தனது சிறப்பான வேலையை செய்திருக்கிறார்.
  * மகேஷ் மேத்யூவின் சண்டைக்காட்சிகள் படத்தில் இருக்கும் கூடுதல் சிறப்பு. சண்டைக்காட்சிகளில் உதயகுமாரின் ஒளிப்பதிவும் தனித்து தெரிகிறது.
  * பொதுவாக கமர்ஷியல் படங்களில் ஹீரோவின் கேரக்டர் மட்டுமே அதிக மிகைப்படுத்தி காட்டப்படும். அந்தக் கேரக்டர் மட்டுமே மக்கள் மனசில் இருக்கும். ஆனால், இந்தப் படத்தில் ஹீரோ கேரக்டர் மட்டுமில்லாமல், குட்டி குட்டி கேரக்டர்களில் நடித்தவர்களும் மனதில் பதிகிறார்கள். டெய்லர் தாத்தா, வில்லன் கேங்கில் இருந்த ‘ஆதித்யா’ கதிர், ‘கே.ஜி.எஃப்’ வில்லன்களில் ஒருவரான ராமசந்திர ராஜு என பல கேரக்டர்கள் நம்மை ரசிக்க வைக்கிறார்கள்.

  AWW Moments 😫

  * ’இதெல்லாம் சினிமாவில்தான் நடக்கும்’ என்கிற வசனத்தை சினிமாவிலேயே பயன்படுத்தப்படும் இந்தக் காலகட்டத்திலும் யதார்த்தத்தை மீறிய காட்சிகள் படத்தில் நிறைய இருப்பது அசதியை ஏற்படுத்துகிறது.
  * படத்தின் இரண்டாம் பாதி இன்னுமே சுருக்கமாகவும் வலுவாகவும் இருந்திருக்கலாம். இரண்டு மணி நேரமானதும் படம் எப்போது முடிவும் என்கிற எண்ணம் வந்துவிடுகிறது. அதேபோல், மாற்றுதிறனாளி சிறுவனை பள்ளி ஆசிரியரே உருவகேலி செய்வதையும் தவிர்த்திருக்கலாம்.
  * வழக்கமாக தான் நடிக்கும் படங்களுக்கு தானே இசையமைக்கும் விஜய் ஆண்டனி, இந்த முறை அதை நிவாஸ் கே பிரசன்னாவுக்கு கொடுத்திருக்கிறார். சில இடங்களில் பின்னணி இசை மட்டுமே நன்றாக இருக்கிறது. பாடல்களை இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம்.

  Verdict

  பெரும்பாலான அரசியல் படங்கள் சொல்லத் தவறிய விஷயங்களை சொல்வதால் இந்த ‘கோடியில் ஒருவ’னை ஒருமுறை பார்க்கலாம்.

  Similar Movies to Watch

  • பிச்சைக்காரன்
  • சலீம்

  Rating

  Direction

  2.5/5

  Casting

  3.0/5

  Music

  2.0/5

  Screenplay

  2.5/5

  Editing

  2.5/5

  Overall Rating

  2.5/5