ஓஹோ… ஏவாள் வர்ற வரைக்கும் ஆதாம் இதான் பண்ணாரா?

“யே… ஆதாம்னா யாரு…?” என ஜிபி.முத்து கேட்டு கமலையே ஆச்சர்யபட வைத்தார். அடுத்த வாரம், இன்னைக்கு உனக்கு ஆதாம்னா யாருன்னு காட்டாம விடமாட்டேன்னு கமல் முடிவெடுக்க, திரும்பவும் ஜிபி முத்து அந்தக் கேள்வியைக் கேட்டாரு, “ஆதாம்னா யாரு?”

மைக்கேல் ஏஞ்சலோ வரைஞ்ச இந்த ஓவியத்துல இருக்கவர் தான் ஆதாம்.

சரிடா, ஆமா, ஆதாம் யாரு?, ஏவாள் வர வரைக்கும் அவர் தனியா என்ன பண்ணிட்டிருந்தாரு?

Adam

பைபிள் பழைய ஏற்பாடு சொல்ற கதையைப் பாப்போம்.

பைபிளின்படி இந்த உலகத்தைப் படைத்த பின் அடுத்த ஆறு நாள்களுக்கு மலைகளையும், கடலையும், விலங்குகளையும், அத்தனை ஜீவராசிகளையும் படைத்துவிட்டு, பூமியிலிருந்து ஒரு பிடி மண்ணை எடுத்து தன்னுடைய சாயலிலேயே மனிதனைப் படைத்தார். அவனுக்கு உயிர் கொடுத்தார். அவனுக்காக ஏதேன் எனும் ஒரு தோட்டத்தை உருவாக்கினார். அந்த தோட்டத்தில் நல்ல பழம் கொடுக்கும் மரங்களும் இருந்தன. அதிலேயே ஜீவ மரமும், நன்மை தீமையைப் புரிய வைக்கும் மரமும் இருந்தன. அந்த மரத்தின் பழத்தை மட்டும் உண்ணக்கூடாதென கட்டளையிட்டார். அவனுக்கு ‘எபிரேய மூல மொழி’யில் மனிதன் என பொருள் தரும் ‘ஆதாம்’ என பெயரிட்டார்.

ஓ முதல் மனிதன் தான் ஆதாமா அப்படின்னு ஜி.பி முத்துவுக்கு புரியுற மாதிரி சொல்லியாச்சா. கமல் அப்போ ஒரு கேள்வி கேட்டார்ல, “ஏவாள் வர வரைக்கும் முதல் மனுஷனான ஆதாம் தனியா என்ன பண்ணிருப்பாரு, அவருக்கு எப்படி இருந்திருக்கும்?” என தத்துவமா கமல் கேட்டிருப்பாரு.

அந்தக் கேள்விக்கு தத்துவமான பதிலை எல்லாம் விடுங்க. பைபிள் என்ன சொல்லுதுன்னு பாப்போமா?

ஆதாமைப் படைத்த பிறகு, உலகத்தில் தான் படைத்த எல்லா உயிரினங்களுக்கும் பெயர் வைக்கச் சொல்லி கடவுள் சொல்றாரு. ஆதாமும் புல், பூண்டு, பறவை, செடி, கொடி எல்லாத்துக்கும் பெயர் சூட்டு விழா வெற்றிகரமா நடத்துறாரு.

எத்தனை நாளைக்குத்தான் இப்படி பேர் வைக்க முடியும், எல்லாம் வச்சு முடிச்ச பிறகு என்ன பண்றதுன்னு ஆதாமுக்கே ஒரு குழப்பம் வந்திருக்கும். அதை முன்னாடியே யோசிச்ச கடவுள்

“ஒரு ஆண் இந்த உலகத்துல தனியா இருப்பது நல்லதில்லை”னு கடவுள் முடிவு பண்றார். கமல் கேட்ட மாதிரி ஆதாமுக்கும் போர் அடிக்கும்ல.

ஒரு முடிவுக்கு வந்த கடவுள், ஆதாமை நல்லா தூங்க வைக்குறார். ஆதாமோட விலா எலும்பை எடுத்து ஒரு பெண்ணை உருவாக்குறார். ஆதாமை எழுப்பி இவள்தான் உனக்குத் துணை. இவளுக்கும் ஒரு பேர் வைனு ஆதாமுக்கு கட்டளையிடுறார். எல்லா உயிரினங்களுக்கும் தாய்னு அர்த்தம் வர மாதிரி “ஏவாள்”னு பெயர் வைக்குறார்.

Adam
Adam

ஆதாம், ஏவாளோட சேர்ந்து தன் சந்ததியை ஏதேன் தோட்டத்துல பல நூறு ஆண்டுகள் வாழ்ந்திருக்கார். அந்த ஆப்பிளைச் சாப்பிட்டு ஏதேன் தோட்டத்தை விட்டு வெளிய வந்தது, இந்த லைஃப் ரொம்ப போரடிக்குது, அந்தப் பழத்தைச் சாப்பிட்டு என்னாகுதுன்னு பாப்போம்ன்ற ஒரு கியூரியாசிட்டிலயாதான் இருக்கும்.

Also Read – முதன்முதலில் திராவிடம் பேசிய படம் – பராசக்தி படம் ஏன் ஒரு மைல்கல்?!

மிஷ்கின் ஒரு பேட்டியில் சொல்லியிருப்பார், “இந்தக் கடவுள் என் கண் முன்னாடி வந்தா, பல்லாயிரம் வருஷமா வாழுறியே உனக்கு போரடிக்கவே போரடிக்காதான்னு” ஒரே ஒரு கேள்வி தான் அவரைப் பார்த்து கேப்பேன்னு சொன்னாரு. மிஷ்கின் யோசிச்ச மாதிரி கடவுளுக்கே போரடிக்கும்னா கடவுள் படைச்ச ஆதாமுக்கும் ஏவாளுக்கும் போரடிக்காதா?

இப்படி ஆதாம் மாதிரி உங்களைத் தனியா ஒரு தீவில இறக்கிவிட்டுட்டா என்னவெல்லாம் பண்ணுவீங்கன்னு கமெண்ட்ல சொல்லுங்க.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top