`முகிழ்’ வெறும் 60 நிமிட குறும்படம். 10 – 6 மணி வேலை பார்க்கும் சாதாரணமானவர் விஜய் (விஜய் சேதுபதி). மனைவி ராதிகா (ரெஜினா கசாண்ட்ரா), மகள் (காவ்யா) ஶ்ரீஜா. நாயைப் பார்த்தாலே பத்து அடி தள்ளி போகும் அளவுக்கு பயம் காவ்யாவுக்கு. ஆனால், விஜய்க்கு நாய்கள் என்றாலே உயிர். எந்தளவிற்கு என்றால் `மனிதர்களையும் நாய்களையும் கம்பேர் பண்ணாதீங்க’ என்று சொல்லும் அளவுக்கு. ஒரு நாள் விஜய் Beagle வகையைச் சேர்ந்த நாயை காவ்யாவுக்கு பரிசளிக்கிறார். ஆரம்பத்தில் அண்டத் தயங்கினாலும் போகப் போக வீட்டில் நான்காவது குடும்ப உறுப்பினராக ஆகி பின்னி பிணைந்துவிடுகிறது ஸ்கூபி. ஒரு நாள் எதிர்பாராமல் நேர்ந்த விபத்தால் ஸ்கூபி உயிரிழக்கிறது. மொத்தக் குடும்பமும் துக்கத்தில் ஆழ்கிறது. காவ்யா சோறு தண்ணியின்றி மிகுந்த துக்கத்தில் ஆழ்ந்திருக்கிறார். அப்பா விஜய் கொஞ்சம் கொஞ்சமாக வாழ்க்கையில் இழப்பு நேர்வது குறித்து எடுத்து சொல்கிறார். இதுதான் கதை.
0 Comments