இந்தியாவில் தனிநபரின் முக்கிய ஆவணங்களில் ஒன்றாகக் கருதப்படுவது பான் கார்டு எனப்படும் நிரந்தர கணக்கு எண். ஒவ்வொருவருக்கும் தனித்துவமான பத்து இலக்க எண் கொண்டது. வரி நோக்கங்களுக்கு மட்டுமின்றி அடையாள அட்டையாகவும் பல இடங்களில் பயன்படுத்தப்படுகிறது. பான் கார்டில் பெயர் மாற்றம் அல்லது திருத்தத்தை ஆன்லைன் மூலமே செய்ய முடியும். அதற்கான எளிய வழிமுறை பற்றிதான் இந்தக் கட்டுரையில் தெரிஞ்சுக்கப் போறோம்.
ஆன்லைனில் எவ்வாறு பெயர் மாற்றம் செய்வது?
NSDL இணையதளத்துக்குள் சென்று, Online PAN application – NSDL என்பதைத் தேர்வு செய்துகொள்ளுங்கள். அங்கு கேட்கப்பட்டிருக்கும் அடிப்படையான தகவல்களை நிரப்பவும். முதலில், `Application Correction’-ஐத் தேர்வு செய்து, Correction ஆப்ஷனைக் கிளிக்கவும். அங்கு கேட்கப்பட்டிருக்கும் தனி நபர் விவரங்களை எல்லாம் சரியாகக் கொடுத்துவிட்டு, கீழே இருக்கும் Captcha கோடை நிரப்பி சப்மிட் கொடுங்கள். அதன்பிறகு உங்கள் மெயிலுக்கு டோக்கன் நம்பர் என்கிற பெயரில் உங்கள் விண்ணப்பத்துக்கான எண் வரும். அதை பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள்.

அதன்பின் `Continue with PAN application form’-ஐ கிளிக் செய்து தொடரவும். அப்போது திறக்கும் புதிய பக்கத்தில் இரண்டாவது தேர்வானSubmit scanned images through e-sign’ என்பதைத் தேர்வு செய்து தொடரவும். Physical pan card required என்கிற ஆப்ஷனில் Yes பட்டனை டிக் செய்யவும். ஆதார் எண்ணின் கடைசி நான்கு இலக்க எண்களையும் பதிவு செய்யச் சொல்வார்கள். அதன் கீழே உள்ள பெயர் பகுதியில் உங்களின் பெயரை ஆதார் அட்டையில் இருக்கிறபடி டைப் செய்யவும் ஆதார் அட்டையில் உங்களின் தந்தை பெயர் இணைந்து வந்திருந்தால், அவரின் பெயரை இங்கு `First Name’ என்கிற இடத்தில் பதிவு செய்யுங்கள்.
பிறகு, பான் கார்டில் எவ்வாறு பெயர் வரவேண்டும் என்பதைப் பூர்த்தி செய்யவும். அதன்பிறகு திறக்கும் இரண்டு பக்கங்களில் கேட்கப்படும் தகவல்களைப் பூர்த்தி செய்து தொடரவும். அடையாளச் சான்று (proof of identity), பிறந்த தேதிக்கான சான்று (proof of date of birth) மற்றும் முகவரி சான்று (proof of address)-ஐ கிளிக் செய்து ஆதார் கார்டை என்ற ஆப்ஷனில் கிளிக் செய்யவும். Proof of PAN-ல் copy of PAN-ஐ தேர்வு செய்துகொள்ளவும். அதன் பின் தங்களுடைய பெயர், ஆவணங்களின் எண்ணிக்கை போன்ற தகவல்களை உள்ளீடு செய்யுங்கள். தங்களுடைய கையெழுத்து மற்றும் புகைபடங்களை 50kb-க்குள் இருக்கும்படி அப்லோட் செய்யவும். ஆவணங்களை PDF ஃபார்மேட்டில் இருக்கும்படி அப்லோட் செய்துகொள்ளவும். அதன்பின் Submit கொடுத்து, ஆதார் எண்ணின் முதல் 8 இலக்க எண்களைப் பதிவு செய்யவும். பெயர் மாற்றம்/திருத்தத்துக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கும் கட்டணத்தை இணைய வழியிலேயே செலுத்தவும்.

பின்னர், Continue with e-sign ஐ கிளிக் செய்து கிரியேட் ஆகும் செக் பாக்ஸை படித்துவிட்டு டிக் செய்து, ஆதார் நம்பரையும் பூர்த்தி செய்து send OTP கொடுத்து verify OTP-ஐ கிளிக் செய்யவும். அவ்வாறு கிளிக் செய்த பிறகு நம்முடைய சரிபார்ப்புக்காக பிடிஎப் வடிவில் பான் கார்டு காணக்கிடைக்கும். அதில், தங்களுடைய பிறந்த தேதியை பாஸ்வேர்டாக டைப் செய்து பெயர் திருத்தத்தை சரிபார்த்துக் கொள்ளலாம்.
0 Comments