ஆதார் அட்டை

ஆதார் அட்டையில் போட்டோவை மாற்ற முடியுமா.. எளிதான 7 ஸ்டெப் இதோ!

ஆதார் அட்டையில் இருக்கும் உங்களின் புகைப்படம் அடையாளம் தெரியாத அளவுக்கு இருக்கிறதா… அதை மாற்ற வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா.. ஆதார் அட்டையில் இருக்கும் போட்டோவை மாற்ற ஈஸியான வழி இருக்கிறது.

ஆதார் அட்டை

இந்திய தனிநபர் அடையாள ஆணையத்தால் வழங்கப்படும் ஆதார் அடையாள எண் இன்று மிக முக்கியமானதாக மாறியிருக்கிறது. மொபைல் சிம் கார்டு வாங்குவது முதல் வங்கிகளில் கடன் பெறுவது வரை பல்வேறு விதமான சேவைகளைப் பெறுவதற்கு ஆதார் கார்டு முக்கியமான ஆவணமாகிவிட்டது. இந்திய குடிமக்கள், அரசு சார்ந்த பல சேவைகளைப் பெறவும் ஆதார் அவசியம் என்ற நிலை உருவாகிவிட்டது.

ஆதார் அட்டை
ஆதார் அட்டை

அப்படிப்பட்ட ஆதார் அட்டைக்காக எடுக்கப்படும் புகைப்படங்கள், அவ்வளவு தெளிவானதாக இருக்காது என்ற பரவலான புகார் இருக்கிறது. ஒரு சில இடங்களில் ஆதாரில் இருக்கும் போட்டோ நம்மைப் போல் இல்லாமல், வேறு ஒருவர் போல் இருப்பதாகவும் சொல்லப்படுவதுண்டு. இதுபோன்ற பிரச்னை உங்களுக்கும் இருக்கிறதா… ஆதாரில் இருக்கும் உங்கள் போட்டோவை எளிதாக மாற்ற முடியும்…

ஆதார் போட்டோவை மாற்றுவது எப்படி?

ஆதார் இணையதளம்
ஆதார் இணையதளம்
  1. இந்திய அடையாள ஆணையத்தின் அதிகாரப்பூவ இணையதளத்தில் (https://uidai.gov.in/) இருந்து இதற்கான படிவத்தை (Aadhaar Enrolment) பதிவிறக்கம் செய்து, பிரிண்ட் எடுத்துக் கொள்ளுங்கள்.
  2. அந்தப் படிவத்தில் கேட்கப்பட்டுள்ள தகவல்களைப் பூர்த்தி செய்து, அருகில் இருக்கும் இ-சேவை மையம் அல்லது ஆதார் சேவா கேந்திராவுக்குச் சென்று அங்கிருக்கும் ஊழியரிடம் சமர்ப்பியுங்கள்.
  3. அதன்பிறகு, உங்களின் ஆதார் அட்டை தகவல்கள், பயோமெட்ரிக் விவரங்கள் சரிபார்க்கப்படும்.
  4. நீங்கள் கொடுத்திருக்கும் புதிய புகைப்படம் குறித்த தகவல்களையும் அங்கிருக்கும் ஊழியர் சரிபார்த்துக் கொள்வார்.
  5. புகைப்படத்தை மாற்றும் சேவைக்காக ரூ.25 + ஜி.எஸ்.டி வரித் தொகை சேர்த்து கட்டணமாக நீங்கள் செலுத்த வேண்டும்.
  6. உங்கள் விவரங்கள் சரிபார்த்து முடிக்கப்பட்ட பிறகு, அதை கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் ஊழியர் உங்களுக்கு அதற்கான ரசீது (URN) ஒன்றைக் கொடுப்பார்.
  7. அந்த ரசீதில் இடம்பெற்றிருக்கும் URN எண்ணைக் கொண்டு ஆதார் இணையதளத்தில் உங்களின் புகைப்படம் மாறியிருக்கிறதா என்பதை நீங்கள் சரிபார்த்துக் கொள்ளலாம்.

Also Read – `88 ஆண்டுகளுக்குப் பின் டாடா வசமாகும் ஏர் இந்தியா’ – ஒரு சாம்ராஜ்யத்தின் கதை!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top