எஸ்.கே.பிரபாகர்

டி.என்.பி.எஸ்.சி-யின் புதிய தலைவர்… யார் இந்த எஸ்.கே.பிரபாகர் ஐஏஎஸ்?

டி.என்.பி.எஸ்.சி-யின் புதிய தலைவர்… யார் இந்த எஸ்.கே.பிரபாகர்?தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் புதிய தலைவராக எஸ்.கே.பிரபாகரை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருக்கிறது.

டி.என்.பி.எஸ்.சி

தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. காலிப்பணி இடங்களுக்கு ஏற்ப ஆண்டுதோறும் அறிவிப்புகளை வெளியிட்டு, தேர்வுகள் மூலம் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

டி.என்.பி.எஸ்.சி-யைப் பொறுத்தவரை ஒரு தலைவர், 14 உறுப்பினர்கள் தமிழ்நாடு அரசின் பரிந்துரைப்படி ஆளுநரால் நியமிக்கப்படுகின்றனர். தற்போதைய நிலையில், 9 உறுப்பினர்களே உள்ளனர். டி.என்.பி.எஸ்.சி தலைவராக 2020 முதல் பணியாற்றிய பாலச்சந்திரன், கடந்த 2022-ம் ஆண்டு ஓய்வு பெற்றார். இதையடுத்து காலியாக இருந்த அந்த இடத்தில் பொறுப்பு தலைவராக சி.முனியநாதன் இருந்து வந்தார்.

எஸ்.கே.பிரபாகர் ஐஏஎஸ்

இந்தநிலையில், வருவாய் நிர்வாக ஆணையராக பொறுப்புவகிக்கும் எஸ்.கே.பிரபாகர் ஐஏஎஸ், டி.என்.பி.எஸ்.சி தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறது. அவர் பதவியேற்கும் நாளில் இருந்து 6 ஆண்டுகள் அல்லது 62 வயது வரை இந்தப் பொறுப்பில் அவர் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

எஸ்.கே.பிரபாகர் ஐஏஎஸ்

1966-ம் ஆண்டு விருதுநகரில் பிறந்த எஸ்.கே.பிரபாகர், டெல்லி ஐஐடியில் எம்.டெக் படித்தவர். 1989-ம் ஆண்டு தமிழ்நாடு கேடர் ஐஏஎஸ் அதிகாரியான இவர், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் செயலாளர்களுள் ஒருவராகப் பணியாற்றியவர்.
தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை, வணிகவரித் துறை, பொதுப்பணித் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் செயலராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். திமுக அரசு பதவியேற்றதும் உள்துறை செயலாளராக நியமிக்கப்பட்டார். அதன்பின்னர் வருவாய் நிர்வாக ஆணையரான இவர், இன்னும் 17 மாதங்களில் ஓய்வுபெற இருக்கும் நிலையில் டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

Also Read – NIRF Ranking 2024: நாட்டின் டாப் கல்லூரி, பல்கலை. எது… தமிழ்நாட்டுக்கு எந்த இடம்?

2 thoughts on “டி.என்.பி.எஸ்.சி-யின் புதிய தலைவர்… யார் இந்த எஸ்.கே.பிரபாகர் ஐஏஎஸ்?”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top