அஜித் தாக்கப்பட்டாரா?! ‘பீஸ்ட்’ பார்க்கலாமா – வேண்டாமா… ப்ளஸ், மைனஸ் ரிப்போர்ட்

One Line

தீவிரவாதிகளுக்கும் ஒற்றை ஆளான வீர ராகவனுக்கும் நடக்கும் யுத்தமே பீஸ்ட்.

Streaming Link

Theater

Story Line

ரா அமைப்பை சேர்ந்தவர் வீர ராகவன் (விஜய்). அவர் தலைமை தாங்கி முடிக்க நினைக்கும் ஒரு மிஷினில் எதிர்பாராதவிதமாக ஒரு குழந்தை இறந்து போனதை அடுத்து பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகிறார். அதைத் தொடர்ந்து சென்னைக்கு வந்துவிடுகிறார். ‘பார்த்தவுடன் காதல்’ என தொன்று தொட்ட தமிழ் சினிமாவின் பாணியில் ப்ரீத்தியை (பூஜா ஹெக்டே) காதலிக்கிறார். தான் வேலை பார்க்கும் செக்யூரிட்டி ஏஜென்சியில் வீராவையும் வேலைக்கு சேர்த்துவிடுகிறார். அவர்கள் ஒப்பந்தம் செய்யவிருக்கும் Mall-ஐ தான் தீவிரவாதிகள் ஹைஜேக் செய்கிறார்கள். ஆரம்பத்தில் வீரா எந்த மிஷனை தலைமை தாங்கி ஒரு முக்கிய தீவிரவாதியை பிடித்தாரோ, அதே தீவிரவாதியை விடுதலை செய்யுமாறு ஹைஜேக் செய்த தீவிரவாதிகள் நிபந்தனை வைக்கிறார்கள். இந்த சூழ்நிலையை வீர ராகவன் எப்படி எதிர்கொள்கிறார் என்பதுதான் பீஸ்ட் படத்தின் கதை.

WoW Moments 🤩

 • படத்தின் டைட்டிலுக்கு ஏற்ப ஸ்டன்ட் காட்சிகள் அமைந்திருந்தது. திரையைக் கிழித்து வீர ராகவன் கோடாரியை பிடித்தபடி நடந்து வந்த காட்சி செம மாஸ். அதற்கு மிகப்பெரிய பக்கபலமாக உதவியது அனிருத்தின் இசை. ‘திரை தீ பிடிக்கும்’ என்ற வரிகளுக்கு தகுந்த மாதிரி திரை தீ பிடிப்பதுபோலத்தான் இருந்தது. திரையில் பீஸ்ட் விஜய் என்றால் இசையில் பீஸ்ட் அனிருத்தான்.
 • ஒரு பக்கம் இப்படி குட்டி குட்டி மாஸ் காட்சிகளைப் போலவே இன்னொரு பக்கம் காமெடி கலாய்களுக்கும் பஞ்சமில்லை. ப்ரோமோவில் ஓரளவு ‘காமெடி மாதிரி’யாக தெரிந்தவை எல்லாம் படத்தில் சிறப்பாக ஒர்க் ஆனது. குறிப்பாக விடிவி கணேஷின் கவுன்டர்கள் ரசிக்க வைத்தது. இது இல்லாமல் நமக்கு மிகப் பெரிய சர்ப்ரைஸாக அமைந்தது செல்வராகவன். 7ஜி ரெயின்போ காலனியில் கதிர் ஒரு அட்ராசிட்டி செய்வாரே, அதே போல இவரது பன்ச்களுக்கும் ஒன் லைனர்களுக்கும் நடிப்புக்கும் திரையரங்கம் அதிர்ந்தது.
 • DRK கிரணின் ஆர்ட் ஒர்க் மிகப் பெரியது. ஒரு பக்காவான Mall எப்படி இருக்குமோ அதை அப்படியே கண் முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார். தவிர மற்ற இடங்களில் பயன்படுத்தப்பட்ட ஆர்ட் ஒர்க்கும் சிறப்பு. மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம் சேர்த்திருந்தது. ஒரு பக்காவான ஹைஜேக் ஆக்‌ஷன் படத்திற்கு ஏற்ப இவரது ஒளிப்பதிவு அமைந்திருந்தது.

