இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்குநாள் அதிகமாகிட்டே வருது. பல மாநில அரசுகளும் இரவு நேர லாக்டௌன், வீக் எண்ட் லாக் டௌன்னு அறிவிச்சுட்டு வர்றாங்க. `மறுபடியும் முதல்ல இருந்தா..!’ அப்டினு மக்கள் மைண்ட் வாய்ஸ் வெளிய கேக்குற அளவுக்கு இருக்க… `மாஸ்க் போடுங்கப்பா!’, `சேனிடைசர் யூஸ் பண்ணுங்கப்பா’, `தடுப்பூசி போடுங்கப்பா’னு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருது. ஆனால், நம்ம மக்கள்ல சிலரோ கொரோனா பரவத் தொடங்கியதுல இருந்தே டேக் டைவர்ஷன் போட்டு வேற ரூட்டுல யோசிச்சிட்டு வர்றாங்க. அப்படி மக்கள் வித்தியாசமா யோசிச்சு பண்ண வினோதமான முயற்சிகள் பத்தி தெரிஞ்சுக்கலாம்.. வாங்க!
-
1 ஒன் பெக் பெர் டே!
டெல்லியில கொரோனா வைரஸ் அதிகளவுல பரவி வருது. இதைத் தடுக்க டெல்லி அரசு ஆறு நாள் லாக்டௌன் அறிவிச்சுருக்கு. இதனால, மதுக்கடைகளில் மதுப்பிரியர்கள் நேற்று குவிந்தனர். ஷிவ்புரி கீதா காலணி பகுதியில் மதுக்கடை வரிசையில் நின்றுகொண்டிருந்த பெண் ஒருவர் கூறியுள்ளது டாக் ஆஃப் தி சொசியல் மீடியா ஆகியுள்ளது. அப்படி என்ன சொன்னங்க தெரியுமா...?
``கொரோனாவுக்கு தடுப்பூசியெல்லாம் சரிபட்டு வராது. ஆனால், ஆல்கஹால் சரியா இருக்கும். 35 வருஷமா நான் ஆல்கஹால் குடிச்சிட்டு இருக்கேன். இதுவரைக்கும் டாக்டர்ஸ் கிட்ட போனதே இல்ல. ஒரு நாளைக்கு ஒரு பெக் குடிப்பேன். அதுவே எனக்கு மருந்தா இருக்கு” அப்டினு சொல்லிருக்காங்க. டாக்டர்ஸ் மைண்ட் வாய்ஸ் டூ ஹெர் : ஏம் ஐ ஜோக் டூ யு. -
2 கொரோனாவுக்கு ஊத்தப்பமா?
தமிழ்நாட்டுல காரைக்குடி பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சில நாள்களுக்கு முன்னாடி, ``கொரோனா வைரஸ் வராமல் தடுக்க சின்ன வெங்காய ஊத்தப்பம் சாப்பிடவும்” அப்படினு போர்டு வச்சிருந்தாங்க. என்னங்க புதுசு புதுசா கிளப்பி விடுறீங்களேனு சோசியல் மீடியாவுல இந்த போட்டோ செம வைரல்.
-
3 கோ கொரோனா கோ!
மும்பையில் நடந்த பிரார்த்தனை கூட்டத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கலந்துகொண்டார். அப்போது அவர் கொரோனா பரவலுக்கு எதிராக `கோ கொரோனா கோ!’ என முழக்கமிட்டார். அவர் இட்ட முழக்கம் பின் நாள்களில் இந்தியாவில் பல பகுதிகளிலும் கேட்க ஆரம்பித்தது. `கோ கொரோனானு சொன்னா கொரோனா பொய்டுமா பாஸ்.. அமைச்சரே இப்படி பண்ணா எப்படி?’ என சமூக வலைதளங்களில் பலரும் விமர்சிக்க ஆரம்பித்தனர்.
-
4 `இப்படி ஒரு நிகழ்ச்சியா?’
கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிரா உலகமே திணறி கொண்டிருந்த சமயம் அது. இந்தியாவுல பாதிப்பு கொஞ்சம் கொஞ்சமா அதிகமாயிட்டே இருந்துச்சு. அந்த சமயத்துல பசுவின் சிறுநீர்ல வைரஸை எதிர்ப்பதற்கான மருத்துவ குணம் இருக்குதுனு டெல்லியில கோமியம் குடிக்கும் நிகழ்ச்சி ஒன்றை அமைப்பு ஒன்று நடத்தியது. சோசியல் மீடியாவுல இந்த சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் செமயான வைரல்.
-
5 வீட்டையே பேக் பண்ண ஷாரூக்கான்!
மும்பை பகுதியில கொரோனா அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. அந்த சமயத்துலதான் பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் ஷாரூக்கான் தனது வீட்டை முழுவதுமாக பிளாஸ்டிக் கவர்கொண்டு மூடினார். இந்த புகைப்படமும் சமூக வலைதளத்துல செம வைரல். கொரோனாவுல இருந்து தப்பிக்கதான் ஷாரூக்கான் இப்படி பண்ணியிருக்கார்னு ஒருபக்கம் பேச.. மறுபக்கம், அதெல்லாம் புரளிப்பா.. `அதிகளவில் மழை பெய்றதால அவர் கவர் வச்சு மூடியிருக்காரு, வழக்கமா அவர் செய்யுறதுதான் இது’ அப்டினு செய்திகள் வெளியாச்சு.
இதே மாதிரி வித்தியாசமா நீங்க கேள்விட்ட கொரோனா தொடர்பான சம்வங்களை கமெண்ட்ல சொல்லுங்க மக்களே..!
0 Comments