ஆனந்த்

`மகனுக்கு மருந்து வாங்க 300 கி.மீ பயணம் செய்த தந்தை!’ – நெகிழ வைக்கும் சம்பவம்

இந்தியாவில் கொரோனா அதிகம் பரவி வருவதால் பல மாநிலங்களிலும் கடுமையான ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இதனால், மிகவும் அரிய நோய்களைக் கொண்ட நோயாளிகள் சரியான நேரத்தில் மருந்துகளைப் பெறுவதில் சிரமத்தை அனுபவித்து வருகின்றனர். தங்களது அன்புக்கு உரியவர்களைக் காப்பாற்ற தங்களால் முடிந்த வரை அவர்களது உறவினர்கள் போராடி வருகின்றனர். அப்படியான நெகிழ வைக்கும் சம்பவம் ஒன்றுதான் கர்நாடகாவில் நடந்துள்ளது.

கர்நாடகாவைச் சேர்ந்த கட்டுமான வேலை செய்யும் தொழிலாளி ஆனந்த் என்பவர் தன்னுடைய மகனின் உயிரைக் காப்பாற்றும் பொருட்டு ஊரடங்கு நேரத்தில் மிக நீண்ட பயணம் ஒன்றை மேற்கொண்டார். தொழிலாளி பன்னூர் அருகே உள்ள தனது சொந்த கிராமமான கனிகானகோப்பல் (Ganiganakoppal) பகுதியில் இருந்து பெங்களூருக்கு சுமார் 300 கி.மீ தூரம் சைக்கிளில் பயணித்துள்ளார். கட்டுமானத் தொழிலாளியின் மகன் கடந்த பத்து ஆண்டுகளாக பெங்களூருவில் உள்ள தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் மருத்துவமனையில் நரம்பு சம்பந்தமான நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.

சிறுவனை இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மகனை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல வேண்டும் என்றும் ஒருவேளைக்கூட தவறாமல் மருத்து கொடுக்க வேண்டும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா இரண்டாவது அலை கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியதால் அம்மாநிலத்தில் கடுமையான ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இதனால், தனது மகனை ஆனந்த் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச்செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மருந்து கொடுக்க வேண்டும் என்ற அவசரத் தேவையைக் கருத்தில்கொண்டு கட்டுமானத் தொழிலாளி சுமார் 300 கி.மீ தனது சைக்கிளில் பயணிக்க முடிவு செய்துள்ளார்.

கிராமத்தில் இருந்து சைக்கிளில் மே 23-ம் தேதி பெங்களூருக்கு கிளம்பிய அவர் மே 26-ம் தேதி மருந்துகளுடன் திரும்பி வந்துள்ளார். சிறுவன் 18 வயதை அடைவதற்கு முன்பு மருந்துகள் நிறுத்தப்பட்டால் கால் மற்றும் கை வலிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்ப்பதை மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக சிறுவனின் தந்தை கூறியுள்ளார். எனவே, தனது மகன் பாதிக்கப்படாமல் இருக்க சைக்கிளில் அவர் பயணம் செய்ய வேண்டியதாக இருந்தது. அவரின் துயரமான சூழ்நிலையை அறிந்த மருத்துவர்கள் அவருக்கு பணம் தந்து உதவியதாகவும் சிறுவனின் தந்தை குறிப்பிட்டுள்ளார். ஆனந்தின் இந்த செயல் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டது. மேலும், அவருக்கு அரசாங்கம் உதவ வேண்டும் போன்ற கோரிக்கைகளையும் எழுப்பினர்.

Also Read : `குழந்தைகளுக்கு ஏன் டூ மச் வொர்க்?’ – 6 வயது சிறுமி பிரதமரிடம் புகார்; ஆளுநரின் ரெஸ்பான்ஸ்! #Viral

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top