AWW Moments 😫

 • விஜய் எப்போது படத்தில் மினி கூப்பரை எடுத்தாரோ அப்போதே படம் படுத்துவிட்டது. மாலுக்குள் அதை ஓட்டி வித்தை காட்டி இன்டர்வல் ப்ளாக் விட்டது ஓகே என்று தோன்றினாலும், அதன் பிறகான செகண்ட் ஆஃப் ‘ஏய் டாமி எந்திரி’ என்பதுபோலத்தான் இருந்தது.
 • நம்பகத்தன்மை, லாஜிக் மீறல் போன்ற விஷயத்தை எல்லாம் மக்கள் ஓரம்கட்டிவிட்டுதான் பார்த்தார்கள். ஆனால் விஜய்யை நோக்கி பாயும் பத்தாயிரக்கணக்கான தோட்டாவில் ஒன்றுகூடவா இவரை உரசாது. சரி அது போகட்டும். இவரை ஒரு காட்சியில் கைகளை கட்டிப்போட்டு அடிக்கிறார்கள். அந்த காட்சியில் மட்டும்தான் இவர் அடி வாங்குகிறார் மற்ற எந்த சண்டை காட்சியிலும் இவர் மேல் நகம் கூட கீரவில்லை. பீஸ்ட்டா இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமா?
 • எந்த நேரத்தில் ‘ஒரு வாட்டி முடிவு பண்ணிட்டா என் பேச்சை நானே கேட்க மாட்டேன்’ என்ற போக்கிரி வசனம் வந்ததோ அதிலிருந்து படமும் பேச்சை கேட்காமல் ஜொய்ங்க்க்க் என்று ஜெட் வேகத்தில் எங்கெங்கோ பறந்து கொண்டிருந்தது. இதில் பாராட்டுக்குரிய விஷயம் என்னவென்றால் படத்தின் நீளத்தை இந்த மட்டிலாவது குறைத்தார்கள். இல்லையென்றால் படமும் நீளம், இன்டர்வலுக்கு பிறகு படம் சுமார் என்ற பேச்சும் வந்திருக்கும்.
 • மால் ஹைஜேக், மக்களைக் காப்பாற்றுதல் என்ற அளவிலே முடித்திருந்தால், படத்தின் கதையாக கன்வின்ஸ் ஆகியிருக்கலாம். அதன் பிறகு வலிந்து திணிக்கப்பட்ட ஏர்ஃபோர்ஸ் காட்சிகள் படத்துடன் ஒட்டவே இல்லை. தவிர எந்த காரணத்திற்காக ஆமை சம்பந்தப்பட்ட வசனங்களை வைத்தார்கள் என்றும் தெரியவில்லை. வெளியில் ரசிகர்களே ஜாலியாக படம் பார்க்க வந்தாலும் இவர்கள் வைக்கும் வசனத்தில் திரைக்கு வெளியிலும் தீ பிடிக்கும் போல. நண்பர் அஜித் தாக்கப்பட்டாரா?!
 • லாஜிக் மீறல்கள், பார்த்தவுடன் காதல் போன்ற விஷயங்களுக்கு மக்கள் பழகியிருந்தாலும் முஸ்லீம்கள் என்றாலே தீவிரவாதிகள் என்ற ஒன்று விஜய்காந்த் சினிமாவோடு அழிந்துவிட்டது. தற்போது இயக்குநர்கள் மிக கவனத்துடன் அரசியல் ரீதியான விஷயங்களைக் கையாள்கிறார்கள். அதுவும் இதுபோன்று பெரிய ஹீரோவை வைத்து எடுக்கப்படும் ஒரு படத்தில் முஸ்லிம்கள் என்றாலே தீவிரவாதிகள் என்று முழுக்க காட்டியிருப்பது நாட் நைஸ் நெல்சன் ப்ரோ.

Verdict

நெல்சனின் சிக்னேச்சரான நிறைய காமெடி கொஞ்சம் ஆக்‌ஷன் காட்சிகளை வைத்து தேவையில்லாத காட்சிகளையும் கதையையும் குறைத்திருந்தால் படம் நிஜமாவே பீஸ்ட் மோடுதான்.

Similar Movies to Watch

 • விஸ்வரூபம்
 • கூர்கா
 • பயணம்

Rating

Direction

2/5

Casting

3/5

Music

3/5

Screenplay

2/5

Editing

2.5/5

Overall Rating

2.5/5