மக்களுக்கு வசதியான, இடையூறு இல்லாத சேவைகளை வழங்கும்பொருட்டு ஆதார் அட்டை அடிப்படையில் பல்வேறு சேவைகளைப் பெறுவதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மத்திய சாலைப்போக்குவரத்துத் துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. கீழே குறிப்பிடப்பட்டுள்ள 18 சேவைகளுக்காக மக்கள் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு நேரடியாகச் செல்லத் தேவையில்லை. இதன்மூலம், வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் மக்கள் கூட்டம் குறையும் என்றும், அந்த அலுவலகங்களின் சேவையின் தரமும் அதிகரிக்கும் என்றும் மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.
-
1 பழகுநர் உரிமம் (LLR)
-
2 ஓட்டுநர் உரிமம் புதுப்பிப்பு
வாகனத்தை இயக்கிக் காட்ட வேண்டிய தேவை இல்லாதபட்சத்தில்
-
3 டூப்ளிகேட் டிரைவிங் லைசென்ஸ்
-
4 டிரைவிங் லைசென்ஸ் மற்றும் ஆர்.சி புக்கில் முகவரி மாற்றுதல்
-
5 சர்வதேச ஓட்டுநர் உரிமத்துக்கான அனுமதி
-
6 வாகன உரிமத்தைத் திரும்ப ஒப்படைத்தல்
-
7 வாகனத்துக்குத் தற்காலிகப் பதிவெண் விண்ணப்பித்தல்
-
8 முழுமையாகக் கட்டமைக்கப்பட்ட வாகனத்துக்குப் பதிவு எண் விண்ணப்பித்தல்
-
9 வாகனத்துக்கு டூப்ளிகேட் பதிவெண் பெற விண்ணப்பித்தல்
-
10 தடையில்லாச் சான்றிதழ் பெற விண்ணப்பித்தல்
-
11 வாகன உரிமையாளரை மாற்றுவதற்காக விண்ணப்பித்தல்
-
12 வாகன ஆர்.சி புத்தகத்தில் முகவரியை மாற்ற விண்ணப்பித்தல்
-
13 அங்கீகரிக்கப்பட்ட ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியில் பயிற்சிபெற விண்ணப்பம் பதிவு செய்தல்
-
14 உயரதிகாரிகளுக்காகப் பயன்படுத்தும் வாகனத்தைப் பதிவு செய்ய விண்ணப்பித்தல்
-
15 வாகன வாடகை ஒப்பந்தத்தைப் பதிவு செய்ய விண்ணப்பித்தல்
-
16 வாகன வாடகை ஒப்பந்த காலம் முடிந்தபின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய விண்ணப்பித்தல்
-
17 வாகன உரிமத்தை மாற்றுவது குறித்து விண்ணப்பித்தல்
-
18 தூதரக அதிகாரிகளின் வாகனங்களுக்குப் புதிய பதிவெண் கோரி விண்ணப்பித்தல்
0 Comments