அரசின் முக்கியமான அடையாள ஆவணமான ஆதார் அட்டையில் இருக்கும் உங்களுடைய புகைப்படம் பிடிக்கவில்லையா… அதை எப்படி மாத்துறது?
ஆதார் அட்டை
தேசிய தனித்துவ அடையாள ஆணைய அமைப்பு (Unique Identification Authority of India) இந்திய குடிமக்களுக்கு வழங்கும் முக்கியமான ஆவணம் ஆதார் அட்டை. இந்த 12 இலக்க எண், இந்தியர்கள் ஒவ்வொருவருக்கும் அத்தியாவசியமான ஆவணமாகியிருக்கிறது. அரசின் சேவைகள் தொடங்கி கல்வி, வேலைவாய்ப்பு, தனியார் சேவைகள் என பல்வேறு தேவைகளுக்கும் அடையாள ஆவணமாக ஆதாரை சமர்பிக்க வேண்டி வரும்.
அப்படியான ஆதார் அட்டையில் இருக்கும் முகவரி, மொபைல் எண், பெயரில் இருக்கும் திருத்தங்கள் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும் என்றால், UIDAI இணையதளத்துக்கு நீங்கள் செல்ல வேண்டும். இதில், மொபைல் எண் மாற்றத்துக்கு மட்டும் அருகில் இருக்கும் ஆதார் கேந்திராவுக்குச் செல்ல வேண்டும். அதேபோல், ஆதார் அட்டையில் இருக்கும் புகைப்படம் உங்களுக்கு சில நேரம் பிடிக்காமல் போகலாம். அந்த சூழலில் ஆதார் அட்டை போட்டோவை எப்படி மாற்றுவது?
ஆதார் போட்டோவை மாற்றுவது எப்படி?
- ஆதார் ஆணையத்தின் இணையதளமான https://uidai.gov.in/ – க்குச் சென்று ஆதார் விண்ணப்பப் படிவத்தைத் தரவிறக்கம் செய்யவும்.
- அதில், கேட்கப்பட்டிருக்கும் தகவல்களைப் பூர்த்தி செய்து, அருகில் இருக்கும் ஆதார் கேந்திரத்துக்கு நேரில் செல்லுங்கள்.
- உங்களின் புதிய புகைப்படம் அங்கு எடுக்கப்படும்.
- அதோடு விண்ணப்பக் கட்டணமாக ரூ.100+ஜிஎஸ்டி செலுத்த வேண்டி வரும்.
- உங்கள் விண்ணப்பம் ஏற்கப்பட்ட பிறகு, உங்களுக்கு ஒரு ரசீதுடன் Update Request Number (URN) கொடுக்கப்படும்.
- URN நம்பர் மூலம் உங்கள் ஆதார் கார்டு அப்டேட்டை நீங்கள் அறிந்துகொள்ள முடியும்.
- உங்கள் புதிய போட்டோ அப்டேட் ஆக 90 நட்கள் ஆகும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.